Social Icons

.

Tuesday, July 19, 2011

குறள்#1 வாய்மை


வணக்கம் நண்பர்களே !

அன்றும்... இன்றும்... என்றும்என முக்காலத்திற்கும் பொருந்தும் ஓர் பெரும் மறை நூலினை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் யாழ் இனிது பெருமை அடைகிறது. தமிழ் தோன்றிய காலம் முதல் இன்றளவும் பின்பற்றவல்ல அருங்குறளாம், திருக்குறள்களை இனி நீங்கள் உரைகளுடன் இங்கு காணப்பெறலாம்.



திருவள்ளுவர்

திருக்குறள் பெருமை :

>>> எழுசீரடி வெண்பா விருத்தத்தில் முப்பாலும் கலந்து, 1330 சிறு வரிகளுக்குள் அடங்கிய நன்மறை நூல் திருக்குறள்

>>> திருக்குறள் முதன்முதலாக ஓலைச்சுவடியிலிருந்து  1812 ல் அச்சு வடிவம் பெற்றது.

>>> ஓலைச்சுவடியில் அடங்கி இருந்த வாழ்க்கை தத்துவங்கள் இன்றளவும் அதன் அர்த்தம்  மாறாமல் இருப்பது வியத்தகு ஒன்றே.

>>> திருக்குறளில் மொத்தம் இடம்பெற்றுள்ள எழுத்துக்கள் 42194 ஆகும்.

>>> 133 அதிகாரங்கள் உள்ள குறளில் ஒரே ஒரு அதிகாரத்தின் பெயர் மட்டும் இரு அதிகாரங்களுக்கு பயன்படுத்தபட்டுள்ளது. அதுகுறிப்பறிதல்என்ற அதிகாரம் ஆகும்.

>>> திருக்குறளில் இடம் பெறாத உயிரெழுத்து "".

>>> இதற்கு முதன்முதலில் உரை எழுதியவர்  மணக்குடவர்  ஆவார்.

>>> இந்த மறை நூலை முதன்முதலில் மொழிபெயர்த்தவர் பெஸ்கி என்னும் வீரமாமுனிவர் ஆவார்.

>>> திருக்குறள் மொத்தம் 37 உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அவை பின் வருவன : வங்காளம், குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், கொங்கனி, மலையாளம், மராத்தி, ஒரியா, பஞ்சாபி, ராஜஸ்தானி, சமஸ்க்ரிதம், சௌராஷ்ட்ரா, தெலுங்கு, அராபிய, பர்மீயம், சீனம்,செகெஸ்லோவாக்கியா, டச், ஆங்கிலம், ஃபின்லான்டு, ஃபிஜி, ஃப்ரென்ச்ஜெர்மன், ஹங்கேரி, இத்தாலி, ஜப்பானிய, கொரியன், லத்தீன், மலாய், நெதெர்லான்ட், நார்வே, பாலிஷ்ரஷிய், சிங்களம்,ஸ்பானிஷ், ஸ்வீடிஷ், உருது போன்றவை.

தவறாமல் எங்களை பின்பற்றி ஆதரிக்கும் உங்களுக்காக நாங்கள் மேற்கொண்டுள்ள இந்த அரிய பகிர்வினை படிப்பதோடு நில்லாமல், அதன் வழியில் நடந்தால் எல்லோர் வாழ்விலும் செழிப்பும், நிறைவும் பெருகும் என்பதில் ஐயம் இல்லை.

வாருங்கள் வாழ்வை கற்போம்... குறள் வழியில்.......



இதோ முதல் குறள்#1 உங்களுக்காக :

பிரிவு : அறத்துப்பால் / துறவறவியல்
அதிகாரம் : 30 / வாய்மை 
குறள் எண் 294

குறள் :
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்

தெளிவுரை :
ஒருவன் தன் மனதிற்கு நீதியாய் பொய் பேசாமல் ஒழுகுவானாயின், அவன் உலகில் வாழும் எல்லோராலும் நல்லவன் என்று போற்றப்படுவான்.



4 comments:

  1. வாருங்கள் பொய் பேசலாம் நண்பர்களே; அந்த நொடிப் பொழுது இன்பம் உத்ரவாதம் >>>>>
    நிரந்திர இன்பம் வேண்டுமா???? மெய் மட்டும் பேசுவோம்.
    முன்பு எப்படியோ, இனிமேல் உண்மை மட்டுமே பேசுவோம் நண்பர்களே..,

    ReplyDelete
  2. நம் அனைவரும் திருக்குறளையும் திருவள்ளுவரையும் மறந்து வரும் இந்நாளில், உங்களது இந்த முயற்சி அதனை மீண்டும் வாழவைக்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை. என் ஆதரவு உங்களுக்கு என்றும் உண்டு

    ReplyDelete
  3. கீப்ஸ்மைல், மனதில் வாய்மை இருந்தால் வெளிப்படுவதும் வாய்மையாகவே அமையும்.

    ReplyDelete
  4. சிவா, எங்கள் முயற்சிக்கு உறுதுணையாக நிற்கும் உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete

 

வாசித்தவர்கள்

இன்று ...

உங்கள் ஆதரவால் ...!

tamil blogs traffic ranking