Social Icons

.

Friday, July 29, 2011

தண்ணீர் தண்ணீர் .... !



தண்ணீர் தண்ணீர் .... !
Ten Innovative Ways to Save Water !



தங்கள் குடியிருப்பில் குடி நீரை சேமிக்க பத்து புதுமையான வழிகள் :

நாளுக்கு நாள் குடிநீரின் தேவை அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது என்பது நாம் கண்டுணரும் உண்மையாகும். அடிப்படை தேவை நீர் என்பதை அறிந்திருந்தும் வெகுவாக அது வீணாக்கப் படுகிறது. குடிநீர் சிக்கனம் பண விரயத்தை தடுக்கும் என்பதே இக்கால உண்மையாகும். கீழ் காணும் வழிகளில் தண்ணீரை சேமிக்கலாம் :

1)  தானியங்கி தண்ணீர் குழாய்கள் :
புதுமையான மற்றும் ஒரு அருமையான கருவியாக கருதப்படும் தானியங்கி குழாய்கள், நாம் கை கழுவ பயன்படுத்தும் தண்ணீரை மிகவும் சேமிக்க வல்லது. பொதுவாக சோப்புகள் பயன்படுத்தி அதன் பின் சாதாரண குழாய்களில் கை கழுவும் போது 300 முதல் 500 மில்லி வரை தண்ணீர் செலவழிகிறது. இதுவே தானியங்கி குழாய்களில் 60 முதல் 80 மில்லி வரை தான் பயன்படுத்தப் படுகின்றது. தானியங்கி குழாய் என்பது தண்ணீரை அளவோடு வெளிப்படுத்தி கை கழுவ போதுமான அளவு வேகத்தோடு வழியச் செய்யும் ஒரு எளிய கருவியாகும் .



2) சீதோஷணம் குளுமையாக இருக்கையில் நீர் ஊற்றுங்கள் :
வானிலை குளுமையாக காணப்படும் அதிகாலையிலோ அந்தி மாலையிலோ உங்கள் தோட்டம் மற்றும் செடிகளுக்கு நீர் ஊற்றுங்கள். இவ்வாறு செய்வதால் ஊற்றிய நீர் சீக்கிரம் நீராவி ஆகாமல் தடுக்கலாம்



3)  இருவித ஃப்ளஷ்களை கழிவறையில் பயன்படுத்தவும் :
இரண்டு வெவ்வேறு அளவுகளில் நீரை வெளியேற்றும் விதமாக அமைந்த ஃப்ளஷ்களையே கழிவறையில் பயன்படுத்தவும். இக்கருவி சற்றே விலை கூடியதாக இருந்தாலும் பயன்படுத்துவோருக்கு தேர்வு செய்யும் வசதியும் அளித்து நீர் சிக்கனமும் அளிக்கிறது.



4)  பிரத்தியேகமான தண்ணீர் மீட்டர் :
பல்மாடி குடியிருப்புக் கட்டடங்களில் பிரத்யேக தண்ணீர் மீட்டர்கள் நிறுவுவதால் அவரவரின் உண்மையான பயன்பாட்டை அறிவித்து ஆண்டிற்கு சுமார் எட்டு ஆயிரம் காலன் அளவு நீர் சிக்கன படுத்தப்படுகிறது.



5)  தண்ணீர் கசிவுகளைக் கண்காணிக்கவும் :
தண்ணீர் மிக அதிகமாக செலவு ஆகும் வழி இது தான். குழாய்கள், தொட்டிகள் மற்றும் சிங்குகளில் உள்ள கசிவுகளை கவனிக்க அவ்வப்போது சிறிது நேரம் ஒதுக்குங்கள். அவ்வாறு கசிவு காணப் பட்டால் நீர் வரத்தை உடனடியாக அடைத்துவிடவும். பின்பு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை உங்கள் தண்ணீர் மீட்டரை கண்காணிக்கவும். மீட்டர் இப்போதும் ஓடிக்கொண்டிருந்தால் கசிவுகள் இருப்பது உறுதி ஆகிவிடும். சிறிய கசிவுகள் பெரும் அளவு நீரை அன்றாடம் வீணாக்க வல்லது நினைவிருக்கட்டும் !



6)  குறைவாக நீர் பாய்ச்சும் ஷவர்கள் :
தண்ணீர் சேகரிப்பில் குறைந்த அளவு நீர் பாய்ச்சும் ஷவர்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. குழாய்க்கு பதிலாக சமையல் அறை மற்றும் குளியல் அறையில் பயன்படுத்தினால் தற்போது உபயோகப்படும் நீரை விட பாதி அளவே நீர் செலவழியும். அதே போல் உங்கள் ஷவர் குளியலை ஓரிரு நிமிடங்கள் மட்டுமே குறைத்துக்கொண்டால் மாதத்திற்கு 150 காலன்கள் வரை சேமிக்கப் படுகிறது.



7)  குடிநீர் அல்லாத நீரை மறுபடியும் பயன்படுத்தவும் :
குடிக்க உதவாத நீரை தரை கழுவுதல், கழிவறை கழுவுதல் மற்றும் தோட்டத்திற்கு பாய்ச்சுதல் போன்றவைகளுக்காக பயன்படுத்தவும். இது வாஷ் பேசின், வாஷிங் மஷீன் மற்றும் ஷவர்களில் பயன்படுத்தி அதிலிருந்து வெளியேறும் நீரைக் குறிக்கும். இதை சேமித்து வைத்து மறுபடி பயன்படுத்தினால் தண்ணீர் வீணாவதை வெகுவாகக் குறைக்கலாம்.



8)  மழை நீர் சேகரிப்பை ஊக்குவியுங்கள் :
சில மாநிலங்கள் மற்றும் நாடுகளில் மழை நீர் சேகரிப்பு வெகுவாக வலியுறுத்தப் படுகின்றது. 1500 சதுர மீட்டர்கள் வரை பரவி உள்ள எல்லாக் கட்டடங்களிலும் இம்முறை கட்டாயமாக பின்பற்ற படுகிறது. இதை நிறுவும் செலவு சற்று அதிகம் ஆனாலும் இதன் மூலம் வருங்காலத்தில் ஏற்படும் தண்ணீர் கட்டணங்களை மனதில் வைத்தால் மிகவும் மலிவான ஒரு வழிமுறையாக இது கருதப் படுகிறது.



9)  தண்ணீர் தேவைப்படும் விளையாட்டு பொருள்களை தவிர்க்கவும் :
தண்ணீர் தேவைப்படும் விளையாட்டு பொருள்களுக்கு நிரந்தரமாக தண்ணீர் தேவைப்படுவதால் அவ்வாறான பொருள்களை தவிர்ப்பது நல்லது.



10) தண்ணீர் சேமிப்பை ஊக்குவிக்கவும் :
தண்ணீர் சேகரிப்பு பற்றிய குறிப்புகளை தவறாமல் தங்கள் நண்பர்களிடமும் சுற்றி உள்ளவர்களிடமும் பகிர்ந்து கொள்ளவும். தங்கள் குடியிருப்பில் தண்ணீர் சேமிப்புக்கான வழிகளை மேற்கொண்டு அதைப் பற்றிய விழிப்புணர்வை பெரியோர்கள் மற்றும் குழந்தைகளிடமும் பகிர்ந்து கொள்ளவும்.

12 comments:

  1. இன்றை சமூகத்திற்க்கு தேவையான கருத்துக்கள்...

    வாழ்த்தக்கள்..

    ReplyDelete
  2. அசத்தலான படங்கள்...
    கருத்தை கவர்கிறது..

    ReplyDelete
  3. Nice one for the right time,,,, water is vital,,, thanks D,Sivabalan

    ReplyDelete
  4. மக்களுக்கு மிகவும் பயன் தரக்கூடிய தகவல்கள் ......நன்றி !

    ReplyDelete
  5. கவிதை வீதி சௌந்தர், எங்களின் சமூக விழிப்புணர்ச்சி முயற்சிகளுக்கு தவறாமல் ஆதரவு அளிக்கும் உங்களுக்கு மனமார்ந்த நன்றி !

    ReplyDelete
  6. சிவபாலன், உங்கள் கருத்தை கண்டு மகிழ்ச்சி. எங்கு போனீர்கள் ? சில நாட்கள் உங்களை காணவில்லையே ?

    தொடர்ந்து வாருங்கள், நன்றி !

    ReplyDelete
  7. கூடல் பாலா, உங்கள் வருகைக்கு நன்றி தோழா !

    தங்களை போலவே, சமூக அக்கறை கொண்ட தளமாக யாழ் இனிதை கொண்டு செல்ல எத்தனிக்கிறோம். உங்கள் ஆதரவு என்றும் எங்களுக்கு தேவை.

    நன்றிகள் பல !

    ReplyDelete
  8. பயனுள்ள பதிவு..
    பதிவுக்கு நன்றி சகோ..

    ReplyDelete
  9. கருன் சகோ, உங்கள் ஆதரவிற்கு நன்றி !

    ReplyDelete
  10. i am quite impreseed by ur innovative pics of ur topics ...... it stops the reader and forces him to have a glance to ur articles ........well done

    ReplyDelete
  11. Kiran, புதுமைகள் பல புகுத்தி நல்ல விஷயங்களை பகிர்வது யாழ் இனிதின் சிறப்பு என எண்ணித்தான் உழைக்கிறோம். ஆதரவிற்கு மிக்க நன்றி !

    ReplyDelete
  12. 1. மழைநீரை சேமிப்போம்.
    2. ஏரிகள், குளங்களில், கால்வாய்களில் அந்தந்தப் பகுதி மக்களே சேர்ந்து சிறுதொகை செலவிட்டு தூர் வாரி ஆழப்படுத்தலாம்.
    3. உங்கள் பகுதியில் உள்ள ஏரி குளம் குட்டைகளைச் சுற்றி நல்ல மரங்களை வளர்க்கலாம்.
    4. உங்கள் வீட்டிலேயே, மொட்டை மாடியிலேயே தோட்டம் போடலாம்.


    ReplyDelete

 

வாசித்தவர்கள்

இன்று ...

உங்கள் ஆதரவால் ...!

tamil blogs traffic ranking