நிலா பெண்ணே !
டிசெம்பர் 31 இரவு ….
புது வருடத்தை வரவேற்க
தெருவெல்லாம் கோலம் போட்டார்கள்
திடிரென பிரகாசித்தது நிலவு
வாசலில் பார்த்தேன்
நீயும் வந்தாய் கோலம் போட
நீ புள்ளி வைத்து கோலம் போடும் அழகை ரசித்தேன்
என்னை யாரும் பாக்கவில்லை என நம்பிக்கையோடு
என் வீட்டு ஜன்னல் வழியாக
அப்போது தான் உணர்ந்தேன்
நிலா என்னை கவனித்து கொண்டிருப்பதை !
வெட்கத்தோடு உறங்க சென்றேன்
உனக்கு காவலாக நிலா இருக்கும் தைரியத்தில் !!
............. rkmanoj
இந்த கவிதையை வடித்தவர் யாழ் இனிதின் வாசகராகிய திரு ஆர்.கே. மனோஜ். அவர் ஆர்வத்தை பாராட்டுவதோடு மனமார்ந்த நன்றியையும் தெரிவித்து கொள்கிறோம்.
வாழ்த்துக்கள்.. உங்களுக்கும்..திரு ஆர்.கே. மனோஜ். அவர்களுக்கும்..
ReplyDeleteஅழகான காதல் கவிதை...
ReplyDeleteவாழ்த்துக்கள்..
செம.....
ReplyDeleteஇளைமையில் காதல் அழகு தான்.... உங்க கவி வரிகளை போல
கருன் சகோ, உங்கள் பாராட்டை மனோஜ்க்கு தெரிவித்து விட்டேன். ஆதரவிற்கு நன்றி.
ReplyDelete#கவிதை வீதி# சௌந்தர், ரசித்தமைக்கு மிக்க நன்றி
ReplyDeleteஆமினா , கவிதை வரிகளை போல தங்கள் பாராட்டும் மிக அழகு சகோ. நன்றிகள் பல.
ReplyDeleteவேடந்தாங்கல் கருண்
ReplyDeleteதங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சகோதரா
கவிதை வீதி சௌந்தர்
ReplyDeleteவாழ்த்துகளுக்கு மிக்க நன்றி! உங்கள் வீதி வழியாக நடந்து சென்றால் முடிவில் நானும் ஒரு கவிஞன் ஆவேன் நன்றி!
ஆமீனா
ReplyDeleteவாழ்த்துகளுக்கு நன்றி! எங்கள் கவி வரியை ரசித்த உங்கள் மனதும் அழகுதான் நன்றி!