மிளகு காளான்
Pepper Mushroom Fry
Pepper Mushroom Fry
குடமிளகாய் மற்றும் காளான் கொண்டு செய்யப்படும் இந்த எளிய உணவு வகை ரொட்டி மற்றும் புலவுடன் சேர்ந்தால் நாவூறும் சுவை தரும்.
வேண்டிய பொருள்கள் :
நன்கு கழுவி, நறுக்கப்பட்ட காளான்கள் - 12 - 15
வெட்டப்பட்ட குடமிளகாய் - 2-3
நறுக்கிய பெரிய வெங்காயம் - 2
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
சமையல் எண்ணை - 1/4 கப்
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மல்லி தூள் - 1 தேக்கரண்டி
சன்னமாக பொடிக்கப்பட்ட மிளகு - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
உணவை அலங்கரிக்க சிறிது கொத்தமல்லி
செய்முறை :
1) ஒரு நான்ஸ்டிக் வாணலியில் 2-3 தேக்கரண்டி எண்ணையை ஊற்றி, அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு, பொன் நிறமாகும் வரை வறுக்கவும்.
2) பின்பு அத்துடன் இஞ்சி பூண்டு விழுதை கலந்து நன்கு வதக்கவும்.
3) அதன் பச்சை வாடை நீங்கிய பின், காளான் மற்றும் குடமிளகாய் சேர்க்கவும்.
4) இந்த கலவை நன்கு வதங்கிய பின், உப்பு,மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் மல்லி தூளை சேர்க்கவும்.
5) பின்பு ,கை அளவு தண்ணீரை தெளித்து, பாத்திரத்தை மூடிவிட்டு 5 நிமிடங்கள் மெல்லிய தீயில் சமைக்கவும்.
6) இப்போது, மூடியை திறந்து, தண்ணீர் முழுவதும் வற்றும் வரை சமைக்கவும்.
7) இதனுடன், மிளகு தூளை சேர்த்து, சிறிது சிறிதாக மீதமுள்ள எண்ணையை ஊற்றி மெல்லிய தீயில் நன்கு வறுக்கவும்.
8) பொன் நிறமாக வறுபட்டவுடன், இதை கொத்தமல்லி தூவி அலங்கரிக்க பட்ட சாதத்துடன் சூடாக பரிமாறவும்.
எனக்கு மிகவும் பிடித்தமான டிஸ்; காளான் குருமா வைக்கதெரியும், காளான் பொரியல் இந்த வாரம் செய்கிறேன். நன்றி யாழினி
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி...
ReplyDelete@ Keepsmile, சமையலில் உங்களுக்கு ஆர்வம் உள்ளதை கண்டு மகிழ்ச்சி சகோதரா ! உணவினை மட்டும் அல்லாது நல் உறவினையும் சேர்த்து சமைப்போம். நன்றி
ReplyDelete@ # கவிதை வீதி # சௌந்தர், உணவு தயாரிப்புகளை தவறாமல் வந்து பார்த்து பின்னூட்டமிடும் உங்களுக்கு மனமார்ந்த நன்றி !