Social Icons

.

Wednesday, June 1, 2011

மரண தண்டனை


மரண தண்டனை

தவறுகள் செய்யாமலே தண்டிக்கப்படுதல்
மரணத்தைக் காட்டிலும் கொடுமையென்று

நீ அறிவாயோ?
நான் அறிவேன்!

தப்பித்தல்களுக்கான காரணமில்லாமல்
நீண்டுக் கொண்டேயிருக்கும்
உன் மௌனம்
என்ன மரண தண்டனையா?

சொல்லிவிடு
மரணத்தைக் கூட மகிழ்வாய் தாங்கிக் கொள்வேன்
ஆனால் உன் மௌனத்தையல்ல.






8 comments:

  1. மௌனமும் ஒரு தண்டணைதான் என்பதை இப்போது அறிந்துகொண்டேன் உங்களின் கவிதை வாயிலாக!

    இனிய கவிதை !! வாழ்த்துக்கள்


    - இனியன்

    ReplyDelete
  2. கிரண், பின்னூட்டத்திற்கு நன்றி !

    ReplyDelete
  3. இனியன் வணக்கம் !

    வீணாக்கும் வார்த்தைகளை விட, அர்த்தமுள்ள மௌனமும் சிறந்தது. வருகைக்கு நன்றி !

    ReplyDelete
  4. மிகவும் நல்ல கவிதை, பாராட்டுக்கள்!

    ReplyDelete
  5. ராஜசேகர், முதற்கண் தங்கள் வருகைக்கு மிகவும் நன்றி. நல்ல கவிதை நல்ல ரசிகர்களால் தான் ரசிக்க முடியும். உங்கள் ரசனைக்கு என் நன்றிகள்.

    ReplyDelete
  6. காலம் தவறி படிகின்றேன்... என் மௌனத்தால் பல மனங்களை கொன்ற பிறகு..... வார்த்தைகள் இல்லை இவ்வரிகளை விவரிப்பதற்கு...

    ReplyDelete
  7. 23 ஆண்டுகள் மௌனங்கள் ...மரணதண்டனையைவிட...மிக கடுமையானது என்பதை ..மனிதாபிமானம் உள்ள எந்த மனிதனும்..உணர்வான்...அதை உணராதவன்?

    ReplyDelete

 

வாசித்தவர்கள்

187434

இன்று ...

உங்கள் ஆதரவால் ...!

tamil blogs traffic ranking