Social Icons

.

Thursday, June 30, 2011

வேண்டும் வரங்கள் …


வேண்டும் வரங்கள்



நினைத்தவுடன் மழை
கோடையில் குளிர் தென்றல்
நிலவொளியில் அவள் விரல் பிடித்து நடை பயணம்

பனிமலையில் படுத்துறங்கும் பரவசம்
அதிகாலை ஆக்ஸிஜனை ஆளில்லா மலை முகட்டில் அநுபவிக்கும் அலாதி சுகம்
இயற்கையின் அருவிகளில் இவ்வுலகம் மறந்து ஸ்நானம்

பசிக்கின்ற நேரங்களில் அவள் கையால் அறுசுவை விருந்து
மீண்டும் ஒரு பள்ளிப் பருவம்
உயிர் கொடுக்கும் தோழன்

மார்பில் படுத்துறங்க ஒரு செல்ல மழலை
மாலை வேளையில் வானம் ரசித்தபடி கற்பனையில் கவிதை
இரவு நேரத்தில் என்னவளின் இனிய குரலில் இன்னிசை

அன்பான அவள் மடியில் தலை சாய்ந்து உறக்கம்
விரல்களால் தலைகோதி கண்களில் பாசமாய் அவள் பதிக்கும் முத்தம்…

அந்த நொடி ஆனந்தத்தில் நிகழ வேண்டும் என் மரணம் !!!!



1 comment:

  1. உமர் கயாமின் கவிதையில் மது, பெண், மற்றும் இசை என்று வாழ்க்கையின் சுகத்தை வர்ணித்திருக்கிறார்.
    மகாகவி பாரதியாரும் காணி நிலம் வேண்டும், கேணி அருகினிலே தென்னையிளங்கீற்றும் இளநீரும் என மிகுந்த ரசனையோடு வாழ்க்கையை ரசித்திருக்கிறார். இந்த கவிஞரும், தன் காதலியின் அருகாமை வேண்டி அருமையாக இறைஞ்சியுள்ளார். சுகமான பயணத்தின் நடுவே பள்ளம் வருவதுபோல், கடைசியில் மரணத்தை தழுவ நினைப்பது வேதனை.
    வாழ்க்கை நமக்காக ஒளித்து வைத்திருக்கும் சுகங்கள் ஏராளம். வாழ்வதில் காட்டுவோம் தாராளம்.

    ReplyDelete

 

வாசித்தவர்கள்

187434

இன்று ...

உங்கள் ஆதரவால் ...!

tamil blogs traffic ranking