டைனாசர் 6 - கடைசி மூச்சு
Dinosaur 6 - Extinction
Dinosaur 6 - Extinction
சில கோடி ஆண்டுகளுக்கு, முன் இந்த பூமியில் புழங்கிய ஒரு அரிய உயிரினத்தை பற்றி உங்களுடன் பகிர்ந்து கொண்டோம். இந்த பயணத்தில் பரிணாம வளர்ச்சி, அக்கால உயிர் கோட்பாடுகள், மற்றும் சுற்றுசூழல் பற்றிய தகவல்களை டைனாசர்களின் வாழ்க்கையுடன் இணைத்தே உங்களுக்கு பரிமாறினோம்.
இங்கு உங்களுடன் பகிரப்படும் பதிவு யாழ் இனிதில் டைனாசரின் இறுதிப் பயணமாகும். எங்களுடன் கை கோர்த்து டி-ரெக்ஸ், டிப்லோடாகஸ் போன்ற ராட்சத மிருகங்களின் வாழ்கையை அலசி பார்த்து அதில் உள்ள சுவாரசியங்களையும் திகில்களையும் ரசித்து பாராட்டிய உங்கள் எல்லோருக்கும் யாழ் இனிது பெரிதாக கடமை பட்டிருக்கிறது. இத்தொடரை முடித்து கொள்ளுவதில் எங்களுக்கும் மன வருத்தம் இருந்தாலும் எந்த ஒரு சகாப்தமும் முடிவுக்கு வந்து தான் ஆக வேண்டும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் இதன் நிறைவு பகுதியை உங்களுக்கு சமர்ப்பிக்கிறோம்.
டைனாசர் இனம் ஏன் அழிந்து போனது ?
சுமார் 65 கோடி ஆண்டுகளுக்கு முன்னால், டைனாசர்கள் திடீரென்று இறந்து போயின (அழிந்து போனது அந்த உயிரினம்). எதனால் இவ்வாறு ஆனது என்று இது வரை உறுதியாக புலப்படவில்லை, பூமிக்கண்டத்தில் நிச்சயமாக ஏற்பட்ட ஏதோ பெரிய மாறுதல் இது நிகழ்ந்தது என வேண்டுமானால் அனுமானிக்கலாம்.
எந்த காரணத்தினால் டைனாசர்கள் அழிந்து போயின என்று யாருக்கும் உறுதியாக தெரியாவிட்டாலும், விஞ்ஞானிகள் சில தத்துவங்கள் மீது இன்னமும் ஆராய்ச்சிகள் மேற்கொள்கிறார்கள்.
அனுமானம் #1
இதன் படி, டைனாசர்கள் ஒரு கட்டதிற்கு மேல் வளர முடியாமல் போய்விட்டன. ஒரு காலகட்டத்தில் எல்லா உயிரினங்களும் பூமியின் தட்பவெப்பம், உணவு, இருப்பு மற்றும் எதிரிகளுக்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் சூழல் ஏற்பட்டது. இந்த மாறுதலை டைனாசரால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போய்விட்டதால், அவை அழிந்து போயின.
அனுமானம் #2
இந்த கருத்தின் படி, பூமியின் மீது ஒரு பெரிய விண்கல் மோதி அதன் விளைவாக ஏற்பட்ட பாதிப்பு டைனாசர்கள் வாழ்கையை முடிவுக்கு கொண்டு சென்றது. விண்கல் என்பது விண்வெளியில் இருந்து பூமியை வந்து மோதும் பெரிய அளவு பாறைகளை குறிக்கும். அவ்வாறு மோதிய பாறையால் பெரிய தூசி மண்டலம் ஏற்பட்டு, சூரிய ஒளியை அது மறைத்திருக்க கூடும், ஆகையால் பூமியில் உள்ள தாவரங்கள் அழிந்து போயிருக்க கூடும். அவ்வாறு தாவரங்கள் அழிந்து போனதால், பெரும்பான்மையான டைனாசர்கள் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டு இறந்து போயின.
அனுமானம் #3
மற்றொரு சாத்தியக்கூறு என்னவென்றால், ஒரு காலத்தில் பூமியில் பல எரிமலைகள் வெடித்திருக்கலாம். அவைகளின் குழம்புகளில் உள்ள அதீத சாம்பல் துகள்கள் மற்றும் நச்சு வாயு பூமியில் பரவி இருக்கலாம். அதனால் டைனாசர்கள் சுவாசிக்க தடை ஏற்பட்டு அவைகள் இறந்து போயிருக்கலாம்.
அனுமானம் #4
நடைமுறைக்கு மிக நெருங்கிய இந்த அனுமானமானது, பல டைனாசரின் முட்டைகள் வேறு மிருகங்களால் உண்ணப்பட்டு அதன் அடுத்த தலைமுறை அழிந்து போயிருக்கலாம் என புலப்பட வைக்கிறது. தந்திரம் மிகுந்த சில உயிரினங்கள் இரவில் டைனாசர்கள் உறங்கும் பொழுது அவற்றின் முட்டைகளை தின்றதாலும் டைனாசர் இனம் வழக்கொழிந்து போயிருக்க கூடும்.
அனுமானம் #5
ஏதேனும் கொடிய நோயினால் பாதிக்கப்பட்டு டைனாசர்கள் அழிந்து போயிருக்கலாமா ? இந்த கூற்றின் சாத்தியம் குறைவு தான், ஏனென்றால் டைனாசர்கள் வாழ்ந்த அதே காலகட்டத்தில், புழங்கிய பல உயிரினங்களும் அப்போது அழிந்து போயின என்பதற்கு போதிய சான்றுகள் உள்ளன. அவ்வாறு எல்லா உயிரினங்களும் ஒரே நோயினால் அழிந்திருக்க கூடும் என்று நம்புவதற்கு இல்லை.
எச்சங்கள் என்றால் என்ன ?
வெகு காலம் முன்பு வாழ்ந்து வந்த மிருகங்கள் மற்றும் தாவரங்களின் மிச்ச பகுதிகளை தான் விஞ்ஞானிகள் எச்சங்கள் என்று அழைக்கிறார்கள். பல கோடி ஆண்டுகள் முன்னரே பாறை வடிவமாக மாறிவிட்ட எலும்புகள், பற்கள், முட்டைகள் மற்றும் கால்தடங்கள் எச்சங்களின் பகுதிகள் ஆகும். "ஜோபாரியா" மற்றும் "ஜெனென்ஷியா" என அழைக்கப்படும் புதிய வகை டைனாசர்களின் எச்சங்கள் சமீபத்தில் ஆப்பிரிகாவில் கண்டெடுக்கப்பட்டன.
விஞ்ஞானிகள் எச்சங்களை எவ்வாறு கண்டு பிடிக்கிறார்கள் ?
எச்சங்களை கண்டுபிடிப்பது என்பது மிகவும் கடினமான ஒரு காரியமாகும். ஏனென்றால், இவைகள் பூமியின் ஆழ்ந்த பகுதியில் புதைக்கப்பட்டுள்ளன. காற்று மற்றும் நீரால் மண் மற்றும் பாறைகளின் மேற்பகுதி நீக்கப்பட்ட இடங்களில் தான் பெரும்பாலும் வல்லுநர்கள் ஆராய்ச்சி மேற்கொள்கிறார்கள். இவ்வாறு கடல் அலைகளால் நீக்கப்பட்ட ஒரு பகுதியில் தான் விஞ்ஞானிகள் "லியலீனாசாரா" எனும் டைனாசரின் எச்சங்களை கண்டுபிடித்தார்கள். இதை கண்டுபிடித்த விஞ்ஞானியின் மகளின் பெயரால் அதற்கு "லியலீனாசாரா" என்று பெயர் வந்தது. அவர் புதல்வியை "டைனோ பெண்" என்று கூறினார்கள்.
டைனாசர்கள் மீண்டும் உயிர்த்தெழ வாய்ப்பு உள்ளதா ?
டைனாசர்கள் மீண்டும் உயிர்த்தெழ எந்த வாய்ப்பும் இப்போது இல்லை என்பது தான் உண்மையாகும். இருப்பினும் விஞ்ஞானிகள் டைனாசர் எனும் இந்த ராட்சச உயிரினத்தின் எச்சங்கள் மூலம் மேலும் புதிய தகவல்களை அறிய இன்னமும் முயன்று கொண்டிருக்கிறார்கள். தற்போது ஒரே ஒரு இடத்தில் மட்டும் டைனாசர்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன, அது நம் எல்லோரின் மனது.
முற்றும் ....
டைனாசர் தொடர் முடிந்து விட்டது. இறுக்கமான மனதை தளர்த்தி கொள்ள சில நகைச்சுவை படங்கள் இதோ .....
டைனாசர் 1 - முதல் பகுதிக்கு செல்ல இங்கே சொடுக்கவும் !
டைனாசர் 2 - இரண்டாம் பகுதிக்கு செல்ல இங்கே சொடுக்கவும் !
டைனாசர் 3 - மூன்றாம் பகுதிக்கு செல்ல இங்கே சொடுக்கவும் !
டைனாசர் 4 - நான்காம் பகுதிக்கு செல்ல இங்கே சொடுக்கவும் !
டைனாசர் 5 - ஐந்தாம் பகுதிக்கு செல்ல இங்கே சொடுக்கவும் !
அடுத்த தொடர் ????
வழக்கொழிந்து விட்ட உயிரினங்களை தொடர்ந்து மனிதன் தொலைத்து விட்ட உன்னத நாகரீகங்களை பற்றி அறிந்து கொள்வோம்.. விரைவில் எதிர் பாருங்கள் !
wow adutthu civiliaziation pathiya super yazh namma dravidian civiliziation pathi konjam extrava eluthunga dont forgot yazh
ReplyDeleteவாழ்வின் எல்லா பயணங்களும் ஒரு கட்டத்தில் முடிவுக்கு வந்தாக வேண்டும் என்ற இயற்கையின் கட்டாயத்தை மிகவும் நன்றாக புலபடுத்தி இருக்கிறீர்கள் !
ReplyDeleteஉணர்ந்தேன்....பின் பற்றுவேன்
நன்றி !
டைனோசர் பற்றிய சுவாரஸ்யமான தொடரினை முடித்திருக்கிறீங்க. டைனோசர் பற்றிப் பல தகவல்களை உங்கள் பதிவின் மூலம் அறிந்து கொண்டேன்,
ReplyDeleteபல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் பூமியில் மோதிய விண்கல் மூலமும் டைனோசர் அழிந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டிருக்கிறார்களே,
இது தொடர்பாக உங்கள் கருத்து என்ன?
நன்றி சுரேந்தர். உங்கள் கருத்தை வரவேற்கிறோம்.
ReplyDeleteஆனால், நங்கள் எழுதவிருப்பது தொலைந்து போன நாகரீகங்களை பற்றி. திராவிட நாகரீகம், நம்மை போல் உள்ளவர்கள் மத்தியில் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை நாங்கள் ஆணித்தரமாக நம்புகிறோம்.
ராஜேஷ், உங்கள் கருத்திற்கு நன்றி.
ReplyDeleteஆம் உண்மை தான்....
கோடி கோடி வருடங்களாக பூமியில் இயற்கை அன்னையால் ஏகப்பட்ட மாற்றங்கள்..
மாற்றங்கள் நிகழ்ந்தாலும் அவற்றின் சுவடுகள் என்றும் மாறாது.
அதற்கு சான்று தான் இந்த டைனாசர் தொடர்....
நிரூபன் சகோ, வாருங்கள் வணக்கம்.
ReplyDeleteஇத்தொடரின் மூலம் டைனாசரைப் பற்றி தாங்கள் அறிந்து கொள்ள உதவியதே எங்களின் வெற்றி. அதற்கு நன்றிகள் பல.
// பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் பூமியில் மோதிய விண்கல் மூலமும் டைனோசர் அழிந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டிருக்கிறார்களே,
இது தொடர்பாக உங்கள் கருத்து என்ன? //
விண்கல் பற்றி எங்கள் கருத்தை தான் அனுமானம் # 2 இல் பகிர்ந்து இருக்கிறோம். இந்த முழு தொடரில் கொடுக்கப் பட்டுள்ள தகவல்கள் யாவுமே டைனாசர் பற்றிய பல்வேறு களஞ்சியங்களில் இருந்து உறுதி செய்யப் பட்டவை ஆகும்.