முரண்பாடுகள்
சேவை எனும் நம்பிக்கையில் வாக்களித்துவிட்டு....
நம் கண்ணெதிரே........
அரசாட்சி ஒரு வர்த்தகம் ஆவதை காண்பது......ஓர்
அரசியல் முரண்பாடு !
படைத்த இறைவன் ஒருவன் என்றாலும்.......
மனிதனே நாள்தோறும் புதிய கடவுள்களை
படைத்துக்கொண்டிருக்கும் விந்தையானது.....ஓர்
ஆன்மீக முரண்பாடு !
நம் இயக்கங்கள் எளிதாவதற்கு.........
வடிவமைக்கப்பட்ட காலம் போய்.....
இயந்திரங்களின் கட்டுப்பாட்டில் நாம் இயங்கும்....
கலிகாலத்தில் வாழ்ந்துக்கொண்டிருப்பது.......ஓர்
இயந்திர முரண்பாடு !
ஈன்றெடுத்த பெற்றோர்களின் பாசம் மறந்துபோவதால்......
நம் இதய கதவினை அடைத்து ........முதியோர் இல்லத்தின்
வாசல் திறந்து விடுவது.....ஓர்
ஈரமில்லா முரண்பாடு !
முல்லைக்கு தேர்கொடுத்த பாரியின் .....
கொடைத்தன்மை பற்றி கற்பிக்கும் அதே நேரத்தில்......
ஒட்டு போட்ட சீருடை அணிந்துவரும் பள்ளி
பிள்ளைக்கு மனமிறங்காத மனித மனம்.......ஓர்
உள்ளத்தின் முரண்பாடு !
அங்கங்கள் யாவும் சீராக பெற்ற பின்பும்.......
உழைக்க மறந்து கையேந்தும் பிறவிகள்......
தங்கு தடையின்றி உழைக்க எத்தனிக்கும்
மாற்று திறணாளியை கண்டு நகைப்பது.......ஓர்
ஊனத்தின் முரண்பாடு !
கொள்கையில் தாய்மொழி பற்றுக்கொண்டு.....
எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என முழங்கிடும்
சீமான்களின் வாரிசுகள்.......
முனைப்புடன் ஆங்கிலப்பள்ளியின் ஆதிக்கம் கொண்டு......
முன்னேற துடிப்பது......ஓர்
எதிர்காலத்தின் முரண்பாடு !
கல்வியின் சிறப்புணர்த்தும் நல்- ஆசிரியரின் .....
பெருமை உணராமல், செல்வத்தால் கல்வியை....
பெற நினைக்கும் மாணவன்......
துரோணரிடமே கட்டைவிரல் கேட்கும்....ஓர்
ஏகலைவன் முரண்பாடு !
காலங்கள் மாறினாலும்....நம்
பூமியின் சுற்றுப்பாதை மாறவில்லை !
தூரங்கள் சுருங்கினாலும்....நம் வாழ்க்கையின்
பயணங்கள் ஓயவில்லை !
இப்படி......
எல்லாம் தெரிந்துகொண்டோம் என்ற இறுமாப்பில்......
எதையும் புரிந்துகொள்ளாமல் நம் மனது காட்டும் ....
மாய மமதையில் ஜீவித்திருப்பது மட்டும்
முரண்பாடில்லாத ஒற்றுமை !
முரண்பாடுகள் ... ஆகா முகத்தில் அடித்தால் போல
ReplyDeleteபல செய்திகளை சொல்கிறது..
தமிழ் ஆர்வலர்கள் குழந்தைகள் - ஆங்கிலப் பள்ளிகளில்...
ஈன்றெடுத்த பெற்றோர்களை - முதியோர் இல்லத்தில்
என ஒவ்வொன்றும் அருமை..
வாழ்த்துக்கள்
http://sivaayasivaa.blogspot.com
சிவயசிவ
எல்லாம் தெரிந்துகொண்டோம் என்ற இறுமாப்பில்......
ReplyDeleteஎதையும் புரிந்துகொள்ளாமல் நம் மனது காட்டும் ....
மாய மமதையில் ஜீவித்திருப்பது மட்டும்
முரண்பாடில்லாத ஒற்றுமை !//
அழகான வரிகள்!!!!
Ellaa varigalum inmaiyanavai Yaazh isaiyai pola endralum Aazhntha karuthukkal manathai thaikkathaan seigindrana. Sagotharikku en vaazhthukkal BALA
ReplyDeleteஆமினா தங்கள் கருத்தோடு மிகவும் ஒத்து போகிறேன் நான்.
ReplyDeleteஎல்லாம் புரிந்துகொண்டோம் என்ற மாய மமதையில் நாம் எல்லோரும் வாழ்ந்து கொண்டிருப்பது மிக மிக நிஜம்.
திரு ஜானகிராமன் அவர்களே, தங்கள் வருகைக்கு நன்றி. யாழ் இனிது தளம் சமூகத்தின் பிரதிபலிப்பாக இருக்க வேண்டும் என்பதில் தொடங்கிய எங்கள் எண்ணம் இது போன்ற நிலைமைகளை முரண்பாடுகள் மூலம் எதிரொலிக்கிறது.
ReplyDeleteதங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி. தொடர்ந்து வருக. வணக்கம்.
சகோதரி ஆமீனா, ரசித்ததற்கு நன்றி.
ReplyDeleteபாலா அண்ணா, வாங்க வாங்க !
ReplyDeleteஉங்களை போன்ற சகோதரர்கள் சொல்லி கொடுத்த பாடம் இவ்வாறு கவிதையாக வடிவேடுத்திருக்கிறது.
உங்கள் ஆதரவை என்றும் கோரும் உங்கள் சகோதரி ! நன்றி.
ஆமீனா கருத்தோடு ஒத்து, யாழ் இனிதை வாழ்த்திய, பெயர் தெரியாத அன்பு நெஞ்சத்துக்கு (Anonymous ) என் நன்றிகள் !
ReplyDeletemigavum arumai vazhthukkal
ReplyDelete