Social Icons

.

Thursday, June 2, 2011

பச்சை பயறு கடையல்




பச்சை பயறு கடையல்

பச்சை பயறு கடையல், கொங்கு நாடு சமையலறையில் தோன்றிய அருமையான ஒரு குழம்பு வகையாகும். பச்சை பயறில் ஊட்டச்சத்து திறன் மிகுந்து காணப்படுவதால், குழந்தைகள் மற்றும் தாயாகும் பெண்களுக்கு சத்தான உணவாகும். சூடான சாதத்தில் கலந்து சுட்ட அப்பளத்துடன் ருசிக்கலாம்.



தேவையான பொருள்கள் :

பச்சை பயறு - 1 கப்
சின்ன வெங்காயம் - 10 ; உரித்தது
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
காய்ந்த பட்டை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - ¼ தேக்கரண்டி
மிளகாய் தூள் - ½ தேக்கரண்டி
சமையல் எண்ணெய் – 4 தேக்கரண்டி
கடுகு – ¼ தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
பூண்டு - 6 பல்
உப்பு - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - 2 கொத்து
கொத்தமல்லி - கை அளவு

செய்முறை :

1) பச்சை பயறை 3 நிமிடங்கள் நடுத்தர தீயில் வாசனை வரும் வரை வறுக்கவும். நன்றாக கழுவி 4-5 மணி நேரம் ஊற வைக்கவும்.

2) குக்கரில் பச்சை பயறுடன் சின்ன வெங்காயம், மஞ்சள் தூள், மிளகாய் தூள், 1 கொத்து கறிவேப்பிலை சேர்த்து, 1 கப் நீர் ஊற்றி வேக விடவும்.

3) 3-5 விசில் () பயறு ஒன்றும் பாதியுமாக குழையும் வரை சமைக்கவும்.

4) பச்சை மிளகாயை நீள வாக்கில் அரியவும். பெரிய வெங்காயம், தக்காளியை சன்னமாக அரியவும்.

5) ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி கடுகை தாளிக்கவும்

6) அவை வெடித்ததும், அரிந்த வெங்காயம், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.

6) வெங்காயம் பொன்னிறம் ஆனதும் தக்காளி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

7) பின்னர், வெந்த பச்சை பயறை இதில் கலக்கவும். ½ கப் நீர் ஊற்றி உப்பு சேர்த்து 5 நிமிடம் சமைக்கவும் ( அதற்கு மேல் வேண்டாம் )

8) சீரகம் மற்றும் பூண்டை ஒன்றும் பாதியுமாக நசுக்கி கொண்டு, பயறு கலவையில் சேர்த்து நன்கு கலக்கவும்.

9) உடனே அடுப்பை அணைத்து விடவும் ஏனென்றால் பச்சை பூண்டு குழம்பிற்கு ஒரு நறுமணம் தருவதோடு சத்து மிக்கது கூட.

10) கொத்தமல்லி தூவி அலங்கரித்து சூடான சாதத்துடன் பரிமாறவும்.


No comments:

Post a Comment

 

வாசித்தவர்கள்

இன்று ...

உங்கள் ஆதரவால் ...!

tamil blogs traffic ranking