Social Icons

.

Tuesday, July 5, 2011

கைவீசம்மா கைவீசு !

கைவீசம்மா கைவீசு !



பரிணாம வளர்ச்சி பாதையில் நம் கைகள் தகவல் பரிமாற்றத்திற்கு ஏற்ப வளர்ச்சி அடைந்துள்ளன. நம் வாய்ச்சொற்களை விட நம் கைகள் பேசும் வார்த்தைகள் ஏராளம் என்ற நிலை இப்போது உள்ளது. அதே நேரத்தில், நம் உடலின் பால் நாம் செய்யும் தவறுகளையும், புறக்கணிப்புகளையும் முதலில் வெளிகாட்டுவது நம் கைகளே. நம் தினசரி தகவல் பரிமாற்றத்திற்கு கட்டியம் கூறும் நம் கரங்களை மறைத்து வைப்பது மற்றும், மூப்பின் அடையாளங்களாகிய சுருக்கங்கள், விரிசல்கள் ஆகியவற்றை கவனிக்க தவறுதல் என்பது நம் உடலின் மேன்மையை புறக்கணிப்பதற்கு சமமாகும்.



கைகளின் பாதுகாப்பு :

நம் கைகளை ஆரோக்கியமாகவும், அழகாகவும் வைத்திருக்க சில அறிவுரைகள்:

கைகளில் சுருக்கங்கள் தோன்றாமல் இருக்க அவைகளை ஈரப்பதத்துடன் வைத்திருங்கள்.

வீட்டிற்கு வெளியே வெய்யிலில் செல்லவேண்டியிருந்தால், தவறாமல் "ஸன்ஸ்க்ரீன் லோஷனை"  கையிலும், முன்னங்கையிலும் தடவிக்கொண்டு செல்ல மறந்துவிடாதீர்கள்.

தோட்ட வேலை, சுத்தபடுத்தும் பணி போன்ற காரியங்களில் ஈடுபடும்போது, கையின் தோல் உறிவதோநகங்களின் மீது பாதிப்போ ஏற்படும் வாய்ப்பு உள்ளதால், கை உறை அணிந்து கொண்டு பணியை மேற்கொள்ளுங்கள்.

எப்போதும் ஈரத்தில் பணிபுரியும் பட்சத்தில், ஈரமான கையை நன்கு ஈரம் காய துடைத்துவிடுவது நல்லது, ஏனென்றால், ஈரமான கையின் நக இடுக்கில் புஞ்சை தொற்றிக்கொள்ள வாய்ப்பு உள்ளது.



கைகளை தளர்வாகவும், ஆரோக்கியத்துடனும் வைத்துகொள்ள, மாதமிரு முறை அவைகளை நன்கு பராமரிக்கவும்.

அதிகபடியான வெப்பமோ, குளிர்ச்சியோ கைகளை தாக்காமல் அவைகளை உலர்வாக வைத்திருங்கள்.

தினமும் இருமுறை கைகளில், "மாய்ஸ்சரைசர்" அல்லது "ஹாண்ட் க்ரீம்" தடவி கொள்ளுங்கள்.

கணிப்பொறியின் "கீ போர்டு" மற்றும் செல்போனின் "பட்டன்" அதிக அளவு பயன்படுத்தும் போது கைகளின் மீது அழுத்தமோ, காயமோ ஏற்படலாம், ஆகையால், அவ்வாறு செய்வதை தவிர்க்கவும்.

அவ்வாறு அழுத்தமோ, காயமோ ஏற்பட்டால், உங்கள் கைகளுக்கு போதுமான அளவு ஒய்வு கொடுத்து, அவ்வாறான பாதிப்பிலிருந்து கைகளை பாதுகாக்க வேண்டும்.



1 comment:

 

வாசித்தவர்கள்

இன்று ...

உங்கள் ஆதரவால் ...!

tamil blogs traffic ranking