Social Icons

.

Tuesday, July 5, 2011

அறிமுகம்



நம் எல்லோர் மனதின் ஆழத்திலும் வெளிவரதுடிக்கும் வார்த்தை வடிவங்கள் ஒளிந்திருக்கின்றன. சமூகத்தை சாடவோ, காதலியை நாடவோ, அறியா விடைகளை தேடவோ, நாம் எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் கவிதைகளை நேசிக்கிறோம்.

வாருங்கள்....உங்களுக்குள் பொதிந்திருக்கும் அந்த நண்பனை ஊருக்கு அறிமுகப்படுத்துவோம்.


நம்மில் ஒளிந்திருக்கும் கவிஞனை உலகிற்கு காட்டும் சிந்தனையை எனக்குள் வித்திட்ட என் அன்பு கணவருக்கு என் இதயம் கனிந்த நன்றி


வாரம் ஒரு தலைப்பு, நீங்கள் சிந்தித்து இங்கு பதிக்க இரண்டு வரிகள், நம் கூட்டு முயற்சியால் கவிதை புனைவோம் !

இந்த வார தலைப்பு

"அறிமுகம்"

உங்களுக்காக யாழ் இனிதின் தொடக்க வரிகள் இதோ......

"எனக்கு தெரிந்த என் வாழ்க்கையின் சிறந்த அறிமுகம்.......
என் தாயின் கருவிலுருந்து...உயிர்பெற்ற எனக்கு அவள் அளித்த முதல் முத்தம். ! "


அடுத்து யார் ..... ???????

4 comments:

  1. சபாஷ் ! இதோ என் வரிகள் .....


    "நான் சிரிக்கும்போது......
    தலையை வகிடெடுத்து வாரும்போது.....
    புதிய உடைகள் அணிந்து நிற்கும்போதெல்லாம்.......
    இல்லாமல்........

    மனம் வெதும்பி நான் அழும்போது மட்டும்
    என்னை எனக்கே அறிமுகப்படுத்தும்....என் வீட்டின்
    நிலைக்கண்ணாடி.....!!"

    ReplyDelete
  2. என்னையே பிடிக்க வைத்த என்னவளின் முதல் பார்வை, எனக்கு சிறந்த அறிமுகம்...
    என்னுடைய நிலைக்கண்ணாடியை அழவைத்த அந்த தருணம், உனக்கு சிறந்த அறிமுகம் !

    ReplyDelete
  3. முகத்தோடு முகத்திற்கு ஏற்படும் பரிச்சயத்திற்கு பெயர் அறிமுகம் என்றால்,
    உன் மனதோடு என் மனதிற்கு ஏற்பட்ட பரிச்சயத்திற்கு என்ன பெயரோ ??

    ReplyDelete
  4. இதோ கவிதை பூமாலை தொடுத்துவிட்டோம் !

    "அறிமுகம்"


    தொடங்கி வைத்த “நான்” ,

    எனக்கு தெரிந்த என் வாழ்க்கையின் சிறந்த அறிமுகம்.......
    என் தாயின் கருவிலுருந்து...
    உயிர்பெற்ற எனக்கு அவள் அளித்த முதல் முத்தம்.

    என்னைத் தொடர்ந்த “தரங்கிணி”

    நான் சிரிக்கும்போது......
    தலையை வகிடெடுத்து வாரும்போது.....
    புதிய உடைகள் அணிந்து நிற்கும்போதெல்லாம்.......
    இல்லாமல்........

    மனம் வெதும்பி நான் அழும்போது மட்டும்
    என்னை எனக்கே அறிமுகப்படுத்தும்....என் வீட்டின்
    நிலைக்கண்ணாடி.....

    எங்களோடு இணைந்த “சிவபாலன்”

    என்னையே பிடிக்க வைத்த என்னவளின் முதல் பார்வை, எனக்கு சிறந்த அறிமுகம்...
    என்னுடைய நிலைக்கண்ணாடியை அழவைத்த அந்த தருணம், உனக்கு சிறந்த அறிமுகம் !

    முடித்து வைத்த “முத்து”

    முகத்தோடு முகத்திற்கு ஏற்படும் பரிச்சயத்திற்கு பெயர் அறிமுகம் என்றால்,
    உன் மனதோடு என் மனதிற்கு ஏற்பட்ட பரிச்சயத்திற்கு என்ன பெயரோ ??


    பொதுவாக சங்கிலிகள் கட்டிபோடும் என்றாலும்.......
    இந்த அறிமுக சங்கிலி நம்மை போல் உள்ளவர்களுக்கு அன்பு பிணைப்பு.

    தொடங்கிவைத்த நான் ஒரு சரடாக இருக்க.....
    தரங்கிணி எனும் ஒரு சாமந்திப்பூ தன் மணத்தை வீச......
    சிவபாலன் எனும் தாமரை உள்ளமும் இந்த
    நாறுடன் தன்னை இணைத்துக்கொள்ள.......
    பூமாலையின் பதக்கமாக .....
    முத்து முடிச்சு போட்டு......

    அருமையான ஒரு கவிதை மாலை யாழ் இனிதிற்கு சூட்டி இருக்கிறோம்.....

    நன்றி எனும் சிறு வார்த்தை போதாது, ஆகையால் யாழ் இனிதின் மிகப் பணிவான வணக்கங்களை சமர்ப்பித்துக்கொள்கிறோம்.

    ReplyDelete

 

வாசித்தவர்கள்

இன்று ...

உங்கள் ஆதரவால் ...!

tamil blogs traffic ranking