Social Icons

.

Wednesday, July 6, 2011

நெஞ்செலும்பு சூப் ( எளிய செய்முறை )


நெஞ்செலும்பு சூப் ( எளிய செய்முறை )



உணவின் தொடக்கமாக அருந்தக் கூடிய சுவை மிகுந்த ஒரு செய்முறை உள்ளதென்றால் அது நெஞ்செலும்பு சூப் என கூறலாம். எளிதாக சமைக்க கூடிய இது, நம் இரத்த ஓட்டத்தை சீராக்கி, வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்த வல்லது. செட்டிநாட்டு சமையல் முறையில் இது பல்வேறு விதமாக சமைக்கப் பட்டாலும் இங்கு நான் உங்களோடு பகிர்ந்து கொள்வது எளிதான ஒன்றாகும். இம்முறை மென்காரமாக செய்யப்படுவதால், முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்புடைய சூப்பாக இது விளங்கும்.

தேவையான பொருள்கள் :

ஆட்டு நெஞ்செலும்பு துண்டுகள் - 1 கப்
பெரிய வெங்காயம் - 1 ; சதுரமாக வெட்டப்பட்டது
இஞ்சி - 1/2 இன்ச் துண்டு ; துருவியது
பூண்டு - 1 பல் ; மசித்தது
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி தழை - கையளவு ; அரிந்தது
வெங்காய தாள் (விரும்பினால் ) - 1
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

1)  ஒரு குக்கரில் நன்கு கழுவப்பட்ட சுத்தமான நெஞ்செலும்பு துண்டுகளை இட்டுக் கொள்ளுங்கள்.

2)  அதனுடன் பெரிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, வெங்காய தாள், மற்றும் சிறிதளவு உப்புடன் கொஞ்சம் கொத்தமல்லியையும் கலந்து விடுங்கள்.

3)  குக்கரை நன்கு மூடி விட்டு அதன் மீது 'விசில்' பொருத்தி மிதமான வெப்பத்தில் 5 விசில்கள் வரும் வரை சமைக்கவும்.

4)  இப்போது அடுப்பின் ஜ்வாலையை குறைத்து விட்டு மீண்டும் 10 நிமிடங்கள் அல்லது 1 விசில் வரும் வரை வேக விடவும்

5)  அடுப்பை அணைத்து விட்டு பிரஷர் முழுதும் அடங்கும் வரை காத்திருக்கவும்

6)  குக்கரை திறந்து, மெல்லிய ஜ்வாலையில் கொதிக்க விட்டு மிளகு தூள் மற்றும் மீதமுள்ள கொத்தமல்லியை சேர்க்கவும்
  
7)  இரண்டு நிமிடங்கள் நன்கு கலக்கி, அடுப்பிலிருந்து இறக்கி, சூடாக ஏதேனும் கொரிப்பானுடன் பரிமாறவும்.

No comments:

Post a Comment

 

வாசித்தவர்கள்

இன்று ...

உங்கள் ஆதரவால் ...!

tamil blogs traffic ranking