வெளிச்சம்
பார்வையற்றவனிடம் கேட்டு பார்.....
சுரங்க தொழிலாளியிடம் விசாரித்துப்பார்.......
இரவின் தனிமையில், ஊருக்கு உழைக்கும் காவல்காரனிடம் செவிசாய்த்துப்பார்....
தாயின் கர்ப்பத்தில் சுருண்டு படுத்திருக்கும் குழந்தையின் அழுகுரலின் அர்த்தம் தேடு........
இருட்டின் வலிமையும் வலியும் தெரியவரும்......
வெளிச்சம் வாழ்க்கையின் ஒரு பகுதி......
இருட்டு அதன் மறு பகுதி.......
இரண்டின் சுவையும் அறிந்தால்தான்.......
வாழ நமக்கு முழு தகுதி....!!
இருட்டில் தொலைத்த தருணங்களை, வெளிச்சத்தில் தேடு....
விரட்டி வரும் வாழ்வின் சோதனைகளை, நீயும் சற்று விரட்டி ஓடு.
தாய்ப்பாலின் இருட்டு -கள்ளிப்பால்
தாய்நாட்டின் இருட்டு - வாலிபர்களின் வீண் களிப்பால்
ஒளி வேண்டும் ஒளி வேண்டும் என கூச்சல் இடும் முன்பு....
தீவட்டியை பிடிக்கும் உரம் உண்டா நம் கரத்தில் என கேட்டுக்கொள்வோம்.
விடியலின் ஒளிவெள்ளம் நம் மீது படர ஆசைப்பட்டால்......
இரவு பரப்பும் அச்சத்தை தாண்டி வரும் பக்குவம் உண்டா என அறிந்துக்கொள்வோம்.
வெளிச்சத்தின் சுகத்தை மட்டுமே சுகிக்க நினைக்கும் மனங்கள் எல்லாம்.....
இருட்டின் வேதனையை சற்றேனும் தாண்டுங்கள்.
துழாவிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு சகோதரனையும்.........
உங்கள் வலிமையை பகிர்ந்தளித்து தூண்டுங்கள்.
நானும் நல்லதொரு (வெளிச்சம்)விடியலைத்தான் தேடிக்கொண்டு இருக்கிறேன்
ReplyDeleteகீப்ஸ்மைல் சகோ ,கண்டிப்பாக உங்களுக்கு விரைவில் வெளிச்சம் கிட்டும்.
ReplyDelete"velichcham vaazhkayin oru paguthi
ReplyDeleteiruttu adan maru paguthi
irandin suvai arindaaldaan
vaazha namakku tagudhi"
i like these lines very much....... keep it up nice job ......
Kiran, எனக்கும் மிக பிடித்த வரிகள் அவை.
ReplyDelete