Social Icons

.

Wednesday, June 1, 2011

ஆந்திரா கோழி குழம்பு


ஆந்திரா கோழி குழம்பு


ஆந்திர மாநில மக்களின் சமையலில் 'கோடி குர்ரா' என்னும் கோழி குழம்பு மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த காரசாரமான சுவைமணம் மிக்க கோழி குழம்பின் தனித்தன்மையான செய்முறை விளக்கம் தங்களுக்காக இதோ :



தேவையான பொருள்கள் :

கோழி கறி - 800 கிராம் ; நடுத்தர துண்டுகளாக வெட்டியது
சமையல் எண்ணெய் - 3 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 2 ; சன்னமாக வெட்டியது () அரைத்தது
இஞ்சி பூண்டு பசை - 3 தேக்கரண்டி
தயிர் - 1 கப் ; கடைந்தது
பழுத்த தக்காளி - 2 ; துருவியது () சன்னமாக வெட்டியது 
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மல்லி தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
சுடு தண்ணீர் - 1 கப்
சிக்கன் மசாலா () கரம் மசாலா - 1 தேக்கரண்டி
ஃப்ரெஷ் க்ரீம் () பால் - ½ கப்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - 2 கொத்து
கொத்துமல்லி தழை - கை அளவு

செய்முறை :

1) ஒரு அடி கணமான பாத்திரத்தில் எண்ணெயை சூடாக்கி, வெங்காயத்தை வதக்கவும்.

2) வெங்காயம் பொன்னிறம் ஆனதும், இஞ்சி பூண்டு பசையை வதக்கி தக்காளி சேர்க்கவும்.

3) பிறகு, கடைந்த தயிர் சேர்த்தபடி கிளறவும்.

4) 5 நிமிடம் கை விடாமல் கிளறிவிட்டு, மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், மிளகு தூள், உப்பு ஆகியவற்றை சேர்க்கவும்

5) கூடவே கோழி துண்டுகளையும் சேர்த்து 5 நிமிடங்களுக்கு நன்றாக கலக்கவும். கோழியுடன் அனைத்து மசாலாக்களும் கலந்து பொன்னிறமானதும் சுடு தண்ணீர் ஊற்றவும்.

6) நீர் கொதித்ததும் தட்டை மூடி, குறைந்து தீயில் கோழி வேகும் வரை 15 நிமிடம் சமைக்கவும்.

7) இப்பொழுது சிக்கன் மசாலா தூவி, கலந்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.

8) பிறகு, ஃப்ரெஷ் க்ரீம் () பால் ஊற்றி, 2 நிமிடம் கலந்து அடுப்பை அணைக்கவும்.

9) கறிவேப்பிலை கொத்துமல்லி தூவி அலங்கரித்து சிறிது நேரம் கழித்து சூடான சாதத்துடன் பரிமாறவும்.


1 comment:

  1. Anathu kuripukalum arumai... Asaivam saapidathavarkalai kuda sappida thoondum... Arumai sagothari...

    ReplyDelete

 

வாசித்தவர்கள்

இன்று ...

உங்கள் ஆதரவால் ...!

tamil blogs traffic ranking