Social Icons

.

Saturday, July 30, 2011

மழலை


மழலை




வளர்ந்த பெரியோர்கள் உச்சரிக்கும் அன்பிலா.......
வாக்கினை விடவும்,
எத்தனை அர்த்தம் சின்னஞ்சிறு மழலை
பேசும் உளறல்களில் !

போதை கொண்டு தள்ளாடும் வாலிபர்களின்.....
கால்களை விடவும்,
பதியாமல் நடைப்பழகும் பச்சிளங்குழந்தையின்
கால்களில் எத்தனை உறுதி !

மனதிற்குள் கபடம் வைத்து பார்வையில்.....
பகட்டு பாசத்தை பரிமாறும்
புனிதர்களை விடவும்,
வாய் பேச பழகாத காலத்திலும்
பளிச்சென வீசும் பார்வைகளிலே
எத்தனை வெளிச்சம் !

வித விதமான ஆடைகளில் தங்கள்......
உள் அழுக்கை மறைக்கும்
மனிதர்களை விடவும்,
ஆடையே அணியாத அப்பாவி பிஞ்சுகளின்
அம்மணத்தில் தான்
எத்தனை தூய்மை !

வெளி தோற்றத்தினை கொண்டு......
ஆட்களை எடைபோடும்
அதிமேதாவிகளை விடவும்,
வேற்றுமுகம் பார்க்க தெரியாத
வெள்ளை மனதுகளில்
எத்தனை தெளிவு !

எளிதான உறவுகளை சிக்கலாக்கி .....
எதற்கும் உதவாத வைராக்கியம் கொள்ளும்
ஏளன பிறவிகளை விடவும்,
எதற்கெடுத்தாலும் மோகனமாய் புன்னகைக்கும்
வெகுளித்தனத்தில் த்தனை ஓளி !

மனிதன் வளர்ந்தபின் இத்தனையும் இழப்பான்....
என்று தெரிந்திருந்தால், ஒரு வேளை
கடவுளும் சிந்தித்திருப்பானோ ?

மழலை உலகின் மகிழ்ச்சி யாவும்......
இவ்விதம் தொலைத்து விடுவோம்
என்று அறிந்திருந்தால்,
ஒரு வேளை மனிதனும் சிந்தித்திருப்பானோ ?

இப்போதும் தாமதமில்லை
இனி வாழ்வில் பேதமுமில்லை......

மேனியை மனிதனாக.....
மனதை மழலையாகவே வைத்திருந்தால்...!







9 comments:

  1. If we are all child there is no problems,,,, siva

    ReplyDelete
  2. வணக்கம் சகோ,
    மழலையின் உணர்வுகளைத் தாங்கி வந்த கவிதை, இறுதி வரிகளில்,
    //இப்போதும் தாமதமில்லை
    இனி வாழ்வில் பேதமுமில்லை......
    மேனியை மனிதனாக.....
    மனதை மழலையாகவே வைத்திருந்தால்...!//

    எனும் தத்துவத்தை, தத்ரூபமாக விளக்கி நிற்கிறது.

    ReplyDelete
  3. அருமையான வரிகள் குறிப்பாக
    மனிதன் வளர்ந்தபின் இத்தனையும் இழப்பான்....
    என்று தெரிந்திருந்தால், ஒரு வேளை
    கடவுளும் சிந்தித்திருப்பானோ ?

    மழலை உலகின் மகிழ்ச்சி யாவும்......
    இவ்விதம் தொலைத்து விடுவோம்
    என்று அறிந்திருந்தால்,
    ஒரு வேளை மனிதனும் சிந்தித்திருப்பானோ ?

    குழந்தையாகவே இருதிருந்தால் எவ்வ்லாவு நன்றாக இருந்திருக்கும்

    ReplyDelete
  4. \\\இப்போதும் தாமதமில்லை
    இனி வாழ்வில் பேதமுமில்லை......
    மேனியை மனிதனாக.....
    மனதை மழலையாகவே வைத்திருந்தால்...!\\\
    இதை அனைவரும் உணர்ந்தால் உலகில் துன்பமில்லை

    ReplyDelete
  5. சிவா, உண்மை தான் சிவா ! நன்றி.

    ReplyDelete
  6. நிரூபன், தத்துவங்கள் எல்லாம் கற்றுக் கொள்ளவே கூறப் பட்டிருக்கின்றன. கற்றுக் கொள்வோம் ! முன்னேறுவோம் !!

    உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி !

    ReplyDelete
  7. Farhan, நாம் எவ்வளவு வளர்ந்து இருந்தாலும் நமக்குள் எஞ்சி இருக்கும் குழந்தைத்தனம் தான் நம்மை மனிதன் ஆக்கி வைத்து இருக்கிறது.

    இதை கண்டு கொண்டு பாராட்டிய உங்களுக்கு நன்றி !

    ReplyDelete
  8. இதழ் குவித்து மழலை பேசும் உனக்கு
    மழலைமொட்டு பிள்ளைகளின் மனதைத்தொட்டு மகிழ்வோடு மணம்பரப்பும் மலர்களாகும்
    குழலினிது யாழினிது ஆனால் மிகஇனிது
    ....நீ பராமரிக்கும் வலை இனிது ... என்றும் அன்புடன் வீகே tamilldhesamchat.com

    ReplyDelete
  9. இப்போதும் தாமதமில்லை
    இனி வாழ்வில் பேதமுமில்லை......
    மேனியை மனிதனாக.....
    மனதை மழலையாகவே வைத்திருந்தால்...!

    Excellent..

    ReplyDelete

 

வாசித்தவர்கள்

இன்று ...

உங்கள் ஆதரவால் ...!

tamil blogs traffic ranking