Social Icons

.

Wednesday, June 1, 2011

தோழா நீ யார் ?


தோழா நீ யார் ?


நான் ஜனிக்க உதவிய அன்பு தந்தையாய்
என்னோடு ஒட்டி பிறந்த சுட்டி தமயனாய்
என் புத்தியை கூர் தீட்டிய உயரிய ஆசானாய்
என் ஒவ்வொரு அசைவையும் ரசிக்கும் ரகசிய காதலனாய்
என் தவறுகளை கண்டித்து திருத்தும் செல்ல நன்பனாய்
இவ்வளவு வேடத்தையும் கண கச்சிதமாய் நடிக்கும் நடிகனே ….
தோழா நீ யார் ?

பாசத்தில் மிதக்க வைத்தாய்
நேசத்தில் திகைக்க வைத்தாய்
இன்பத்தை இதயத்தில் உறைய வைத்தாய்
துன்பத்தை தொலைவில் விரட்டி விட்டாய்
புகழில் கை கொடுத்தாய்
இகழில் தோள் கொடுத்தாய்

மொத்தத்தில்நீ எனக்கு உயிர் கொடுத்தாய்
தோழா நீ யார் ?

ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்
தோழனே ….
என் இதயத்தில் நிறைந்திருக்கும் உன்னிலும்
இறைவனைக் காணலாம் !!!





No comments:

Post a Comment

 

வாசித்தவர்கள்

187434

இன்று ...

உங்கள் ஆதரவால் ...!

tamil blogs traffic ranking