Social Icons

.

Wednesday, June 1, 2011

குளு குளு கோடை !இந்த கோடையில் உங்கள் இல்லத்தை குளுமையாக வைத்திருங்கள்

கோடையில் உங்கள் வீட்டை குளுமையாக வைத்திருப்பதும், நாளுக்கு நாள் கூடிக்கொண்டிருக்கும் வெப்பத்தை கட்டுபடுத்தி மின்சார கட்டணத்தையும் கட்டுக்குள் வைப்பது என்பது மிகவும் கடினமான ஒரு சோதனையாகும். இந்த கோடையில் உங்கள் வீட்டை குளுமையாக வைத்திருக்க எளிமையான வழி வெப்பத்தை தணிப்பதே. அதற்கு உதவும் வழிமுறைகள்தான் கீழ்வருவன :

ஆலோசனைகள் :

ஏர் கண்டிசனர் : தமிழில் குளிர் சாதன பெட்டி என கூறப்படும் ஏர் கண்டிசனர் உங்கள் வீட்டின் மின்சார கட்டணத்தை நிர்ணையிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. சுத்தமாக, நன்கு பராமரித்து வைக்கப்படும் குளிர்சாதன பெட்டி சீரிய முறையில் குளுமை அளிக்கிறது என்பது கண்கூடான உண்மையாகும். அதன் ஃபில்டர்களை அடிக்கடி மாற்றவேண்டியது அவசியமான ஒன்றகும். ஒரு சுத்தமான ஃபில்டர் அமைந்துள்ள .சி உங்கள் மின்சார கட்டணத்தை 10 முதல் 15 சதவிகிதம் குறைக்க வழிவகுக்கும்.சமையல் அறையை குளுமையாக வைத்திருப்பது, சரியான வெளிச்சம், மற்றும் காற்று அமைப்பை சீர் செய்வதில் உள்ளது.

எரிபொருள் மிச்சப்படுத்த செலவில்லாத எளிய முறை, உங்கள் வீட்டின் அமைப்பை புரிந்துகொண்டு அதற்கு ஏற்றபடி, காற்று போக்குவரத்தை அமைத்துகொள்வதே ஆகும்.

பொதுவாக சீலிங் ஃபேன்கள் நம் அறையில் உள்ள காற்றை பரப்பி விட மட்டுமே பயன்படுகிறது. அறையின் காற்று சூடாக இருந்தால் சூடாகவோ, குளுமையாக இருந்தால் குளுமையாகவோ மட்டுமே அது விநியோகிக்கிறது. ஆகையால், மின் விசிறியால் தகுந்த பலன் பெற, கடிகார சுற்றின் மாற்று சுற்றாக அதை சுற்றவைப்பது ஒரு சிறந்த வழியாகும். இதன்படி,வழக்கமாக மின் ஸ்விட்ச்சை கீழ் நோக்கி அமிழ்த்துவதற்கு பதலாக, இம் முறையில்-மின் விசிறியை இயக்க மேல் நோக்கி ஸ்விட்ச் அமிழ்த்துவதுவதாக அமையும்.இல்லத்தை குளுமையாக வைத்துக்கொள்ள மற்றொரு வழி ஜன்னல்களில், சூரிய எதிர்ப்பு குளுமை கண்ணாடிகள் பொருத்துவது. ஆங்கிலத்தில் இதை "சன் ரிஃப்லெக்டிவ் க்ளாஸ்" என்று அழைப்பர்கள். பகலின் உச்சி நேரத்திலோ , ஜன்னலின் வழியே சூரிய ஒளி ஊடுருவும்போதோ திரைசீலையை இறக்கி விட்டு விடவும்.

மாடிசுவர்களையும், முற்றத்து விரிசல்களையும் நன்கு அடைத்துவிடுகையில், கோடையில் வெப்பமோ, குளிர்காலத்தில் பனியோ புகாமல் பாதுகாக்கலாம்.பகல் பொழுதிலோ, உச்சி வேளையிலோ, வெப்பநிலை அதிகம் இருப்பதால், அந்நேரம், மின் அடுப்பு, ஒவென், வாஷிங் மெஷின் போன்ற சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும். அதிகாலை அல்லது சாயங்கால நேரத்திலோ இவைகளை பயன்படுத்துவது நல்லது.

மின்சாதன பொருள்கள் பயனில் இல்லாத போதும் மின்சாரத்தை பயன்படுத்தும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். ஆகையால் டி வி மற்றும் ரேடியோ போன்ற மின் பொருள்கள் உபகயோகத்தில் இல்லாத போது, அவற்றை இணைப்பிலிருந்து நீக்கி விடுவது நல்லது.உங்கள் வாழும் அறை, படுக்கை அறை சுவரை வெள்ளை மற்றும் இதர குளிர்ச்சியான நிறத்தால் பூசுவது குளிர்ச்சிக்கு வழி வகுக்கும்.

வீட்டில் உள்ள செடிகளுக்கு காலை , மாலை, இரு நேரமும் நீரூற்றவும். வீட்டிற்குள்ளேயும் வளர்க்கும் வண்ணம் செடிகளை தேர்ந்தெடுக்கவும்.இது அதீத சூரிய வெளிச்சம் உங்கள் வீட்டிற்க்குள் வராமல் பாதுகாக்க உதவும்.எரிபொருள் தணிக்கை என்பது இன்றைய வாழ்க்கையின் நடைமுறையில் மிகவும் புகழ்பெற்றதாக ஆகிவிட்டது.இ த்துறையில் தேர்ச்சி பெற்ற வல்லுநர்களின் ஆலோசனை நம் இல்லத்தில் வீணாகும் எரிபொருள்களின் கவனத்தை நமக்கு அளிக்கும்.No comments:

Post a Comment

 

வாசித்தவர்கள்

இன்று ...

உங்கள் ஆதரவால் ...!

tamil blogs traffic ranking