Social Icons

.

Friday, July 15, 2011

கல்வி - செல்வமா ?? ஓர் ஆய்வு


கல்வி - செல்வமா ?? ஓர் ஆய்வு
Is our Education in the Right Track ?

ஆங்கிலத்தில் "எஜுகேஷன்" என கூறப்படும் கல்வியின் சரித்திரத்தை பின் நோக்கி ஆராய்ந்தால், லத்தீன் மொழியின் "எஜுகேர்" எனும் சொல்லில் இருந்து இது மறுவி வந்தது என அறியலாம். அந்த சொலவடையின் அர்த்தம் "வளர்த்தல்" அல்லது " வெளிகொணர்தல்" அல்லது "முன்னேற்றத்திற்கு வழி வகுத்தல்" ஆகும்.

ஆகையால் தர்க்கவிவாதத்தின் படி, எந்த ஒரு செயல் நம் உடலியல் அல்லது உளவியல் பாங்கின் அடிப்படையில், நம் செயல் திறனை வெளிபடுத்துகிறதோ, அதுவே கல்வியாகும். நடைமுறை விளக்கத்தில், கல்வி என்பது நம் சமுதாயத்தின் கலாச்சார நடத்தை மற்றும் திறமைகளை ஒரு தலைமுறை தங்கள் வருங்கால தலைமுறைக்கு திட்டமிட்டு பகிர்தல் எனவும் கொள்ளலாம்.



கல்வியின் பல்வேறு வகைகள் :
பாடதிட்டத்தின் தன்மை மற்றும் அறிவுசார்ந்த தகவல்களின் அடிப்படையில் கல்வி மூன்று பிரிவாக பிரிக்கப்படுகிறது.

1) முறைவழிக்கல்வி (Formal Education) :
முறைவழிக்கல்வி என்பது, ஒருவர் பள்ளிகளின் மூலம் தொடக்க நிலை, கோட்பாட்டு விளக்கம் மற்றும் தொழில்முறை அடிப்படையில், கற்க பெறுவதாகும்.

இந்த முறை தொடக்கப் பள்ளியில் ஆரம்பித்து, மேல்நிலைப் பள்ளியில் தொடர்கிறது. உயர்நிலைக் கல்வி மற்றும் இதர மேற்படிப்புகள், பொதுவாக கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்படுகின்றது. முறைவழிக் கல்வியின் சில அமைப்புகள் :

போதனை - ஒரு ஆசிரியரின் மூலம் கல்வி கற்க வழி வகுக்கும் அமைப்பை இது குறிக்கும்.

கற்பித்தல் - மாணவர்களுக்கு நேரடியாக கல்வியை பகிர்ந்தளிக்கும் அமைப்பை இது குறிக்கும்.

கற்றல் - கற்பிக்க உதவும் தேவையான தகுதிகள், ஆற்றல் மற்றும் ஞானத்தை ஓர் ஆசிரியர் தங்கள் மாணாக்கருக்கு விளங்கும்படி தன்னை தயார் படுத்திக் கொள்ளும் அமைப்பை இது குறிக்கும் 

2) முறைசாரா கல்வி (Non-Formal Education) :
முறைசாரா கல்வி என்பது சில சமயம் முதியோர் அடிப்படைக் கல்வியையும் குறிப்பதாகும்.  இந்த கல்வி முறை, இளவயதில் பள்ளிக்குச் செல்ல இயலாத வாலிபர்கள் மற்றும் வயோதிகர்கள் கல்வியை பெறும் வகையில் அமைக்கப் பட்டதாகும். இம்முறைக் கல்வி, அடிப்படைக் கல்வியுடன் தொழில் திறனையும் வளர்த்துக் கொள்ள வழிவகுக்கிறது. முறைசாரா கல்வியை சிறு வகுப்பறைகள் மூலமாகவோ சுயமாக கற்பதன் மூலமாகவோ தொடரலாம்.

3) இயல்புவழிக் கல்வி (Informal Education) :
சாதாரணமாக நம் இல்லங்களிலேயே மறைமுகமாக பயிற்றுவிக்கப்படும் கல்வி முறையை இது குறிக்கும். எடுத்துக்காட்டாக, பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு உணவு தயாரிப்பது எப்படி என்றோ, ஒரு நண்பனின் மூலம் கற்றுக்கொள்ளும் ஏதேனும் சிறப்பு வித்தை அறிந்து கொள்ளுவதோ 'இயல்புவழிக் கல்வி' ஆகும். நூல்களின் மூலம் அல்லது கணிப்பொறி மூலம் இயல்பாக நாம் அறிந்து கொள்ளும் யாவுமே இந்த கல்வி முறையே ஆகும். பள்ளிக்குச் செல்லாமல் அல்லது வேறேதும் கல்வி முறையை பின்பற்றாமல் நாம் பெறும் கல்விச்செல்வம் இதற்கு உதாரணம் ஆகும்.

நடைமுறை கல்வி வகைகள் :
தற்காலத்தில்பல்வேறு வித்தியாசமான அணுகுமுறையில் கல்வி கொண்டு செல்லப்படுகிறது. குறிப்பாக அறிவு சார்ந்த முறைகள் இவைகளில் பொதுவாக அமைந்தவை ஆகும்.  அவற்றில் சில :



கல்வியின் கால் தடங்கள் :
கல்வியாளர்களின் கருத்துப்படி, கல்வி என்பது மனிதகுலம் தோன்றிய போதே தோன்றிய ஒன்றாகும். மனிதன் பேச்சு கற்றுகொள்வதற்கு முன்னரே, தான் நினைப்பதை மற்றவருக்கு தெரிவிக்க மற்றும் தன் திறன்கள், கலாச்சார வழக்கங்கள் போன்றவற்றை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் ஒரு ஊடகமாக பயன்படுத்திய அனைத்தும் கல்வியின் வடிவங்களே. கலாச்சாரங்களின் பரிணாம வளர்ச்சி  மற்றும் மனித குலத்தின் வளர்ச்சி , மனிதன் தான் அறிந்துகொண்ட ஞானத்தை பகிர்வதில் தான் மென்மேலும் சிறப்பு பெற்றது.

பண்டைய காலத்தில் எந்த ஒரு முறையான கல்வி வகைகள் இல்லாதபோது, அக்காலத்து மக்கள் வாய்வழியாகவும், செய்கையின் மூலமும் தான் கற்பதை மேற்கொண்டார்கள். தலைமுறைகள் தாங்கி வந்த தகவல்கள் அனைத்தும் கதை வடிவம் பெற்று மற்றொரு தலைமுறைக்கு வந்து சேர்ந்தது. பின்னர் வாய்வழி செய்திகள் குறியீடுகளாக மாறி பின்பு தான் எழுத்து வடிவம் புழக்கத்திற்கு வந்தன. இதன் தொடர்ச்சியாக சமுதாயத்தில் ஏற்பட்ட தகவல் பரிமாற்றம், வணிகம், உணவு சேகரிப்பு, மதகோட்ப்பாடுகள் போன்ற முக்கிய நிகழ்வுகள் எல்லாம் முறையான கல்விவழிகள் மூலமாக வலியுறுத்தப்பட்டன. இவ்வாறு தான் இப்போது நாம் பயிலும் கல்வி முறைகள் பல மாற்றங்களை எதிர்கொண்டு நடைமுறைக்கு வந்தன.



3000BC யிலிருந்து 500BC வரையுள்ள காலகட்டத்திலேயே கிரேக்க நாட்டில் முறையான பள்ளிகள் உருவாகிவிட்டனஅதே போல் வேதங்கள்புராணங்கள், ஆயுர்வேதம், யோகா, கௌண்டில்யரின் அர்த்த்சாச்த்திரம் போன்ற படைப்புகள் இந்திய கல்வி ஞானத்திற்கு மைல்கற்களாக விளங்கின. "குருகுலம்" என்ற கல்விவழியில் இந்தியர்கள் அந்நாளியேயே முறைவழி கல்வியை நிலைநாட்டிவிட்டது சரித்திரம் கூறும் உண்மையாகும்குருகுல காலத்தில் மாணவர்கள் "ப்ரம்மச்சர்ய" பருவத்தை குருவின் இல்லதில் கழித்து கல்வியை கற்று தேர்ச்சிபெற்றார்கள்.

இவ்வாறாக இந்தியாவில் பண்டைய கால கல்வியால் பல மேதைகள் உருவாகி, பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொண்டாலும், சமத்துவம் பற்றிய அறிவு அக்காலத்தில் அரிதாக தான் காணப்பட்டது.

இன்றைய காலத்தில்,பெரும்பாலான நாடுகளின் மக்கள் கல்வியறிவு அற்றவர்களாகவே உள்ளனர்.மக்கள்தொகை வளர்ச்சி மற்றும் கல்வியின் முக்கியத்துவத்தை மனதில் கொண்டு "யுனெஸ்கோ" நிறுவனம், இன்னும் 30 ஆண்டுகளில் சரித்திரத்தில் இதுவரை இல்லாத வகையில் அதிக மக்கள் முறையான கல்வி பெறுவார்கள் என கணித்து திட்டமிட்டதுள்ளது.



அடுத்த பாகத்தில் உலகின் முதல் பல்கலைக் கழகங்கள், பல்வேறு பாடத் திட்டங்கள், அதன் நடைமுறை சாத்தியங்கள் ஆகியவற்றை பற்றி அலசுவோம்.
தொடரும் ......
அடுத்த இடுகைக்கு காத்திருங்கள் !


இந்த கட்டுரையின் இரண்டாம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும் !



7 comments:

  1. நான் மழைக்கு கூட காலெஜ் போனது இல்லை :(::(, யாழினி கல்வியில் இத்தனை வகையா? காதலில் எத்தனை வகைன்னு ஒரு போஸ்டிங் போடுங்க :P:P

    ReplyDelete
  2. Kalvi business ah erukura intha nerathila atha pathi neenga sonna thagavalgal romba intresting. We wait for next edition.

    Thanks ... Siva

    ReplyDelete
  3. @ Keepsmile, மொதல்லே காலேஜ் போயிட்டு படிக்கிறே வழிய பாருங்க சகோ, பின்பு நீங்கள் குறிப்பிட்டு கேட்டிருக்கும் விடயம் உங்களுக்கு தானாகவே புலப்பட கூடும்.

    @ Sivabalan, கல்வியில் உள்ள வியாபார நோக்கினை விளக்க வேண்டி தான் இதைப் போன்ற பதிவுகள். பாராட்டுவதோடு நில்லாமல் மனதளவில் நீங்கள் குடுக்கும் ஆதரவு இதன் பெரும் வெற்றி. நன்றி !

    ReplyDelete
  4. வணக்கம் மதுரை சரவணன்,

    உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  5. RAJESH K, கடந்த 3 மாதங்களாக இந்த வலைப்பூவில் பதிவுகளை சமர்ப்பிக்கிறேன்.

    ReplyDelete

 

வாசித்தவர்கள்

இன்று ...

உங்கள் ஆதரவால் ...!

tamil blogs traffic ranking