Social Icons

.

Tuesday, June 28, 2011

பாவைக்காய் காரக் குழம்பு


பாவைக்காய் காரக் குழம்பு

பாவைக்காயின் நலன்கள் பல, ஆனால் அவற்றுள் ஒரு குணம் நமக்கு மிகவும் நன்மை பயப்பதாகும். பாவைக்காய் நம் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவுகளை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதால், அதற்கு 'இயற்கை இன்சுலின் நிலையம்' என்ற பட்ட பெயரும் உண்டு. நீரிழிவு நோய் உள்ளவர்கள் மட்டுமல்லாது நாம் அனைவரும் பாவைக்காயை வாரம் ஒரு முறை நம் உணவில் சேர்த்து கொள்வது ஆரோக்கியமானதாகும். இதோ தங்களுக்காக ஒரு ருசியான பாவைக்காய் காரக் குழம்பு :



தேவையான பொருள்கள் :

பாவைக்காய் - 3
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
தேங்காய் - 1 கப் ; துருவியது
சமையல் எண்ணெய் - 5 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
பூண்டு - 7 பல் ; உரித்தது
சின்ன வெங்காயம் - 10 ; உரித்தது
தக்காளி - 1 ; சன்னமாக வெட்டியது
புளி - 1/2 எலுமிச்சை அளவு ; நன்கு கரைத்தது
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மல்லி தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - 2 கொத்து
கொத்தமல்லி தழை - அலங்கரிக்க


செய்முறை :

1)  பாவைக்காயை இரண்டாக பிளந்து, விதைகளை நீக்கி விட்டு, 1/2 இன்ச் தடிமனுக்கு பிறை வடிவத்தில் வெட்டிக் கொள்ளவும்

2)  புளியை சுடு நீரில் 15 நிமிடம் ஊறவைத்து நன்கு கரைத்துக் கொள்ளவும்

3)  வெந்தய விதைகளை சூடான கடாயில் வாசனை வரும்வரை வறுத்துக் கொண்டு, ஆறிய பின் துருவிய தேங்காய் சேர்த்து விழுதாக அரைக்கவும்

4)  ஒரு பாத்திரத்தில், எண்ணெயை சூடாக்கி கடுகை வெடிக்க வைக்கவும்

5)  கறிவேப்பிலை, பூண்டு மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

6)  அவை சிவந்ததும், பாவைக்காய் மற்றும் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

7)  தக்காளி நன்கு கலந்து திரண்டு வரும்வரை சமைக்கவும்.

8)  அதற்குள் ஒரு கிண்ணத்தில் புளி சாறு, தேங்காய் விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலக்கவும்.

9)  இந்த கலவையை தாளித்தவைகளுடன் சேர்த்து, மூடி வைத்து சிறு தீயில் 15 நிமிடம் சமைக்கவும்.

10) குழம்பு நன்கு கொதித்ததும், கறிவேப்பிலை கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

No comments:

Post a Comment

 

வாசித்தவர்கள்

இன்று ...

உங்கள் ஆதரவால் ...!

tamil blogs traffic ranking