Social Icons

.

Monday, August 15, 2011

மழை வருது ... மழை வருது ... !மழை வருது ... மழை வருது ... !மழை காலத்தை எதிர்கொள்ள நம் இல்லத்தை ஆயத்தமாக்குவோம்.

இந்தியவில் பருவ மழை காலம் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் நிறைவடைகிறது. ஜூன் 1ம் தேதி மழை மேகங்கள் கேரளாவை தொடும், சுமார் 10 நாட்களுக்கு பிறகு மும்பையை அடையும், பின்பு மாத இறுதியில் டெல்லியை தொட்டு, ஜூலை முதல் நாடு முழுவதும் பரவுகிறது.மழை கால ஆயத்தம் உங்கள் இல்லத்தை பாதுகாப்பதோடு நில்லாமல்,  இல்லத்தை அலங்கரிக்கவும் உதவுகிறது.

இயற்கை எழிலும் , பசுமையும் நிறைந்து வழியும் அழகு காட்சிகளை மழை காலத்தில் நாம் ரசிக்கலாம்.  இல்லத்தை பேணும் முயற்சியில் முதல் படி மழை நீர் நம் வாழும் அறை அல்லது மற்ற அறைகளில் புகாமல் பார்த்துக்கொள்வது தான். இந்த பருவத்தில் நம் வீட்டின் மின் உபகரணங்கள் மற்றும் மின் இணைப்புகளையும் கவனமாக கையாள வேண்டியது அவசியம் ஆகும்.

வீட்டை மழைகாலத்தில் பாதுகாக்க சில யோசனைகள்

ஜூன் முதல் செப்டம்பர் வரை நீடிக்கும் மழை காலத்தில் நாம் மேற்கொள்ள வேண்டிய சில வழிமுறைகள்.

1) கூறையில் ஏதேனும் கசிதல் இருந்தால், உடனடியாக அதை "ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ்" அல்லது சிமென்ட் கொண்டு அடைத்து விடுங்கள்.

2) நீங்கள் வீட்டின் உள்ளே செடிகள் வளர்ப்பவராக இருந்தால், முதலில் அச்செடிகளை வீட்டின் வெளியே வைத்து விடுங்கள். அவற்றிற்கு மழை நீர் கிடைக்க வழி செய்யுங்கள்.3) குழந்தைகள் அழுக்கு காலணிகளோடு வீட்டின் உள்ளே வர அனுமதிக்காதீர்கள். தரை விரிப்புகளை மழை காலத்தில் மடித்து வைத்து விடுவது நல்லது.

4) இந்த பருவத்தில் மின் வெட்டுகள் அதிகம் இருக்க வாய்ப்புள்ளதால், முன்னேற்பாடாக "எமர்ஜென்சி" விளக்கு அல்லது லாந்தர் விளக்கை தயார் செய்து கொள்ளுங்கள். மெழுகுவர்த்திகளை விட இது சிறந்ததாகும்.


 
5) மழை பருவத்தில் நம் வீட்டின் கூறை மற்றும் ஜன்னல்கள் ஒழுகும் வாய்ப்பு மிகவும் அதிகம். அவ்வாறு காணப்பட்டால், உடனடியாக அவற்றை அடைத்து விடுவது நல்லது.

6) மழை நீர் புகாமல் வீட்டிற்கு வெளியே போகும் வகையில், மழை நீர் வடி குழாய்கள் வைக்கலாம் அல்லது சரிவான கூறையாக வடிவமைக்கலாம்.7) போதுமான காற்றோட்டம் நம் வீட்டில் அமையும்படி பார்த்து கொள்ளவும்.

8) "டர்மைட்" எனப்படும் அரிப்பு புழுக்கள் மழை காலத்தில் வெகுவாக நம்மை தொல்லை படுத்தும். இப்பூச்சிகள் வராமல் கவனமாக இருத்தல் அவசியம் ஆகும்.
9) தண்ணீர் குழாய்களில் அசுத்தம் சேரும் வாய்ப்பு உள்ளது, ஆகையால் போதுமான தண்ணீரை சேமித்து வைய்யுங்கள்.

10) வீட்டை சுற்றி உள்ள மரங்களின் இலைகள் உதிர்ந்து "ஸெப்டிக் டாங்க்" மற்றும் தண்ணீர் தொட்டிகளை அடைத்து விடாத படி பார்த்து கொள்ளுங்கள்.11) மின் உபகரணங்களை பத்திரமாக மூடி வைக்கவும். இணைப்புகளில் கசிவு இல்லாதவாறு அவற்றை நல்ல தரத்துடன் இருப்பதை உறுதி செய்யுங்கள். ஒவ்வொரு மின் இணைப்புக்கும் தனி தனி "ஃப்யூஸ்" இருப்பது மற்றும் சரியான முறையில் அவற்றை "எர்த்" செய்வது முக்கியமான ஒன்றாகும்.

12) அலமாரிகளில் மற்றும் துணிகளில் சிறிது கற்பூரமும் வேப்பிலையும் இட்டு விட்டால் மழை காலத்தின் ஈரப்பதத்திலிருந்து காப்பதோடு அல்லாமல் இக்காலத்தில் வெகுவாக புழங்கும் " சில்வர் ஃபிஷ்" உம் அண்டாமல் பாதுகாக்கலாம்.13) இந்தியாவின் மழை பருவம் என்பது கணிக்க முடியாத ஒன்றாகும். மழை காலத்தின் தொடக்கதிலேயே துரதிர்ஷ்டவசமாக பல பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் நிலையும் உண்டாகும்.

14) தாழ்ந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் மழை வெள்ளத்தில் இருந்து தங்களை காத்துக்கொள்ள போதுமான எச்சரிக்கை மேற்கொள்வது மிக அவசியம் ஆகும்.15) அதீத மழையால் சில சமயம் வீட்டிற்கு வெளியே வர முடியாத சூழ்நிலையும் ஏற்படலாம்.ஆகையால் மழை காலத்தில் வீட்டிற்கு தேவைப்படும் மளிகை, குடிநீர் மற்றும் இதர அத்தியாவசிய பொருள்களை முன்கூட்டியே சேர்த்து வைத்துக்கொள்வது நல்லது.

16) அவசர தேவைகளுக்கு வானொலி பெட்டி, "எமர்ஜென்சி விளக்கு" முதலுதவி மருந்துகள் ஆகையவற்றை வைத்திருப்பது புத்திசாலித்தனமாகும்...

4 comments:

 1. வாவ்....

  அசத்தலான பதிவு...

  எல்லோரும் தெரிந்துவைத்திருக்க வேண்டிய விஷயம்இ....

  ReplyDelete
 2. அருமை நன்றி சகோ

  ReplyDelete
 3. கவிதை வீதி சௌந்தர், வருமுன் காப்பது நன்று என்பதன் விளைவு தான் இந்த பதிவு. பாராட்டிற்கு நன்றி !

  ReplyDelete
 4. மோகன், யாழ் இனிது அன்புடன் உங்களை வரவேற்கிறது. தொடர்ந்து உங்கள் ஊக்கத்தையும் நாடுகிறது !

  ReplyDelete

 

வாசித்தவர்கள்

இன்று ...

உங்கள் ஆதரவால் ...!

tamil blogs traffic ranking