Social Icons

.

Thursday, July 21, 2011

வெந்தய கீரை உருளை



வெந்தய கீரை உருளை

வெந்தய கீரை உருளை, புதிதாக பறிக்கப்பட்ட வெந்தய கீரை இலைகள் மற்றும் வேக வைத்த உருளை கிழங்கு கொண்டு தயார் செய்யப்படும் ஒரு ருசியான துணைக்கறி ஆகும்.

இந்த செய்முறையில் வெந்தய கீரைக்கு பதிலாக பசலை கீரை அல்லது சோயக் கீரை உபயோகிக்கலாம்.

அதே போல மாமிச பிரியர்கள், உருளைக்கு பதிலாக வேக வைத்த ஆட்டுக்கறி துண்டுகளை உபயோகிக்கலாம். மற்ற செய்முறை எல்லாம் ஒன்று தான்.




தேவையான பொருள்கள் :

கீரை - 2 கப்

உருளை கிழங்கு - 2

பெரிய வெங்காயம் - 1

இஞ்சி பூண்டு பசை - 1 மேஜைக்கரண்டி

கடுகு - 1/4 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

மல்லி தூள் - 1 தேக்கரண்டி

சமையல் எண்ணை - 4 மேஜைக்கரண்டி

எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழை - அலங்கரிக்க


செய்முறை :

1.  கீரை இலைகளை நன்கு கழுவி, வடிகட்டி, அவற்றை சன்னமாக நறுக்கி கொள்ளவும்.

2.  உருளைக் கிழங்கை வேக வைத்து, தோலுரித்து 1 அளவுள்ள சதுர பாகங்களாக வெட்டி கொள்ளவும்.

3.  பெரிய வெங்காயத்தை தோலுரித்து சன்னமாக நறுக்கி கொள்ளவும்.

4.  ஒரு வாணலியில் எண்ணை சேர்த்து கடுகை தாளிக்கவும்

5.  அவை வெடித்தவுடன், வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

6.  பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அவை பொன்னிறமானதும், சன்னமாக நறுக்கிய கீரை மற்றும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து கலக்கவும் .

7.  நன்கு கலந்து அரை கப் நீர் ஊற்றி, அடுப்பை சிறு தணலில் வைத்து 10 நிமிடம் சமைக்கவும்

8. அவை ஒரு தொக்கு பதத்திற்கு வந்தவுடன், உருளை சேர்த்து பாத்திரத்தை மூடி 3 நிமிடம் சமைக்கவும்.

9.  அடுப்பை அணைத்து, எலுமிச்சை சாறு கலந்து, கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும்

10. நன்கு கலந்து, 10 நிமிடம் பொறுத்து, மசாலா எல்லாம் உருளை கிழங்கில் இறங்கியவுடன், சாதம் புலாவ் மற்றும் ரொட்டியுடன்  பரிமாறவும்


                      

பசலை கீரை





சோயக் கீரை



8 comments:

  1. அன்புடையீர் தங்கள் வலைப்பக்கத்தை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.

    http://blogintamil.blogspot.com/2011/07/blog-post_21.html

    நன்றி

    ReplyDelete
  2. டிப்ரண்டா இருக்கும்!!!

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. ஆஹா..
    சமையல்..
    செய்துபார்க்க சொல்லலாம்..

    ReplyDelete
  4. நன்றி யாழினி தோழி, நான் ருசித்தும் பார்த்துவிட்டேன். நன்றாக இருந்தது

    ReplyDelete
  5. முனைவர் அவர்களே, வணக்கம். தங்கள் வலைப்பூவில் எங்களை ஒரு அங்கத்தினராக இணைத்து கொண்டதற்கு என் உள்ளம் கனிந்த நன்றிகள்.

    இது போன்ற நற்பணிகளில் தாங்கள் முனைந்து ஈடுபடுவதால் தான் தங்களை முனைவர் என்கிறார்களோ ?

    ReplyDelete
  6. ஆமினா, இது ஒரு வித்தியாசமான செய்முறை தான். கண்டிப்பாக செய்து பாருங்கள் , நன்றி.

    ReplyDelete
  7. !* வேடந்தாங்கல் - கருன் *!, செய்து பாத்தாச்சா, நல்லா இருந்திச்சா ? அதையும் கொஞ்சம் சொல்லுங்க.

    ReplyDelete
  8. அஹா கீப்ஸ்மைல் சகோ, பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

    ReplyDelete

 

வாசித்தவர்கள்

இன்று ...

உங்கள் ஆதரவால் ...!

tamil blogs traffic ranking