Social Icons

.

Monday, July 18, 2011

கல்வி - செல்வமா ?? ஓர் ஆய்வு ( பகுதி 2 )


கல்வி - செல்வமா ?? ஓர் ஆய்வு ( பகுதி 2 )
Is our Educaation in the right track ? - Part 2

இந்த கட்டுரையின் முதல் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும் ! 

உலகின் மூத்த பல்கலைக்கழகங்கள் :
எகிப்து, கைரோவில் உள்ள "அல்-அசர்" பல்கலைக்கழகம் தான் உலகின் மிக தொன்மையான பல்கலைகழகமாக கருதப்படுகின்றது. கைரோ நகரம் உருவாகிய காலக்கட்டதிலேயே ( கி.பி 969  ) இந்த பல்கலைக்கழகமும் நிறுவப்பட்டது என வரலாறு உரைக்கிறது. இதன் முதல் வகுப்பறை கி.பி. 975   யில் தொடங்கினாலும், பெரும்பாலும் இந்த பல்கலைக்கழகம் மத மையமாகவும், வழிபாட்டுத்தலமாகவும் தான் அறியப்பட்டது.

இது தவிர்த்து, மொரக்கோ நாட்டின் ஃபெஸ் பகுதியில் உள்ள "காராவியின் மசூதி"யும் உலகின் பழமையான பல்கலைக்கழகமாக  அறியப்படுகிறது.

ஐரோப்பாவின் முதல் பல்கலைக்கழகம் 1088 ஆண்டில் வட இத்தாலியிலுள்ள போலோங்கா நகரில் நிறுவப்பட்டது.

புகழ்பெற்ற "ஹார்வார்டு" பல்கலைக்கழகம் தான் அமெரிக்கா வின் மூத்த கல்வி நிறுவனமாகும். 1636 ஆண்டு கேம்பிரிட்ஜ் நகரில் இது தொடங்கிய சற்று பின்னர்தான் , முதல் ஆங்கில குடிருப்பு அவ்விடத்தில் உருவானது. அக்குடியிருப்பு "மஸாசுசெட் பே காலனி" என்று பெயர் பெற்றது.

இந்தியவை சேர்ந்த "நாலந்தா" மற்றும் "தக்க்ஷஷிலா" பல்கலைகழகங்கள் "அல்-அசர்" காட்டிலும் மூத்தது என கூறப்பட்டாலும், அதற்கு தகுந்த சான்றுகள் இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை.

அல்-அசர்,
உலகின் மூத்த பல்கலைக் கழகங்களில் ஒன்று



கல்வி பாடதிட்டங்கள் :

இந்தியாவில் பல்வேறு பாடதிட்டங்கள் கல்விமுறையை ஆக்ரமித்திருந்தாலும், அவற்றில் முக்கியமானவைகளை தங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம்.

மாண்டிசோரி கல்வி முறை :
இன்று வேகமாக பரவி வரும் இம்முறை, 0 யில் இருந்து 6 வயது வரை உள்ள குழந்தைகளின் வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறது.

மாநில அரசு கல்விதிட்டம் :
பெருவாரியான குழந்தைகள் இதில் தான் சேர்க்கப்படுகிறார்கள். மாநிலத்தில் உள்ள அரசாங்கம் தங்கள் மாநிலத்தின் கலாச்சார தேவைக்கேற்ப வடிவமைத்த ஒரு கல்வி முறை இதில் பின்பற்றப்படுகிறது.

CBSE  என்று அழைக்கப்படும் மத்திய மேல்நிலை கல்விக்குழுமம்.

ICSE என கூறப்படும் இந்திய தேர்வு சான்றிதழ் அமைப்பு.

NIOS என்று அழைக்கப்படும் இந்திய திறந்தவெளி கல்வி நிறுவன அமைப்பு.

அயல்நாட்டை சார்ந்துள்ள கேம்பிரிட்ஜ் தேர்வு போன்ற கல்வி முறைகள்

மாநில அரசாலோ, தனியார் மேற்ப்பார்வையிலோ இயங்கி வரும் "மத்ராசா" என அழைக்கப்படும் இஸ்லாமிய மதபள்ளிகள்.

வுட்ஸ்டாக் பள்ளி, ஆரோவில், பாட்ட பவன் அல்லது ஆனந்த மார்க குருகுலம் போன்ற இதர தனியார் கல்வி நிறுவங்கள்.

இவை தவிர அகில இந்திய கல்வித்திட்டம் மற்றும் நிர்வாக அமைப்பு பல்கலைக்கழகம் (NEUPA) ஆசிரியர் பயிற்சிக்கான தேசிய அமைப்பு ( NCTE ) போன்ற அமைப்புகள் இந்திய கல்விமுறையையும் ஆசிரியர் வளத்தையும் செவ்வனே நிர்வகிக்கின்றன.



கல்வியின் நடைமுறை சாத்தியங்கள் :

கல்வியானது, எந்த ஒரு வளரும் நாட்டு மக்களின் திறனை மேம்படுத்தி, அந்நாட்டின் மனித வளம் முன்னேற்றம் பெறும் வகையில் அமைய வேண்டும். அவ்வாறான நிலைமைக்கு, அந்நாட்டில் பயிற்றுவிக்கப்படும் கல்வி இணக்கமாகவும், நடைமுறை சாத்தியங்கள் நிறைந்ததாகவும் இருக்க வேண்டியது மிகவும் அவசியமானது. அவ்விதம் அமைந்தால்தான் காலத்தின் மாறுதலுக்கேற்ப அதன் பலன்களும் கிட்டும்.

நமக்கு ஒப்புதல் இல்லாவிட்டாலும், காலத்தின் தேவைகளும், வாழ்வியல் திறமைகளும் வேகமாக மாறிக்கொண்டு வருகின்றன என்பதை மறுக்க இயலாது. அடிப்படியான பொது கல்விமுறை ஓரளவுக்கு மாறா தன்மை பெற்றிருந்தாலும், வேலைவாய்ப்பு தகுதிகள் உண்டாக்கும் கல்வியில் மாற்றங்கள் அத்தியாவசியம் ஆகிறது. ஆகையால் தொழில்முறைக் கல்வியை சார்ந்த திட்டங்களின் மீது பரிசீலிப்பது இன்றியமையாதது ஆகும்.

இன்றைய சூழலில், உயர்நிலை கல்வி முடித்து வரும் இளைஞனுக்கு மேற்கொண்டு என்ன என்று சிந்திப்பது தான் பெரும் கேள்விக்குறியாக உள்ளது.

இது போன்ற இக்கட்டுகளுக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், கல்வி முறை சற்று நடைமுறையானதாகவும், தொழில்முறை சார்ந்ததாகவும் அமைந்தால்,மாணவர்கள் தங்கள் எதிர்கால பாதையை சீராக திட்டமிட உதவும்.

கல்வி காட்டும் வாழ்க்கை பாதைகள் :

ஒரு நல்ல வேலைவாய்ப்பு அல்லது தொழிலை தேர்ந்தெடுப்பது, பொருளாதாரதிலும், சமுதாயத்திலும் ஸ்திரத்தன்மை பெற உதவும் மிகவும் முக்கியமான முடிவாகும். முதல் கோணல் முற்றிலும் கோணல் என்ற சான்றோர் மொழிக்கேற்ப நம் எதிர்காலத்தை வளமாக்கும் விதமாக நம் வாழ்க்கையை தேர்ந்தெடுத்தல் நாம் எவ்வாறு வாழப்போகிறோம்  என்பதற்கு சான்றாகும்.

இந்தியாவில் தற்பொழுது ஏராளமான கல்வி வாய்ப்புகள் உள்ளன. அவற்றில் பொறியியல், மருத்துவம், மக்கள் தொடர்பு, வான் போக்குவரத்து, விமானப்படை, விளம்பரத்துறை, திரைப்படத்துறை, சுற்றுலாத்துறை, அயல்நாட்டு மொழி, நிழற்படக்கலை, ஹோட்டல் நிர்வாகம், இந்திய ராணுவம், கப்பற்படை, கால் சென்டர், பத்திரிகைத்துறை, அரசுப்பணித்துறை, காப்பீட்டுத்துறை, வங்கி வணிகம், பால் பண்ணை தொழில், மருத்துவ எழுத்தியல் துறை, BP, வானொலி மற்றும் தொலைக்காட்சி அறிவிப்பாளர்கள், கால்நடை மருத்துவம், சட்டத்துறை, இசைத்துறை, வேளாண்மை, விஞ்ஞானம், கணக்கியல் துறை போன்றவை பயனுள்ளவைகளாக கருதப்படுகின்றன.

வரும் நாட்களில், உங்கள் திறமைக்கேற் தொழிலை தேர்ந்தெடுக்க உதவும் கட்டுரைகளும் வெளியிட்டு, உங்கள் வருங்காலத்தை செம்மையாக்க வழிகாட்டும் விதமாக பல தொழில் வாய்ப்புகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வோம்.

காத்திருங்கள் நண்பர்களே.......





2 comments:

 

வாசித்தவர்கள்

இன்று ...

உங்கள் ஆதரவால் ...!

tamil blogs traffic ranking