Social Icons

.

Saturday, August 13, 2011

பசுமை ....



பசுமை
 ....


எப்போது எண்ணி பார்த்தோம்.......
இவையெல்லாம் !

மரக்கிளைகளில் தோன்றும் பசுமை.....
மண்ணிற்கடியில் தன்னை ஒளித்துக்கொண்டு
நீரிரைக்கும் வேர்களினால் தான் என்று ?

நம் பாட்டன் என்றோ விதைத்த விதைகள்......
இன்று மரமாகி நிழல் கொடுத்தாலும்
நம் நாளைய தலைமுறைக்கும்
இன்றைய விதைகள் தேவை என்று ?

உயர்மாடி கட்டடத்திலிருந்து ஊர் அழகு.....
கச்சிதமாய் தெரிந்தாலும்,
ஆயிரம் மரங்களின் கல்லறையில் தான்
நாம் இல்லம் கொண்டிருக்கிறோம் என்று ?

அன்று மரங்கள் இலைகள் உதிர்த்தது.......
பருவத்தின் மாற்றத்தில்
இன்று அது இலைகள் துறப்பது,
பரிதவிக்கும் அதன் கண்ணீர் என்று ?

நம் பிள்ளைகளுக்கு நாம்.....
அளிக்கப்போவது வாழ தகுதியான தரணியா ?
அல்லது
தன் பசுமை மேலாடையை துறந்து
வாடும் மானமில்லாத தாயா ?

உணர்ந்தால் வரும் நாம்.......
வாழ்வதற்கேற்ற பசுமை
மறந்தால் இது வெறும்
வாழ்வதற்கே பெரும் "சுமை !






2 comments:

  1. ''...உணர்ந்தால் வரும் நாம்.......வாழ்வதற்கேற்ற பசுமை
    மறந்தால் இது வெறும்
    வாழ்வதற்கே பெரும் "சுமை !...''
    மிக அருமையான கவிதை....தேவையானதும் கூட...
    வேதா.இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  2. திரு கோவைக்கவி அவர்களே, தங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் யாழ் இனிதின் மனம் கனிந்த நன்றி.

    ReplyDelete

 

வாசித்தவர்கள்

இன்று ...

உங்கள் ஆதரவால் ...!

tamil blogs traffic ranking