டைனாசர் -உணவு பழக்கங்கள்
65 கோடி ஆண்டுகளுக்கு முன்னமே டைனாசர் இனம் அழிந்துவிட்டதால், விஞ்ஞானிகளால் அவைகளின் உணவு பழக்கங்களை சரியாக கணிக்க இயலவில்லை என்றே சொல்லவேண்டும். ஆயினும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் டைனாசர்களின் உயிர் எச்ச சுவடுகளை கொண்டு சில உணவு தடயங்களை யூகித்து இருக்கிறார்கள்.
உணவு பழக்கங்களின் அடிப்படையில், டைனாசர்கள் பெரும்பாலும் தாவர உண்ணிகள் மற்றும் மாமிச உண்ணிகள் என்று இரு வகையாக பிரிக்கப்படுகின்றன. பல டைனாசர்கள் தாவர உண்ணிகளாக இருந்தாலும், அவற்றின் உணவில் புற்கள் இருக்கவில்லை ( ஏனென்றால் அந்த காலகட்டத்தில் புற்கள் தோன்றி இருக்கவில்லை). பாறைகளில் படிந்து காணப்பட்ட டைனாசர்களின் எலும்பு மிச்சங்களிலும், அதன் துவாரங்களிலும் காணப்பட்ட தாவர எச்சங்கள் "மெசொஸாயிக் காலம்" என்று அழைக்கப்பட்ட அந்த காலத்தில் ஆயிரக்கணக்கான செடிகள் இருந்து வந்தன என்பதற்கு சாட்சியாக திகழ்கின்றன.
செம்மரம், பைன் மரம் போன்ற மரங்களின் இலைகள் உண்ணத்தகுந்ததாகவே இருந்தன எனவும் நிரூபணம் ஆகிறது. பின்பு வந்த காலத்தில் பழங்கள் தோன்றியதால் ( பழங்கள் எப்போது தோன்ற தொடங்கின என்பது சரியாக அறிந்துகொள்ள முடியாவிட்டாலும் ) டைனாசர்கள் பழங்களும் உண்டன என்பதும் அவைகளின் எச்சங்கள் மீது நடந்த ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
"பிளாட்டியோசாரஸ்" வகை தாவர உண்ணிகள் 8 மீட்டர் அளவுக்கு வளர்ந்தன, குறிப்பாக அவைகளின் கழுத்து உயரத்தில் உள்ள இலைகளை பறித்து உண்ண ஏதுவாக நீண்டு காணப்பட்டன. கட்டைவிரலில் உள்ள கொக்கிகளின் உதவியோடு, கிளைகளை வளைத்து அவற்றில் உள்ள சுவையான இலைகளை பறித்து உண்ண இவ்வகை டைனாசர்கள் பழகி கொண்டன. "ஸ்டீகோசாரஸ்" மற்றும் "ட்ரைசெராடாப்" டைனாசர்களும் தாவர உண்ணிகளாகவே திகழ்ந்தன.
மாமிச உண்ணிகள் பெரும்பாலும் மற்ற டைனாசர்கள் அல்லது அக்காலத்தில் வாழ்ந்துவந்த உயிரினங்களை உண்டு வாழ்ந்தன. பல்லிகள், ஆமைகள், மற்றும் ஆதி காலத்தில் தோன்றிய பாலூட்டிகளும் மாமிச உண்ணி டைனாசர்களுக்கு இரையாகின. இறந்து போன விலங்குகளையும் அவைகள் உண்டு வந்தன. சில டைனாசர்கள் குழுவோடும், பல டைனாசர்கள் தனியாகவும் வேட்டையாடின என்று சான்றுகள் தெரிவிக்கின்றன. "டைரானோசாரஸ் ரெக்ஸ்" மற்றும் "வெலாசிராப்டர்" நாம் நன்கு அறிந்த சில மாமிச உண்ணி டைனாசர்களாகும்.
விஞ்ஞானிகள் சில டைனாசர்கள் தாவரம் மாமிசம் இரண்டும் உண்டு வாழ்ந்தன என்று கண்டறிந்திருக்கிறார்கள். இவைகளை "சர்வ பட்சிணிகள்" என்று அழைப்போமாக.
"ஸ்டீகோசாரஸ்" பற்றி அறிந்துக்கொள்வோம் :
தன் முதுகுப்பகுதியில் இரண்டு நீண்ட அழகான எலும்பு பட்டைகள் கொண்டவை "ஸ்டீகோசாரஸ்”. இலை போன்ற வடிவம் கொண்ட இந்த பட்டைகள் 3 அடி நீளம் கொண்டவையாக இருந்தன. ஒரு குளிர்சாதனம் போல் இப்பட்டைகள் இயங்கின என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.
அந்த பட்டைகளுடன் அவைகள் சூரிய ஒளியை நோக்கி எழுந்து நிற்கையில், பட்டைகள் வெப்பம் பெற்று, அவ்வெப்பம் அதன் உடல் முழுதும் பரவி வெப்பம் ஏற்படுத்தும். அதே சமயம் சூரிய ஒளி பட்டையின் மீது படாதவண்ணம் நிற்கும் பட்சத்தில் உடல் குளுமைக்கு உதவின.
"ஸ்டீகோசாரஸ்" வகை டைனாசர்கள் விரைவாக இயங்க முடியாவிட்டாலும், அவற்றின் வாலில் உள்ள சிறிய முட்களை கொண்டு மற்ற டைனாசரஸ்களிடமிருந்து தன்னை அவைகள் பாதுகாத்து கொண்டன.
"ப்ராக்கியொசாரஸ்"-பற்றி தெரிந்து கொள்வோம் :
பூமிக்கண்டத்தின் மிக பெரிய டைனாசரானது இதுதான். இதன் கழுத்து மட்டுமே 30 அடி நீளம் கொண்டது (கிட்டதட்ட 2 மாடி கட்டடம் அளவு). நீண்ட முன்னங்கால்களும் கொண்டவை "ப்ராக்கியொசாரஸ்". ஒட்டகசிவிங்கி போல் தோற்றம் அளிக்கும் முன்னங்கால்களை கொண்ட இவ்வகை டைனாசர்கள் எடையில் 6 யானைகளுக்கு சமமாக இருந்தன. இவைகள் தாவர உண்ணிகளாக இருந்ததால், மற்ற உயிரினங்கள் இவைகளுக்கு இரையாகாமல் தப்பித்தன எனவும் வேடிக்கையாக கூறலாம். தன்னை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இவைகள் தினமும் சுமார் 440 பவுண்டு தாவரங்களை உண்டன என்று ஆராய்ச்சியாளர்கள் அனுமானிக்கிறார்கள். அதன் நீளமான கழுத்து மர உச்சியிலிருக்கும் இலைகளை வளைத்து உண்ண ஏதுவாக அமைந்திருந்தன.
"டைரானோசாரஸ் ரெக்ஸ்" பற்றி அறிந்துக்கொள்வோம் :
நாம் எல்லோரும் டி.வி, புத்தகங்கள் மற்றும் திரைப்படங்களில் இருந்து அறிந்து கொண்ட கொடிய டைனாசர் இது தான். "டைரானோசாரஸ் ரெக்ஸ்" என்பதற்கு பொருள் "கொடிய ஆட்சியாளர்களின் அரசன்". பின்னர் கண்டறியப்பட்ட மேலும் கொடிய டைனாசர்களை பற்றி அறிந்துக்கொள்ளும்போது, இந்த பெயர் சற்று நியாயமில்லாத ஒன்று என்றும் நாம் அறியலாம். மாமிசபட்சிணிகளிலேயே மிக கொடியதாக கருதப்படுவது "ஸ்பைனோசாரஸ்" வகை ஆகும்.
ஆயினும் "டைரானோசாரஸ் ரெக்ஸ்" மற்றும் "ஸ்பைனோசாரஸ்" வாழ்ந்த காலகட்டம் பல கோடி நூற்றண்டுகளால் வேறுபட்டவை என தெரிந்துகொள்ளுங்கள். "டைரானோசாரஸ் ரெக்ஸ்" அமெரிக்கா, ஆசியா மற்றும் கனடாவிலும், "ஸ்பைனோசாரஸ்" வட அப்பிரிக்காவிலும் வாழ்ந்து வந்தன. இவ்வாறு இவை இரண்டும் பூகோளத்தாலும் பிரிந்து வாழ்ந்ததால், ஒன்றை ஒன்று சந்தித்ததும் இல்லை என்பதே உண்மையாகும். "டைரானோசாரஸ் ரெக்ஸ்" 45 அடி நீளமாகவும், "ஸ்பைனோசாரஸ்" 60 அடி நீளமாகவும் (2 பள்ளி பேருந்து அளவு ) இருந்தன. ஆக, அச்சம் ஏற்படுத்தும் "டீ-ரெக்ஸ்" டைனாசர்களில் பெரியதாக இருந்திருக்கவில்லை. ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு வகையாக அவைகள் மற்ற உயிரினங்களை வேட்டையாடி வந்தன என்பது தான் மெய்யாகும்.
டைனாசர் 1 - முதல் பகுதிக்கு செல்ல இங்கே சொடுக்கவும் !
டைனாசர் 3 - மூன்றாம் பகுதிக்கு செல்ல இங்கே சொடுக்கவும் !
டைனாசர் 4 - நான்காம் பகுதிக்கு செல்ல இங்கே சொடுக்கவும் !
டைனாசர் 5 - ஐந்தாம் பகுதிக்கு செல்ல இங்கே சொடுக்கவும் !
டைனாசர் 6 - இறுதி பகுதிக்கு செல்ல இங்கே சொடுக்கவும் !
டைனாசர் 3 - மூன்றாம் பகுதிக்கு செல்ல இங்கே சொடுக்கவும் !
டைனாசர் 4 - நான்காம் பகுதிக்கு செல்ல இங்கே சொடுக்கவும் !
டைனாசர் 5 - ஐந்தாம் பகுதிக்கு செல்ல இங்கே சொடுக்கவும் !
டைனாசர் 6 - இறுதி பகுதிக்கு செல்ல இங்கே சொடுக்கவும் !
இந்த பதிவை பார்த்தா ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் வந்து உங்கே கிட்டே டினோசர் பத்தி டவுட் கேட்டு போவர் போல. ஹா ஹா.
ReplyDeleteதகவல் சேர்க்க நல்ல உழைப்பு . அடுத்த பகுதியை ஆவலா எதிர் பார்கிறேன்.
நன்றி .. சிவா
பல அரிய தகவல்கள்
ReplyDeleteஜுராசிக் பார்க் படம் எடுத்தவருக்கு நீங்க என்ன உறவு? :)
சிவா, ஆமினா, எங்கள் உழைப்பிற்கு ஊக்கம் அளிக்கும் உங்கள் நல்லுள்ளதிற்கு டைனாசரின் நன்றி.
ReplyDeleteஆம், தன் திரைப்படத்தின் மூலம் எங்களை இத்தொடரை எழுத தூண்டிய "ஸ்டீவன் ஸ்பில்பெர்க்" உறவில் ஒரு குரு ஸ்தானத்தை பெறுகிறார்.
மிக்க நன்றி Anonymous
ReplyDelete