Social Icons

.

Thursday, July 7, 2011

எந்த கடையிலே நீ அரிசி வாங்குறே ??



உடல் இளைக்க உண்மையான வழிகள்



எடைக்குறைப்பு பற்றிய தவறான நம்பிக்கைகள் :

இக்கட்டுரை எடை குறைப்பு பற்றிய தவறான நம்பிக்கைகளை உங்கள் மனதில் இருந்து அகற்ற உதவும். சமச்சீர் உணவு மற்றும் சரியான உடற்பயிற்சிகள் மேற்கொண்டு எவ்வாறு உடல் பருமனை குறைக்கலாம் என்பதையும் இக்கட்டுரையில் காணப்பெறலாம். உடல் இளைக்க எவ்வித மூட நம்பிக்கைகளை தவிர்க்கலாம் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

அறைகுறை அறிவும், ஆர்வக்கோளாரும் நம் எடையை குறைப்பதை விட நமக்கு கேடும் விளைவிக்கவல்லது என்பதை நினைவில் கொள்ளவும்ஆகையால் அங்கும் இங்கும் திரட்டிய தகவல்களை கொண்டு உடல் எடையை குறைக்க முற்படுவது என்பது புத்திசாலித்தனமாகாது.



கீழ்காணும் நம்பிக்கைகளும், நிஜங்களும் உங்கள் கவனத்திற்கு :


நம்பிக்கை #1 : உணவை குறைத்தால் எடையும் குறையும்

நிஜம் : காலை உணவு மற்றும் மதிய உணவை தவிர்ப்பதால், உடல் எடை கூடும் என்பது ஆராய்ச்சிகள் கூறும் உண்மை. உணவை தவிர்ப்பதால், அடுத்த முறை உண்ணும் போது அதிக அளவு உண்ண நேர்வதால், உடல் எடை குறைவதற்கு பதிலாக கூடிவிடும் வாய்ப்பு அதிகம். இதற்கு பதிலாக, சிறிய இடைவேளைகளில் அளவான உணவு உட்கொண்டால் பசி அளவை கட்டுப்பாட்டில் வைக்கலாம்.



நம்பிக்கை # 2 : கொழுப்புசத்து குறைந்தால் "காலோரிகளும்" குறையும்.

நிஜம் : கொழுப்புசத்து நீங்கிய அல்லது குறைந்த உணவுகளில், காலோரிகள் குறைவு என்பது உண்மை என்றாலும், அவை காலோரிகள் அற்றவை என்பது உண்மை ஆகாது. இவ்வகை உணவுப்பொருள்கள் பதப்படுத்தபடுவதால், இவற்றில் அதிக காலோரிகள் இருக்கும் சாத்தியம் அதிகம். கொழுப்புச்சத்து நீக்கிய உணவு என்று விளம்பரப்படுத்தபடுவதால், மக்கள் இவைகளை விரும்புகிறார்கள், ஆனால் இவற்றின் மூலம் உடல் எடை கூடும் வாய்ப்பு உள்ளது.



நம்பிக்கை # 3 : இரவில் தாமதமாக உணவருந்தினால் எடை கூடும்

நிஜம் : எடை கூடுதல் என்பது உணவின் அளவு மற்றும் உங்கள் உடலின் செயல்முறைகளை சார்ந்ததேயன்றி, எப்போது உண்கிறீர்கள் என்பதை பொருத்து அல்ல. எந்த நேரத்தில் உணவருந்தினாலும், உணவிலுள்ள உபரி காலோரிகளை உடல், கொழுப்பாக சேர்த்துவைத்துக் கொள்கிறது என்பதே உண்மை. ஆயினும் உறங்க செல்வதற்கு சிறிது முன்னம் உணவருந்தினால், அந்த உணவு ஜீரணமாக உடல் ஏதுவாகாது என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்.



நம்பிக்கை # 4 : சைவ உணவே ஆரோக்கியமானது

நிஜம் : ஆராய்ச்சிகள் சைவ உணவில் அசைவ உணவை காட்டிலும் குறைந்த கொழுப்புசத்து உள்ளது என்று கூறுகின்றன, ஆயினும் சைவ உணவிலும் அதிக கொழுப்புள்ள வகைகள் உள்ளன. அசைவம் உண்போர் உடல் எடையை குறைக்க இயலாது என்பதும் உண்மை அல்ல. ஏனென்றால், இரு வகை உணவையும் சரியான விகிதத்தில் உட்கொள்ளாவிட்டால், அவை உடல் எடையை கூட்ட வல்லது தான். மேலும் பெரும்பான்மையான சத்துக்கள் அசைவ உணவில் காணப்படுகின்றன என்பதும் மறுக்க முடியாத ஒன்றாகும்.



நம்பிக்கை # 5 : உடற்பயிற்சி மேற்கொண்டால் உணவில் கட்டுப்பாடு தேவை இல்லை

நிஜம் : எடைகுறைய வேண்டுமென்றால், நீங்கள் உட்கொள்ளும் காலோரிகளை விட வெளியேற்றும் காலோரிகள் அதிகமாக இருத்தல் அவசியம். உடற்பயிற்சி மேற்கொண்டாலும், நீங்கள் உட்கொள்ளும் காலோரிகள் மீது கவனம் மிக அவசியம் ஆகும். குறைந்த காலோரிகள் உள்ள உணவையே தேர்ந்தெடுங்கள், அவற்றையும் சரியான அளவில் மட்டுமே உண்ணுங்கள்.




நம்பிக்கை # 6 : பளு தூக்குதல் எடை கூட காரணமாகும்

நிஜம் : பளு தூக்குதல் உங்கள் உடலை உறுதியாக்குவது மட்டுமில்லாமல், உடல் எடையையும் குறைக்க உதவும். இச்செயல்கள் உங்கள் தசையை வளரச்செய்யும். தசைகள் வளர்ச்சி அடைந்தால், உடல் கொழுப்பு கரையும். இது போன்ற உடற்பயிற்சிகள் உங்கள் தசைகளை வலுவாக்கும். அதோடு உடல் எடையையும் கட்டுப்பாட்டில் வைக்கும்.



நம்பிக்கை # 7 : பாதாம், முந்திரி போன்றவை உடல் எடையை அதிகரிக்கும்.

நிஜம் : இவ்வகை நொறுவைகள் மிகுந்த கொழுப்பு மற்றும் காலோரிகள் அடங்கியவை ஆகும். ஆயினும் சிறிய அளவில் இவைகளை உண்டால், எடைக்குறைப்பில் அவை உதவி செய்யும். கொழுப்பை தவிர இவைகளில் புரதசத்து, நார்சத்து, மற்றும் கனிமசத்தும் அடங்கியுள்ளது.




நம்பிக்கை # 8 : பால் பொருட்கள் எடையை கூட்டும்

நிஜம் : மற்ற கொழுப்புள்ள உணவுகளை காட்டிலும், கொழுப்பு நீக்கபெற்ற பால் மற்றும் பாலாடை உடல் எடையை கூட்டாது, ஏனென்றால் இவற்றில் காலோரிகள் குறைவாகவே காணப்படுகின்றன. நம் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் பால் தயாரிப்புகளில் உள்ளன. நம் உடலின் பாகங்கள் சரியாக செயல்பட மற்றும் தசைகள் நன்கு வளர உதவும் புரதச்சத்துக்கள் பால் பொருட்களில் உள்ளன. மேலும் எலும்புகளை வலுவாக்கும் சுண்ணாம்புச்சத்தும் பாலில் உள்ளது. பெரும்பாலான பால் தயாரிப்புகளில் விட்டமின் "D" உள்ளபடியால், உடல் எடை குறைப்பு முயற்சியில் பாலின் பங்கும் இன்றியமையாதது.



3 comments:

 

வாசித்தவர்கள்

இன்று ...

உங்கள் ஆதரவால் ...!

tamil blogs traffic ranking