Social Icons

.

Friday, August 12, 2011

மோர் குழம்பு


மோர் குழம்பு

மோர் குழம்பு பல விதங்களில் தயாரிக்கலாம்ஆனால் இங்கு கொடுக்கப்பட்டுள்ள முறை எளிதானதாக மட்டும் இல்லாமல் சுவையாகவும் அமையும் என கூறலாம். மோர் குழம்பு பொதுவாக காய்கறிகள் கொண்டு தான் செய்வார்கள். ஆனால் இங்கு பகிரப்பட்ட முறையில் புதுமையாக இதை போண்டா கொண்டு செய்வது எப்படி என நாம் அறிந்து கொள்ளலாம். இவ்வகையான மோர் குழம்பு வட இந்திய உணவு தயாரிப்புகளில் ஒன்றாகும்.




தேவையான பொருள்கள் :

புளித்த தயிர் - 2 கப் ; கடைந்தது
கடலை மாவு - 1-1/4 கப்
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
சோடா உப்பு - 1 சிட்டிகை
பச்சை மிளகாய் - 6
இஞ்சி - 1 இன்ச் துண்டு
சின்ன வெங்காயம் - 10 (அ) பெரிய வெங்காயம் - 1
கடுகு - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
சமையல் எண்ணை - வறுக்க தேவையான அளவு
பூண்டு - 5 பல்
கறிவேப்பிலை - 2 கொத்து
கொத்தமல்லி - கை அளவு
உப்பு - தேவைக்கேற்ப

ஆயத்த செய்முறை :

ஒரு மிக்ஸியில் பச்சை மிளகாய், இஞ்சி, சின்ன வெங்காயம், ஆகியவற்றை கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். மிகவும் மெலிதாக அரைக்க கூடாது. பச்சை மிளகாய் விதைகள் அதிகம் அரைந்து விட்டால் கசப்பு தன்மை கூடிவிடும். அதனால் கொரகொரப்பாக அரைக்கவும். இந்த குழம்பு செய்வதில் இது மிக முக்கியமான நுணுக்கமாகும்.

போண்டா செய்வதற்கு :

1. ஒரு பாத்திரத்தில் 1 கப் கடலை மாவு எடுத்து கொள்ளவும். அதனுடன் சோடா உப்பு,  இஞ்சி,  பச்சை மிளகாய் கலவையில் பாதி அளவு, 1 சிட்டிகை பெருங்காயம், உப்பு மற்றும் கொத்தமல்லியை சேர்க்கவும்.

2. சிறிதளவு நீர் உபயோகித்து கெட்டியான பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.

3. ஒரு தேக்கரண்டியால் அந்த மாவை எடுத்து உதிர்த்தால் ஒரு நெல்லிக்காய் அளவு போண்டாவாக வரும் வண்ணம் மாவின் பதம் இருத்தல் அவசியம்.

4. ஒரு வாணலியில் எண்ணையை காயவைத்து, நெல்லிக்காய் அளவு போண்டாக்களை இட்டு வறுத்து வடிகட்டவும்.

குழம்பு செய்ய :

1.  ஒரு பெரிய பாத்திரத்தில் கடைந்த தயிரை எடுத்துக்கொண்டு அதனுடன் 4 கப் தண்ணீர் சேர்க்கவும்.

2.  1/4 கப் கடலை மாவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு மசிக்கப்பட்ட பசையாக ஆக்கி கொள்ளவும்.

3.  இதை ஏன் செய்கிறோம் என்றால், கடலை மாவை நேரடியாக நீரில் போட்டால் கட்டி தட்டும், அதற்காக தான் இந்த உத்தி.

4.  இந்த பசையை தயிர் கலவையுடன் நன்கு கலக்கவும்.

5.  இதனுடன் மிஞ்சியுள்ள இஞ்சி, பச்சை மிளகாய் கலவை, மஞ்சள் தூள், பெருங்காயம்,  உப்பு,  மற்றும் 1 கொத்து கறிவேப்பிலை சேர்க்கவும்.

6.  நடுதர தீயில் 10 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

7.  அடிக்கடி கிளறி விட்டால் நல்லது, ஏனென்றால் கடலை மாவு அடி பிடிக்கும் தன்மை உள்ளது.

8.  கடலை மாவு நன்கு கொதித்து பளபள என மேல் எழும்பும்போது, அடுப்பை அணைத்து கொத்தமல்லியை சேர்த்து மூடி விடவும்.

9.  கீழ்கண்ட முறையில் தாளிக்கவும்.
ஒரு வாணலியில் 4 தேக்கரண்டி எண்ணை ஊற்றி கடுகு தாளிக்கவும், பிறகு நறுக்கிய பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து அவை பொன் நிறமானதும் குழம்பில் ஊற்றவும்.

10.  இத்துடன், வறுத்த போண்டாக்களையும் குழம்பில் போட்டு, நன்கு கலந்து மூடி விடவும்.

11.  15 நிமிடங்கள் அவ்வாறு ஊறிய பின் பரிமாறவும்.



2 comments:

  1. வித்தியாசமான குறிப்பு

    ReplyDelete
  2. ஆமீனா, இதன் ருசியும் வித்தியாசமாக தான் இருக்கும்

    ReplyDelete

 

வாசித்தவர்கள்

இன்று ...

உங்கள் ஆதரவால் ...!

tamil blogs traffic ranking