இறால் பிரியாணி
நாவூறும் சுவை மிகுந்த, எளிதாக சமைக்கக் கூடிய ஒரு தென்னிந்திய உணவு பதார்த்தம் இறால் பிரியாணி ஆகும். கண்டிப்பாக சமைத்துப் பாருங்கள். ருசித்து மகிழுங்கள்.
தேவையான பொருள்கள் :
தரமான பச்சரிசி - 2 கப்
தண்ணீர் - 5 கப்
இறால் - 300 கிராம்; தோல் நீக்கி சுத்தம் செய்யப் பட்டது
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - 1 சிட்டிகை
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
புதினா இலைகள் - 1 கொத்து
எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
சமையல் எண்ணெய் - 1/4 கப்
நெய் - 2 தேக்கரண்டி
கொத்தமல்லி - 1 கைப்பிடி அளவு
செய்பொருள் - அ
பிரியாணி இலை - 1
பட்டை - 1 இன்ச்
அன்னாசி மொக்கு - 2
கிராம்பு - 4
ஏலக்காய் - 2
பச்சை மிளகாய் - 2; நீளமாக வெட்டப்பட்டது
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
செய்பொருள் - ஆ
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மல்லி தூள் - 1 தேக்கரண்டி
சிக்கன் மசாலா (அ) கரம் மசாலா - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை விளக்கம் :
1) இறாலின் மீது மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பைத் தடவி, 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
2) அரிசியை நன்கு கழுவி 20 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்கவும்.
3) வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கி கொள்ளவும்
4) ஒரு வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயத்தை வதக்கி, ஒரு தட்டில் வைக்கவும்
5) பின்பு, மற்றொரு தேக்கரண்டி எண்ணெய் வாணலியில் இட்டு அதில் நறுக்கிய தக்காளியை புதினா இலைகளுடன் சேர்த்து வறுத்து விட்டு அதையும், தட்டில் வைக்கவும்.
6) மேலும் 3 தேக்கரண்டி எண்ணெய் விட்டு, இறாலை வறுத்து தனியாக வைக்கவும்
7) இப்போது, மீதமுள்ள எண்ணெயை குக்கரில் விட்டு செய்பொருள் - அ வில் உள்ள பொருள்களை சேர்த்து வறுக்கவும்.
8) அதனுடன், வடிகட்டிய அரிசியை சேர்த்து 2 நிமிடங்கள் வறுக்கவும்.
9) பின்பு, செய்பொருள் - ஆ வில் உள்ளவற்றை சேர்க்கவும்.
10) அதனுடன், ஊறவைத்த தண்ணீரை ஊற்றி கொதி நிலைக்கு கொண்டு வரவும்.
11) இந்தக் கலவையுடன் இப்போது, வறுத்த இறால், தக்காளி மற்றும் வெங்காயத்தை சேர்க்கவும்.
12) நன்கு கலந்து விட்டு, அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் நெய்யை சேர்க்கவும்.
13) அரிசி வெந்து தண்ணீர் வற்றும் வரை மூடி வைத்து சமைக்கவும்.
சூப்பர்.
ReplyDeleteசுவையான பதிவு..
ReplyDeleteமருதமூரான் அண்ணே ! யாழினி கற்றுக் கொள்ள இன்னொரு சமையல் குறிப்பும் கொடுத்தாயிற்று.
ReplyDeleteவாங்க சௌந்தர், அழகு குறிப்பு மற்றும் சமையல் குறிப்புக்கு தவறாமல் பின்னூட்டம் இடுகிறீர்கள். ஆனால் கவிதை எழுதலாம் வாங்க என்று அழைத்தால் எஸ்கேப் ஆகிறீர்களே, நண்பா ! இது நியாயமா கவிதை வீதி ? ஹா.. ஹா...
ReplyDelete