டைனாசர் - பெரிய விலங்கு அரிய தகவல்கள்
இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு உயிரினம் டைனாசர்கள். அவைகளில் சிறியவை, பெரியவை, வலிமையுள்ளவை, வெட்கப்படுபவை எனப் பல வகைகளாய் வாழ்ந்து வந்தன. மனிதன் இன்று ஆட்சி செய்யும் இதே பூமியில், டைனாசர்கள் வாழ்ந்து, நாம் தோன்றிய இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே மாண்டு விட்டன.
டைனாசர் - வகைகள் :
ஆயிரத்திற்கும் மேற்பட்ட டைனாசர் இனங்கள் இதுவரை கண்டறிய பட்டுள்ளன. டைரனௌசரஸ், ப்ராகியோசாரஸ், ஸ்டீகோசாரஸ், ட்ரைசெராடாப்ஸ், வெலாசிரப்டர், ஏங்கிலோசாரஸ், அபாடோசாரஸ், மற்றும் டிப்லோடாகஸ் போன்றவை நம் ஞாபகத்தில் முதலிடம் பெறுபவை ஆகும். டைனாசர்களில் எத்தனை இனங்கள் உண்டு என்பது நாம் அறியாத போதும் ஒவ்வொரு ஆண்டு, பல்வேறு புதிய இனங்கள் கண்டறியப் பட்டன. அவைகளில் சிலவை தாவர உண்ணிகளாகவும், பலவை மாமிச பட்சிணிகளாகவும் திகழ்ந்தன.
டைனாசர்கள் வாழ்ந்த காலம் :
பூமியின் வரலாற்றில் டைனாசர்கள் மூன்று கால கட்டங்களில் வாழ்ந்து வந்தன. அவற்றில் முதன்மையான காலம் 'ட்ரையாஸிக் காலம்' (251 - 199 கோடி ஆண்டுகள் முன்பு) என அறியப்படுகிறது. நாம் பெரும்பாலும் கேள்வி பட்ட டைனாசர் இனங்கள் இந்த காலக் கட்டம் சார்ந்தவை அல்ல.
'ஜுராஸிக் காலம்' (199 - 145 கோடி ஆண்டுகள் முன்பு) என்பது, அவைகள் வாழ்ந்த இரண்டாம் கால நிலை என அறியப் படுகிறது. அந்த சமயத்தில் வாழ்ந்தவை தான் ப்ராகியோசாரஸ் மற்றும் ஸ்டீகோசாரஸ் வகை டைனாசர்கள்.
மூன்றாம் மற்றும் கடைசி காலக் கட்டத்தை 'க்ரெடேஷியஸ் காலம்' (145 - 65 கோடி ஆண்டுகள் முன்பு) என்று அழைக்கிறார்கள். டைனாசர்களில் கடைசி இனங்களான ட்ரைசெராடாப்ஸ், டைரனௌசரஸ், மற்றும் வெலாசிரப்டர் இந்த காலத்தில் வாழ்ந்தன. இந்த இனம், ஏறக்குறைய 65 கோடி ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து விட்டன.
மனித குலம் தோன்றி, இரண்டு கோடி ஆண்டுகள் மட்டுமே ஆகிறது என்பது வியத்தகு செய்தி ஆகும்.
டைனாசர்கள் உலகத்தின் எல்லா பகுதிகளிலும் வியாபித்து இருந்தன. அவை வாழ்ந்த காலத்தில், இன்றைய வெப்பநிலையை விட மிக கூடுதலாக தட்பவெப்பநிலை நிலவியது. பச்சை மரங்கள், மாஸ் வகை செடிகள் ( Mosses ), ஃபெரணி வகை செடிகள் ( Ferns ) காணப்பெற்றாலும், மலர்கள் தோன்றி இருக்கவில்லை.
இனியும் நம் பயணம் தொடரும்....அடர்ந்த காட்டிற்குள்....அரிய செய்திகள் தேடி....
டைனாசர் 2 - இரண்டாம் பகுதிக்கு செல்ல இங்கே சொடுக்கவும் !
டைனாசர் 3 - மூன்றாம் பகுதிக்கு செல்ல இங்கே சொடுக்கவும் !
டைனாசர் 4 - நான்காம் பகுதிக்கு செல்ல இங்கே சொடுக்கவும் !
டைனாசர் 5 - ஐந்தாம் பகுதிக்கு செல்ல இங்கே சொடுக்கவும் !
டைனாசர் 6 - இறுதி பகுதிக்கு செல்ல இங்கே சொடுக்கவும் !
டைனாசர் 2 - இரண்டாம் பகுதிக்கு செல்ல இங்கே சொடுக்கவும் !
டைனாசர் 3 - மூன்றாம் பகுதிக்கு செல்ல இங்கே சொடுக்கவும் !
டைனாசர் 4 - நான்காம் பகுதிக்கு செல்ல இங்கே சொடுக்கவும் !
டைனாசர் 5 - ஐந்தாம் பகுதிக்கு செல்ல இங்கே சொடுக்கவும் !
டைனாசர் 6 - இறுதி பகுதிக்கு செல்ல இங்கே சொடுக்கவும் !
Really Jurassic park partha effect irukku. Nice posting, please upload more. thank u
ReplyDeletesuper.....................
ReplyDeleteSuper posting idhu Yazhini. Muzhu thodarayum kandippa podunge. Therinjikka aavala irukku. ThanQ
ReplyDelete@ Sivabalan, மேலும் காத்திருங்கள். அடர்ந்த காட்டிற்குள் இன்னும் பல வித டைனோசர்கள் உங்களுக்காக ஆவலோடு காத்திருக்கின்றன. நன்றி
ReplyDelete@ சு. ராபின்சன், டைனோசர்களுக்கு சிறிய உணவு போதாது. ஆகையால் இந்த தொடரின் அடுத்த பகுதியில் சூப்பர் -ஐ தாண்டி வருவர்கள் என்று நம்புகிறோம். உங்கள் ஆதரவிற்கு நன்றி.
@ Test, இந்த தெரிஞ்சிக்கிற ஆவல் தான் எங்களை இந்த தொடரையே ஆரம்பிக்க வெச்சது. விடமாட்டோம்லே ! ஹா ஹா ....
karappan puchi dinosaurs valntha kalathula valthuchi
ReplyDeleteur article very intresting yazh thanx
சுரேந்தர் வணக்கம், வருக !
ReplyDeleteஉங்கள் தகவலுக்கு நன்றி.
டைனோசர் தொடர் முடிவு பெற்றவுடன், உங்களுக்கு மிகவும் பிடித்த கரப்பான் பூச்சி பற்றிய தொடரை ஆரம்பிக்கிறோம். கண்டிப்பாக வந்து பாருங்கள் ! ஹஹஹா .....