Social Icons

.

Tuesday, June 28, 2011

தோழா நீ யார் - 2



தோழா நீ யார் - 2



சில நாட்களாக தான் எண்ணிப் பார்க்கிறேன்

சத்தம் இல்லாமல் என் எண்ணத்தில் நுழைந்துவிட்ட என் தோழா

கண்ணைத்
திறந்துகொண்டு தேடியபோது வரவில்லை
குருடியாய் துழாவியபோது கூடவே நிற்கிறாய்
தோழா நீ யார் ?

வாசல் வழியே நட்பு வருமா என பார்த்திருக்கும்போது
ஜன்னல் வழியே நுழைந்து குறும்புடன் என் தலை கலைத்த
தோழா நீ யார் ?

ஒளியோடு நான் ஜொலித்தபோது காணாமல் போய்விட்டு
வலியோடு துடிக்கும்போது மருந்து இடுகின்ற
தோழா நீ யார் ?

சில நேரம் விரும்ப வைத்தாய் , சில நேரம் வெறுக்க வைத்தாய்
பல நேரம் அழ வைத்தாய் , சில நேரம் சிரிக்க வைத்தாய்
உன் அன்பையும் , ஆத்திரமும் ஒரே முறையில் வெளிப்படுத்தும்
தோழா நீ யார் ?

தொடர்ந்து நான் பேசினாலும் கோபப்பட்டாய் , பேசாமல் விட்டாலும் வாடி நின்றாய்
அடர்ந்த உன் மன காட்டின் ரகசியம் , அறிய விடாமல் கொடுமை செய்தாய்
காரணமே தெரியாமல் என்னை அழ வைத்த
தோழா நீ யார் ?

கடிகாரத்தின் முட்கள் கூட உன்னை போல் வேகமாய் மாறுவதில்லை
பிடிவாதம் காட்டிய மறு நொடியே ,
பாசத்தில் என்னை பிணைத்துக் கொள்ளும்
தோழா நீ யார் ?

தங்கத்தில் செய்த நூல் என்றாலும் , என்
அங்கத்தில் கட்டும்போது  அது சங்கிலிதான்
ஏக்கத்தில் நீ எனக்கு சொந்தமனாலும், என்
தூக்கத்தின் ஆழம் என் இமைகளிடம் தான்

நீ என் மேல் வைத்திருக்கும் அன்பு எனக்கு சுகம் தான்
தீயை நெருங்கிடாமல் என்னை காக்கும் வரம் தான்

ஆனால் …..
ஒரு வேண்டுகோள் தோழா !
உன் நேசத்தைக் கொஞ்சம் குறைத்துக்கொள்வாயா ??

மிகவும் ஆசையாக உள்ளது
நானும் என்னை சற்று
காதலித்துக் கொள்கிறேனே …..

அனுமதிப்பாயா ?????




1 comment:

  1. மிக அழகான...இயல்பான...நிஜமான...உணர்வுகள்....வைரமுத்துவின்....நான் தூக்கி வளர்த்த துயரம் நீ.....என்ற வார்த்தை உணர்வுகளுக்கு....இணையான ஒரு...எழுத்து...பிரசவம்...என்..வாழ்த்துக்கள்....உங்களுக்கும்...என் .பொறாமைகள்........அந்த நண்பனுக்கும்....

    ReplyDelete

 

வாசித்தவர்கள்

இன்று ...

உங்கள் ஆதரவால் ...!

tamil blogs traffic ranking