Social Icons

.

Tuesday, July 19, 2011

முட்டை பொரியல்


முட்டை பொடிமாஸ் (அ) முட்டை பொரியல்



மிக எளிதாக விரைவில் செய்யக்கூடிய முட்டை பொடிமாஸ், சுவையானதாக மட்டும் இல்லாமல், ப்ரெட், ரொட்டி மற்றும் சாதத்துடன் நன்கு பொருந்தகூடிய ஒரு உணவு பதார்த்தமாகும்.

வேண்டிய பொருள்கள் :

முட்டைகள் - 3
சமையல் எண்ணை - 1 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1 ( நறுக்கப்பட்டது)
இஞ்சி - 1/2 தேக்கரண்டி (நன்கு மசித்தது )
பச்சை மிளகாய் - 1 (நீளமாக நறுக்கப்பட்டது)
குடமிளகாய் - 1/4 கப் (விருப்பமிருந்தால் )
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுந்து - 1/2 தேக்கரண்டி
காய்ந்த வெந்தயக் கீரை  (கசூரி மேத்தி) - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி - 5 கூறுகள் (நன்கு மசிக்கபட்டது )
கறிவேப்பிலை - 1 கூறு (நன்கு மசிக்கபட்டது )
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

1. முட்டைகளை நன்கு கலக்கி அடித்து வைத்து கொள்ளவும்.

2. ஒரு நான்-ஸ்டிக் வாணலியில் எண்ணையை சுட வைத்துகொள்ளவும்.

3. எண்ணை சூடான பின்பு அதில் கடுகு மற்றும் உளுந்தை சேர்க்கவும்.

4. கடுகு வெடித்தவுடன், அதனுடன் காய்ந்த வெந்தயக் கீரையை சேர்த்து, 20 நொடிகளுக்கு வறுக்கவும்.

5. பின்பு அதனுடன், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், குடமிளகாய்,இஞ்சி, கறிவேப்பிலை,மற்றும் கொத்தமல்லியை சேர்க்கவும்.

6. வெங்காயம் பொன் நிறமாக மாறும் வரை 2-3 நிமிடங்களுக்கு சமைக்கவும்.

7. இப்போது அதனுடன், மஞ்சள் தூள் மற்றும் உப்பை சேர்க்கவும்.

8. சில நிமிடங்கள் சமைத்துவிட்டு ,பின்பு சிறிது தண்ணீரை தெளிக்கவும்.

9. இப்போது கலக்கிய முட்டையிலும் சிறிது உப்பு தூவி விட்டு வாணலியில் சேர்க்கவும்.

10. மற்ற பொருட்களுடன் முட்டையும் கலக்கும் வண்ணம் நன்கு கிளறி விடவும்.

11. வேண்டிய பதம் அடையும் வரை நன்கு கிளறிவிடவும்.


4 comments:

  1. சூப்பர்....

    உடனே செய்து சாப்பிட வேண்டும் போல இருக்கிறது...

    ReplyDelete
  2. சௌந்தர், சாப்டீங்களா இல்லையா ?

    ReplyDelete
  3. யாழினி

    உங்களது படைபாற்றலின் கருத்துகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. எந்த பகுதியை படித்தாலும் சுவாரஸ்யமாக உள்ளது. மேலும் நானும் தங்களது படைப்பில் பங்கேற்க விரும்புகிறேன். (தங்களது அனுமதியுடன்).

    ReplyDelete
  4. rkmanoj, வணக்கம் வருக !

    நல்ல பல செய்திகளை கூற முயற்சிக்கும் நாங்கள் என்றும் உங்கள் பங்களிப்பை மனதார ஏற்றுக் கொள்வோம். உங்கள் படைப்புகளை எங்களுக்கு அனுப்பினால், பிரசுரிக்கிறோம்.

    அனால் ஒரே ஒரு நிபந்தனை! உங்கள் சொந்த படைப்பாக இருக்க வேண்டும். நன்றி.

    ReplyDelete

 

வாசித்தவர்கள்

இன்று ...

உங்கள் ஆதரவால் ...!

tamil blogs traffic ranking