மனிதா, நீ எப்போது மனிதனாவாய் ??
நேசமும் இப்போது நன்கொடை ஆகிவிட்டது.......
தேவைப்படுபவர்களை விட கொடுப்பவர்கள் குறைந்துவிட்டதால்.
ஊற்றெடுக்கும் அன்பிலும் ஊழல் கலந்துவிட்டது.......
இதயத்தில் ரத்தம் பாய்ச்சும் நாளங்களில் ஈரம் உலர்ந்துவிட்டதால்.
மனிதப்பிறப்புகள் இன்று அறுவை சிகிச்சையில் நிகழ்வதால்.......
மனதில் வக்கிரங்கள் சுகப்பிரசவம் ஆகின்றன.
காயப்படுத்தி பார்க்கும் எண்ணம் சிலரில் மதிப்பு கூடிவிட்டதால்.........
மனித நேயத்தின் விலை இன்று மலிந்துவிட்டது.
கேட்கும் திறன் கொண்ட காதுகளும்......
நோக்கும் வல்லமை படைத்த கண்களும்......
தங்கள் பணியை செவ்வனே செய்கையில்.......
அன்பு செலுத்தும் இதயம் மட்டும் குருதி பாய்ச்சும் ஒரு
கருவியாக சுருங்கிவிட்டதேன் ?????
உன் மனதை.....
சக மனிதனிடம் நேசம் வளர்க்கும் ஆயுதமாய்.....
வக்கிரங்களை வடிகட்டும் ஒரு கேடையமாய்.......
பார்க்க இயலாத மனிதா.......
நீ எப்போது மனிதனாவாய் ??????
சகோ/அருமையான கவிதை...
ReplyDeleteரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.....
மனிதர்கள் மனிதர்களாக இல்லைத்தான் சகோ...?
நானும் இது தொடர்பான பதிவை செய்ய நினைத்திருந்தேன்....
உன்க கவிதை அசத்தல் தான் ....
வாழ்த்துக்கள்...
can you come my said?
மனிதனால் முடியாத ஒன்று மனிதனாக வாழ்வதுதானே!!
ReplyDeletemanathai thodum varigal..
ReplyDeleteமனிதப்பிறப்புகள் இன்று அறுவை சிகிச்சையில் நிகழ்வதால்.......
ReplyDeleteமனதில் வக்கிரங்கள் சுகப்பிரசவம் ஆகின்றன.
காயப்படுத்தி பார்க்கும் எண்ணம் சிலரில் மதிப்பு கூடிவிட்டதால்.........
மனித நேயத்தின் விலை இன்று மலிந்துவிட்டது
ஆழ்ந்த சிந்தனையைத் தூண்டும் வரிகள்!!
தன்னையும் பிறர் போல் நினைத்து அன்பு காட்ட மனிதன் ஆரம்பித்துவிட்டாலே போதும்; மனிதன் ஆகிவிடுவான்
ReplyDelete//மனித நேயத்தின் விலை இன்று மலிந்துவிட்டது.//
ReplyDeleteகலக்கல்
//மனித நேயத்தின் விலை இன்று மலிந்துவிட்டது.//
ReplyDeleteகலக்கல்
விடிவெள்ளி சகோ, உங்கள் பாசத்தால் நெகிழ்ந்தேன். நன்றி !
ReplyDeleteஉங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. நானும் உங்களை ஒத்த சிந்தனை உடையதால் மகிழ்கிறேன். நித்தம் உங்கள் கருத்தை எதிர்பார்பேன்.
முனைவரே, வணக்கம். தாங்கள் கூறியது போலே மனிதன் சிந்திக்க தொடங்கி விட்டால் மனிதன் ஆவது சுலபம். பாராட்டிற்கு நன்றி.
ReplyDeleteவேடந்தாங்கல் கருன், உங்கள் ஆதரவிற்கு நன்றி !
ReplyDeleteமாஸ் ஸ இருக்கு .....பிக் கொன்ஜம் ப்ருடலா இருக்கு..... உனர்ச்சி வெள்ளம் பொங்குகிறது . இதை படிக்கும் பொழுது ரொஜா படத்தில் "தமிழா தமிழா நாளை நம் நாளே " என்ற பாடல் நினைவுக்கு வருகிறது.
ReplyDeleteகீப்-ஸ்மைல், ஆம் உண்மையான கருத்து தான். ஆதை தான் நாங்கள் வலியுறுத்த முயற்சித்துள்ளோம். அறிவுரைக்கு நன்றி.
ReplyDeleteNiroo, உங்கள் ஆதரவில் மேலும் கலக்குவோம். தொடர்ந்து வருக.
ReplyDeleteமிகவும் அருமையான கவிதை
ReplyDeleteஉன் மனதை.....
சக மனிதனிடம் நேசம் வளர்க்கும் ஆயுதமாய்.....
வக்கிரங்களை வடிகட்டும் ஒரு கேடையமாய்.......
பார்க்க இயலாத மனிதா.
......
நீ எப்போது மனிதனாவாய் ??????
இதை தங்களிடமும் மற்றவர்களிடமும் எதிர்நோக்கும் .... உங்கள் நண்பன் ..வீகே .. நன்றி
மிக அருமையான கவிதை.... சொற்களை கையாண்ட விதம் அருமை....
ReplyDelete