Social Icons

.

Thursday, June 30, 2011

வேண்டும் வரங்கள் …


வேண்டும் வரங்கள்நினைத்தவுடன் மழை
கோடையில் குளிர் தென்றல்
நிலவொளியில் அவள் விரல் பிடித்து நடை பயணம்

பனிமலையில் படுத்துறங்கும் பரவசம்
அதிகாலை ஆக்ஸிஜனை ஆளில்லா மலை முகட்டில் அநுபவிக்கும் அலாதி சுகம்
இயற்கையின் அருவிகளில் இவ்வுலகம் மறந்து ஸ்நானம்

பசிக்கின்ற நேரங்களில் அவள் கையால் அறுசுவை விருந்து
மீண்டும் ஒரு பள்ளிப் பருவம்
உயிர் கொடுக்கும் தோழன்

மார்பில் படுத்துறங்க ஒரு செல்ல மழலை
மாலை வேளையில் வானம் ரசித்தபடி கற்பனையில் கவிதை
இரவு நேரத்தில் என்னவளின் இனிய குரலில் இன்னிசை

அன்பான அவள் மடியில் தலை சாய்ந்து உறக்கம்
விரல்களால் தலைகோதி கண்களில் பாசமாய் அவள் பதிக்கும் முத்தம்…

அந்த நொடி ஆனந்தத்தில் நிகழ வேண்டும் என் மரணம் !!!!கேரட் சாதம்

கேரட் சாதம்கேரட்டைதாவரத் தங்கம்’ என்று கூறுவதற்குக் காரணம் என்னவென்றால் தங்கத்தை அணிவதால் மேனிக்கு மெருகு கிடைப்பது போல, கேரட்டை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்வதால், தங்கம் போன்று மேனி பளபளக்கும் என்பதே ! புற்றுநோய் வராமல் தடுப்பதில் கில்லாடியான கேரட்டில் நார்ச் சத்து அதிகம் உள்ளதால் செரிமானத்தை தூண்டி நல்ல ஜீரண சக்தியையும் அளிக்கிறது. இத்தனை சிறப்பு வாய்ந்த கேரட்டில் எளிதாக செய்யக்கூடிய ஒரு சாத வகை இதோ உங்களுக்காக :

தேவையான பொருள்கள் :

பச்சரிசி சாதம் - 2 கப் ; வேக வைத்தது
கேரட் - 1 கப் ; துருவியது
பெரிய வெங்காயம் – 1 ; நீளவாக்கில் நறுக்கியது
தக்காளி - 1 ; சன்னமாக நறுக்கியது
புதினா இலைகள் - 10
பச்சை மிளகாய் - 4 ; நீளவாக்கில் வெட்டியது
முந்திரி பருப்பு - 10 ; இதற்கு பதிலாக வேர்க்கடலையும் பயன்படுத்தலாம்
இஞ்சி பூண்டு பசை - 1 மேஜை கரண்டி
நெய் - 1 தேக்கரண்டி
சமையல் எண்ணெய் - 3 தேக்கரண்டி
லவங்கம் - 3
பட்டை - 1 இன்ச் துண்டு
ஏலக்காய் - 1
கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மல்லி தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை கொத்தமல்லி தழை - நறுக்கியது
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை :

1)  ஓரு கடாயில் எண்ணெய் மற்றும் நெய்யை சூடாக்கவும்

2)  லவங்கம், பட்டை, ஏலக்காய்யை வதக்கி முந்திரி சேர்த்து வறுக்கவும்

3)  முந்திரி சிவந்ததும், புதினா இலைகள், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்

4)  வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு பசையை ஒரு நிமிடம் வதக்கி தக்காளியை நன்றாக கலக்கவும்.

5)  இப்போது துருவிய கேரட்டை இணைத்து, உப்புடன் வதக்கவும்.

6)  மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய் தூள், கரம் மசாலா ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

7) பச்சை வாசனை போனதும், சமைத்த சாதத்தை போட்டு கிளறி, கறிவேப்பிலை கொத்தமல்லி தூவி பரிமாறவும்.


Wednesday, June 29, 2011

திரும்ப பெற முடியாதவைகள் !திரும்ப பெற முடியாதவைகள் ….
உடலை விட்ட உயிர்
பேசி விட்ட வார்த்தைகள்
கடந்து விட்ட நொடிகள்
கொடுத்து விட்ட இதயம்
இழந்து விட்ட இளமை
உண்மையான நட்பு

நட்பு என்பது நடிப்பு அல்ல,
நம் நாடி துடிப்பு
ஆதலால் நட்பு பாராட்டுவோம் !

கண்ணுறங்கு கண்மணியே !


கண்ணுறங்கு கண்மணியே !

கொஞ்சம் பால், குறைவில்லாத தூக்கம் என்ற சான்றோர் மொழி எப்போதும் பொய்த்ததில்லை.நல்ல உணவு ஒரு நல்ல தூக்கத்திற்கு வழி வகுக்கிறது என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. யாரொருவர் மாதத்திற்கு 5 முறை தூக்கத்திற்கு சிரமப்படுகிறார்களோ, அடிக்கடியோ, விரைவாகவோ தூக்கம் கலைந்து விடுகிறார்களோ, அவர்கள் தூக்கமின்மை அல்லது இன்சோம்னியா எனும் குறைபாடு உள்ளவர்கள் என நியு டெல்லியை சேர்ந்த மாக்ஸ் நிறுவனத்தின் உணவுகட்டுப்பாட்டு வட்டார தலைவர் ரித்திகா சம்மத்தர் தெரிவிக்கிறார். கட்டுப்பாடில்லாத உணவு முறை, மற்றும் ஒருவரின் மருத்துவ நிலைமை இதற்கு காரணமாக கூறப்படுகிறது.இவ்வாறான அறிகுறிகள் தென்படுகையில், உணவுமுறையில் சீர்திருத்தம் செய்யாவிடில், பின்னர் தூக்க மாத்திரையின் உதவி நாட வேண்டிவரும். சரியான உணவு என்பது காலோரிகளில் சார்ந்தது மட்டுமல்ல, அதே நேரம் எல்லா வகை உணவும் இதற்கு மருந்தாகாது. 

ஹோல் ஃபுட்ஸ் இன்டியா வின் இயக்குனரும், உணவியல் வல்லுநருமான இஷி கோஸ்லா கூற்றுப்படி,சில வகை உணவுகளில் கலந்துள்ள "ட்ரிப்டோஃபேன்" எனும் வேதியியல் பொருள், நம் மூளையில் தூக்கத்தை ஊக்குவிக்கும் "செரொடொனின் மற்றும் மெலொடொனின்" என்ற சுரப்பிகளை தூண்டுகின்றன.

போதுமான "செரொடொனின்" நமக்கு நல்ல ஆழ்ந்த உறக்கத்தை அளிக்கின்றன. பால், தயிர், வாழைபழம், செர்ரி, மீன், ஒட்ஸ், கோதுமை ப்ரெட், சாமந்தி தேனீர் மற்றும் பச்சை காய்கறிகள் போன்ற உணவுகளில், மிகுந்த அளவு "ட்ரிப்டோஃபேன்" அடங்கியுள்ளது. அதோடு, கோதுமை தவிடு, பாதாம், முந்திரி, கடற்பாசி மற்றும் வடிப்போனொதியில் மெக்னீசியமும், கோதுமைமுளை, சூரியகாந்தி எண்ணை மற்றும் விதையில் விட்டமின் B 6 உம் B 12 உம் இருப்பதால், இவைகள் தூக்கத்திற்கு உற்ற தோழனாக விளங்குகின்றன.
ஆகையால் இது போன்ற பொருள்கள் தினமும் சேர்க்கப்பட வேண்டும். அதே நேரத்தில், அதிக காலோரிகள் மற்றும் காரமான உணவு வகைகள் ஜீரணம் ஆவதில் நேரம் பிடிக்கும்.அளவுக்கு அதிகமான இனிப்பு, காஃபி மற்றும் நிகோடின் நம் மூளைக்கு ஓய்வு அளிக்காமல், மூளையை இன்னும் சுறுசுறுப்பாக்க வல்லவை ஆகும்.

நிரந்தரமான சமச்சீர் உணவு முறை, சிறிது உடற்பயிற்சியை மேற்க்கொண்டு, இரவு வெகு நேரம் விழித்திருத்தல், நொறுக்கு தீனி, சிகரெட் மற்றும் குடிபழக்கம் இவைகளை விட்டுவிட்டால் நிம்மதியான உறக்கம் உங்கள் விழிகளில்.

சிறிது ஆழமாக ஆராய்ந்தால் :

ஜெர்மனியில் மேற்கொள்ளப்பட்ட உள்நோய் மருந்தியல் ஆராய்ச்சி கட்டுரை, பச்சை காய்கறிகள், பசலைக்கீரை, பச்சை பூக்கோசு போன்றவைகளில், மன இறுக்கத்தை குறைத்து, நிம்மதியான உறக்கத்திற்கு உதவும் தன்மை உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.கோதுமைத் தவிடில், செரொடொனின் மற்றும் மெலொடொனின் மட்டுமில்லாமல், மக்னீசியம் இருப்பதால் அவை தசைகளை இறுக்கம் தளர செய்யவல்லவை ஆகும். லேசாக வாட்டி எடுத்து சிறிது தேனுடன் உட்கொண்டால் மிகவும் பயனுள்ளதாக இது அமையும்.

பால் மற்றும் வாழைபழத்தில் அதிக அளவு சுண்ணாம்பு சத்து இருப்பதால், இவை மூளையில் ட்ரிப்டொஃபேனை பயன்படுத்தி, மெலொடொனினை வேகமாக சுரக்க செய்யும். காலை உணவிற்கு சிறந்ததாக இது கருத்ப்படுகின்றது.

சரியான நேரம் :

தூக்கத்திற்கு 2 மணி நேரம் முன்னரே உணவருந்தி விட்டால்பின்னர் உடலின் ஜீரண மணடலம் எந்த வித கோளாறுமின்றி உறங்க துணையாக இருக்கும்.
தவிர்க்க வேண்டியன :மது மூளைக்கு மயக்கம் தரும் என்ற நம்பிக்கை உண்மையில்லாத ஒன்று. ஏனென்றால், இது நம் உடலின் நீரை சுண்டவைத்துவிடும். ஆகையால் மது நடு இரவில் தாகம் ஏற்படுத்தி உங்களை விழிக்க செய்துவிடும்.

பொறித்த மற்றும் காரமான உணவை இரவில் தவிர்ப்பது நன்று.  ஏனென்றால், இவை உங்கள் ஜீரணசக்தியை தூண்டிவிட்டு ஆழ்ந்த உறக்கததிற்கு தடை விதிக்கும்.அ டுத்த முறை பொறித்த கோழியை சுவைக்கும்முன், சற்று சிந்தித்து பாருங்கள்.

கஃபைன் குறைந்தது 14 மணி நேரம் செறிமானமாகாமல் இருக்கும்ஆகையால் நள்ளிரவில் காபி அருந்துவதை முற்றிலும் தவிர்க்கவும். 


Tuesday, June 28, 2011

தோழா நீ யார் - 2தோழா நீ யார் - 2சில நாட்களாக தான் எண்ணிப் பார்க்கிறேன்

சத்தம் இல்லாமல் என் எண்ணத்தில் நுழைந்துவிட்ட என் தோழா

கண்ணைத்
திறந்துகொண்டு தேடியபோது வரவில்லை
குருடியாய் துழாவியபோது கூடவே நிற்கிறாய்
தோழா நீ யார் ?

வாசல் வழியே நட்பு வருமா என பார்த்திருக்கும்போது
ஜன்னல் வழியே நுழைந்து குறும்புடன் என் தலை கலைத்த
தோழா நீ யார் ?

ஒளியோடு நான் ஜொலித்தபோது காணாமல் போய்விட்டு
வலியோடு துடிக்கும்போது மருந்து இடுகின்ற
தோழா நீ யார் ?

சில நேரம் விரும்ப வைத்தாய் , சில நேரம் வெறுக்க வைத்தாய்
பல நேரம் அழ வைத்தாய் , சில நேரம் சிரிக்க வைத்தாய்
உன் அன்பையும் , ஆத்திரமும் ஒரே முறையில் வெளிப்படுத்தும்
தோழா நீ யார் ?

தொடர்ந்து நான் பேசினாலும் கோபப்பட்டாய் , பேசாமல் விட்டாலும் வாடி நின்றாய்
அடர்ந்த உன் மன காட்டின் ரகசியம் , அறிய விடாமல் கொடுமை செய்தாய்
காரணமே தெரியாமல் என்னை அழ வைத்த
தோழா நீ யார் ?

கடிகாரத்தின் முட்கள் கூட உன்னை போல் வேகமாய் மாறுவதில்லை
பிடிவாதம் காட்டிய மறு நொடியே ,
பாசத்தில் என்னை பிணைத்துக் கொள்ளும்
தோழா நீ யார் ?

தங்கத்தில் செய்த நூல் என்றாலும் , என்
அங்கத்தில் கட்டும்போது  அது சங்கிலிதான்
ஏக்கத்தில் நீ எனக்கு சொந்தமனாலும், என்
தூக்கத்தின் ஆழம் என் இமைகளிடம் தான்

நீ என் மேல் வைத்திருக்கும் அன்பு எனக்கு சுகம் தான்
தீயை நெருங்கிடாமல் என்னை காக்கும் வரம் தான்

ஆனால் …..
ஒரு வேண்டுகோள் தோழா !
உன் நேசத்தைக் கொஞ்சம் குறைத்துக்கொள்வாயா ??

மிகவும் ஆசையாக உள்ளது
நானும் என்னை சற்று
காதலித்துக் கொள்கிறேனே …..

அனுமதிப்பாயா ?????
 

வாசித்தவர்கள்

இன்று ...

உங்கள் ஆதரவால் ...!

tamil blogs traffic ranking