பிரிவு : அறத்துப்பால் / துறவறவியல்
அதிகாரம் : 32 / இன்னா செய்யாமை
குறள் எண் 316
குறள் #3 :
இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல்.
தெளிவுரை :
துன்பம் தருபவை இவை என ஒருவன் தான் உணர்ந்த செயல்களை மற்றவனிடத்தில் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.
ஆஹா ! அருமையான குறள். நம்மில் எத்தனை பேர் இதனை உணர்ந்து இருக்கிறார்கள் என்பது யோசிக்க வேண்டிய கேள்வி.மற்றவருக்கு வாக்கினாலோ, செயலினாலோ துன்பம் நேரும் வண்னம் ஒருவர் செயல்படுவதை காணும்போது, அவர் மீது பரிதாபம் மேலோங்கி நிற்கிறது.
ReplyDeleteவாழ்க வள்ளுவன் !
Rajesh1972, ஒருவேளை திருவள்ளுவரும் அதே நினைப்பில் தான் எழுதி இருக்கிறாரோ ?
ReplyDeleteஉங்கள் கருத்திற்கு நன்றி
வணக்கம் எத்தனை திருவள்ளுவர் வந்தாலும் சிலரை மாற்ற முடியாது என்பதை உணர்ந்துதான் அவர் அப்பொழுதே எழுதிவைத்துவிட்டு சென்றாரோ இதை படித்தாவது உணரட்டும் என்று ... என்றும் அன்புடன் ..வீகே ..தமிழ்தேசம் சாட் ..நன்றி
ReplyDelete