கத்திரி உருளை மசாலா
Potato Brinjal Curry
சில சமயம் விருந்தாளிகள் வந்துவிட்டால் செய்யக் கூடிய ஒரு துரிதமான உணவு கத்திரி உருளை மசாலாவாகும். இதில் அடிப்படை காய்கரிகளான கத்திரிக்காய், உருளைக்கிழங்கு மற்றும் முருங்கை உள்ளதால் எளிதில் செய்யக்கூடியதும், ருசியானதும் ஆகும். இதை சாதம் மற்றும் ரோட்டியுடன் ருசிக்கலாம்.
தேவையான பொருள்கள் :
உருளைக்கிழங்கு - 2
கத்திரிக்காய் - 4
முருங்கை - 1
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1 ; சின்னது
இஞ்சி பூண்டு பசை - 1 தேக்கரண்டி
சமையல் எண்ணெய் - 4 தேக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி
உளுந்து - 1/4 தேக்கரண்டி
மஞ்சள் தூள - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள - 1 தேக்கரண்டி
மல்லி தூள - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - 2 கொத்து
கொத்தமல்லி - அலங்கரிக்க
செய்முறை விளக்கம் :
1) உருளை மற்றும் கத்திரியை ஒரு இஞ்ச அகலமான துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். முருங்கை இரண்டு இஞ்ச நீளமான துண்டுகளாக நறுக்கவும்.
2) ஒரு பாத்திரத்தில் சமையல் எண்ணையை சூடாக்கி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்
3) கடுகு வெடித்ததும் சன்னமாக நறுக்கிய வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு பசை சேர்க்கவும்
4) அவை பொன்னிறமானதும், நறுக்கிய கைகறி கலவையை சேர்த்து நன்கு கலக்கவும்
5) பிறகு மஞ்சள் தூள, மல்லி தூள, மிளகாய் தூள சேர்க்கவும்
6) தேவையான உப்பு சேர்த்து, ஒரு கப் நீர் சேர்த்து கலக்கி, மூடி போட்டு சிறு தீயில் பத்து நிமிடம் சமைக்கவும்
7) பிறகு சன்னமாக நறுக்கிய தக்காளியை சேர்த்து நீர் வரரும் வரை திறந்த படி சமைக்கவும்
8) கொத்தமல்லி தூவி பரிமாறவும்
ஆகா.. பார்க்கும்போதே நாவில் எச்சில் ஊறுகிறதே..
ReplyDeleteகருன் சகோ, செய்து சாப்பிட்டால் ஊறிய எச்சில் அடங்கும் ! ஹாஹா....
ReplyDelete