Social Icons

.

யாழ் யார் ?


யாழ் யார்..... ?


வணக்கம் தோழிகளே !

யாழ் இனிது என்ற எமது வலைதளத்திற்கு வருகை தந்ததற்கு நன்றிகள் பல !


இந்த இணையதளம் மகளிர் மற்றும் மழலைகளுக்காக உருவாக்கபட்டது. இதன் வெவ்வேறு பகுதிகளில் வேறுபட்ட கோணங்களில் பெண்கள், குழந்தைகள் மற்றும் இளநில கல்வி பயில்வோருக்கும் தேவையான மேல்நோக்கான கருத்துக்கள் பதிக்கபட்டுள்ளன.

எங்கள் குறிக்கோள் …..

கனவு காணுங்கள் .... கைகூடி வர .......
அறிந்துகொள்ளுங்கள் ..... ஆற்றலுற ......
உறுதி பூணுங்கள் .... உன்னதம் பெற ......

 

யாழ் இனிது, தோழிகள் சங்கமிக்கும் ஒரு இனிய இல்லம். நம் இல்லத்தில் தற்போது ஐந்து அறைகள் உள்ளன :

சுவை அரும்பு அறையில், விதவிதமான ருசிகரமான நளபாகம் கற்கலாம். உங்கள் சமையல் வித்தையயும் எங்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.

எழுத்து பிரசவம் அறையில், தங்கள் மனதில் உதிக்கும் அனைத்து உணர்ச்சிகளையும் கவிதைகளாக இறக்குமதி செய்யலாம்

எழிலகம் அறையில், நம் அழகை மேலும் மெருகூட்டி ஒயிலாக உறுதி நடை பயிலலாம்.

ஆரோக்கியம் அறையில், நமது தேக நலத்தோடு மனநலத்தயும் பேணி காப்பது எவ்வாறு என்பதை அறிந்து கொள்ளலாம்

களஞ்சியம் அறை ஒரு அறிவுப் பெட்டகம். பல தலைப்புகளில் சுவாரசியமான தகவல்களை படித்து தெரிந்து கொள்லலாம்.நமது இல்லத்தை பற்றி சுருக்கமான அழகான ஒரு கவிதை இதோ :

இது தேடலின் முற்றுபுள்ளி.....
தகவல்கள் நிறைந்த பள்ளி......

தோழிகளின் ஆலயம்....இங்கு
தேடலாம் ஆனந்தம்.......

இல்லம் முதல் இலக்கணம் வரை.....

இது மகளிர்களின் மனது.......
இனி உலகம் நமது......

முதல் வரவு நல்வரவு.....மேலும்
பெறலாம் நல்லறிவு.......

ஆகவே, தோழிகளே வாருங்கள். நம் இல்லத்தை ஆதரியுங்கள். தங்கள் கருத்துகளை பகிருங்கள். எங்களோடு எப்போதும் இணைந்து இருங்கள் !

நன்றி !!

இவண்,

உங்கள் அன்புக்குரிய,

யாழினி8 comments:

 1. யாழ் இனிது- பெயருக்கேற்ற தளம், இடுகைகள். முதற்க்கண் என் வாழ்துக்கள். அழகு தமிழில் பல தளங்கள் இருப்பினும், எவரும் முயற்ச்சிக்காத தலைப்புகளில், கற்பனை வளம்மிகுந்த புகைப்படங்களுடன் வெளியிடுவது என்பது பாராட்டுக்குரிய முயற்சியாகும். மேலும் மேலும் இப்பணி தொடர மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. Hi Yazhini, very nice blogspot, very well made and super articles. Keep it up. I Appreciate ur every Comment and I Hope somethink New Articles., from ur own creation.

  Thank You, Rajesh Kathiresan (Appavi )

  ReplyDelete
 3. @ Kiran, Rajesh1972, Rajesh K

  நாம் யார் என்பது நாம் வைத்துகொள்ளும் நண்பர்களின் பிரதிபலிப்பு. ' யாழ் யார்' என்பதை ஆவலுடன் அறிந்து கொண்ட நண்பர்களுக்கு நன்றி. இது உங்கள் ஆதரவின் ஆரம்பம் என நம்புகிறோம். தொடர்ந்து வருக !

  ReplyDelete
 4. Nice., yaalini., you very Intiative girl bcz of ur Quick Responce.,

  ReplyDelete
 5. RAJESH K, உங்கள் ஆதரவிற்கு நன்றி.

  ReplyDelete
 6. அன்பு தோழியே....
  சில நிமிடங்கள் உன்
  இணையத்தில் பிரவேசித்தேன் !

  இணைய வலையா அது ? ...இல்லை
  சிலரின் இதய வலை.
  எம் தமிழுக்கே உள்ள பாங்கு....
  அதை
  சிறப்பாய் செய்திருக்கிறது உன் பங்கு !

  எனக்கு பிடித்தது
  "எழுத்து பிரசவம்"
  தலைப்பே தனித்தன்மை
  உள்ளே சில நிமிடம் உறைந்து போனேன் நான் !
  எத்தனை இனிமை !
  சொல்லிவிட வார்த்தைகள் இல்லை
  வாழ்த்திவிடவும் வயதில்லையே !

  இருப்பினும் உன் போன்றோரின் தோழமையில்
  பெருமை கொள்கிறேன்.

  "யாழ் இனிது" என்றும் இனிதாய் விளங்கிட
  என் கடவுளை பிரார்த்திக்கிறேன் !

  ஒரு தமிழனாய்.......
  ஒரு தோழனாய் ......!

  ReplyDelete
 7. vanakam frient alaga ah iruku unga web site and more usefull ah irukau you are a creative thinker . . . very nice my friend . . .

  ReplyDelete

 

வாசித்தவர்கள்

இன்று ...

உங்கள் ஆதரவால் ...!

tamil blogs traffic ranking