Social Icons

.

Monday, July 11, 2011

பூச்சியே வெளியேறு !

பூச்சியே வெளியேறு !

பூச்சிகளற்ற சமையல் அறை- 10 வழிகளில்



மற்ற உயிரினங்களை போல , பூச்சிகளும் தாங்கள் உயிர்வாழ ஏதுவாக, உணவின் இருப்பிடத்தை நோக்கி செல்லும் பாங்குடையவை. ஆகையால், பூச்சிகள் வந்த பின்பு அவற்றை ஒழிப்பதைப் பற்றி சிந்திப்பதை விட, அவை வரும் முன்னரே அதற்குண்டான ஆயத்தங்கள் செய்வது ஒரு நல்ல உத்தி ஆகும்.



உங்கள் சமையல் அறையிலிருந்து பூச்சிகளை அகற்ற கீழ்காணும் 10 வழிமுறைகளை பின்பற்றலாம் :



1) தினசரி உணவிற்கு பிறகு, தவறாமல் பாத்திரங்கள், சமையல் மேடை,  அடுப்பு இவற்றை கழுவி சுத்தப்படுத்துவது நல்லது.

2) உபயோகித்த பாத்திரங்களை இரவு முழுதும் "சிங்கில்" போட்டு வைக்க வேண்டாம். முடிந்தவரை, அவைகளை இரவிலேயே கழுவி வைத்துவிடுங்கள்.



3) உங்கள் வீட்டை அடிக்கடி சுத்தபடுத்தி வையுங்கள். பழைய செய்திதாள்கள், அட்டைபெட்டிகள் மற்றும் காகிதப்பைகளை நீண்ட நாள் வைத்திருப்பதை தவிர்க்கவும்.

4) சமையல் அறையின் அலமாரிகளில் காணப்படும் விரிசல்களை நன்கு அடைத்துவைக்கவேண்டும்.



5) உணவு பொருளையோ, குப்பைகளையோ, திறந்து வைக்காதீர்கள், உயிர் பிழைக்க உணவின்றி தவிக்கும் பூச்சிகள் தாமாகவே நம் வீட்டில் இருந்து வெளியேறிவிடும்.

6) மாவு, ஊறுகாய், மற்றும் பருப்பு வகைகளை, நன்கு மூடிய ஜாடியில் வைத்திருந்தால், அவற்றில் பூச்சிகளின் ஆக்கிரமிப்பு இராது.




7) பூச்சிகளின் இயல்பு உணவிடம் தேடி செல்வதுதான். ஆகையால் உங்கள் வீட்டை சுத்தமாக வைத்திருந்தால், வீட்டிற்குள் பூச்சிகளின் வருகை இருக்காது.

8) வாரம் ஒரு முறை உங்கள் வீட்டை சோப்பு பயன்படுத்தி கழுவி விடுங்கள். இவ்வாறு செய்வதால், தேவை இல்லாத பூச்சிகளின் தொல்லை இன்றி இருக்கலாம்.



9) ஒரு பஞ்சு உருண்டையை "பெப்பர்மின்ட் எண்ணை" யில் முக்கி எலிகள் வருமிடத்தில் வைத்தால், அவற்றின் வாசனையில், எலிகள் நெருங்காது.


10) "சில்வர்ஃபிஷ்"

"சில்வர்ஃபிஷ்" எனும் இறக்கை இல்லாத சிறிய பூச்சி வகை, அடித்தளங்கள், சமையல் அறை, புத்தக அலமாரி போன்ற இடங்களில் காணப்படும். இந்த பூச்சியின் விஞ்ஞான பெயர் "லெப்பிஸ்மா சக்காரினா" ஆகும்.

மீனை போல் வழுக்கும் தன்மையும், வெள்ளி அல்லது வெளிர்நீலம் கலந்த வண்ணத்தில் இவை காணப்படுவதால் "சில்வர்ஃபிஷ்" என்று பெயர் பெற்ற இந்த பூச்சி, சர்க்கரையில் காணப்படும் "கார்போஹைட்ரேட்டை" உணவாக அருந்தும்.



இவைகள் ஈரப்பதம் நிறைந்த இடங்களில்தான் பெரும்பாலும் பல்கிப்பெருகும். 75% முதல் 95% சதவிகிதம் ஈரப்பதம் இவை வளர சாதகமான ஒன்றாகும். 1/2 (அ) 1 இன்ச்  அளவுகொண்ட "சில்வர்ஃபிஷ்" பூச்சிகள் உலர்ந்த உணவுகள், பசைத்தன்மை மிகுந்து காணப்படும் புத்தகங்கள், சுவரொட்டிகள் போன்ற இடங்களில் உயிர்வாழ்ந்து, இனப்பெருக்கம் செய்யும். பருத்தி, பட்டு, "ஸின்தெட்டிக்" துணிகளையும் இவை அரித்துவிடும். இவ்வாறு வீட்டின் பொருள்களையும், உணவுகளையும் கபளீகரம் செய்வதால் "சில்வர்ஃபிஷ்" இல்லங்களில் கேடு விளைவிக்கும் பூச்சி வகையாக கருதப்படுகின்றன.



"சில்வர்ஃபிஷ்ஷை" ஒழிக்க சில வழிகள்

1)  இவைகள் ஈரப்பதத்தில் வாழ்வதால், வீட்டை சுத்தமாக, ஈரமின்றி வைத்திருப்பது மிகவும் நல்லது.

2)  பசைத்தன்மையுள்ள உணவு வகைகளை, நன்கு மூடி வைத்திருங்கள்.

3)  "சில்வர்ஃபிஷ்" புத்தகங்களை தாக்கும் அபாயம் இருந்தால், புத்தக அலமாரியில், சிறிது "டையாட்டம் மண்"  தடவி வைய்யுங்கள். இவ்வாறு செய்தால், அங்கு ஈரப்பதம் இராது.



4) சிறிய மரப்பொறி செய்து, அதன் மீது "ப்லாஸ்டிக் டேப்பை" கொண்டு மூடி பாதிக்கபட்ட இடத்தில் நிறுவி விடுங்கள். எலிபாஷாணஙள் மற்றும் பூச்சிமருந்துகளுக்கு பதிலாக வைக்கப்படும் இவ்வகை மரப்பொறிகள் கரப்பான், "சில்வர்ஃபிஷ்" மற்றும் இதர பூச்சிகளிருந்து உங்கள் வீட்டை பாதுகாக்கும்.

5) இரவில் மரப்பொறியை சுற்றி சிறிது "டால்கம்" பவுடரை தூவி, காலையில் பூச்சிகளின் சுவடுகளை காணலாம். இவ்வாறு செய்வதால், பூச்சிகள் வீட்டில் நுழையும் வழித்தடம் அறிந்து, அவைகளை அடைத்து விட ஏதுவாக  இருக்கும்.



6) வீட்டை அவ்வபோது நன்கு கழுவி துடைத்து, உங்கள் குளியல் அறையையும் உலர்வாக வைத்திருங்கள். முடிந்தால், பூச்சிமருந்து தூவி வைக்கவும்.

7) துணி அலமாரிகள் மற்றும் "சிங்க்கில்" பாச்சாய் உருண்டை வைத்துவிட்டால், பூச்சிகள் வராமல் தடுக்கலாம்.



8) விரிசல்கள், ஓட்டைகள் போன்ற பூச்சிகள் வரும் வாய்ப்புள்ள இடங்களை நன்கு அடைத்து வைக்கவும்.

இது போன்ற வழிகளை பின்பற்றினால் பூச்சிகள் தொல்லையிலுருந்து நிரந்தரமாக விடுபடலாம்........




3 comments:

  1. நல்ல கருத்து;நன்றி. மேற்கூறிய படி சுத்தமாக வைத்திருந்தால் புச்சிகளிடம் மட்டுமில்லமால் பல்வேறு நோய்க்ளில் இருந்தும் விடுதலை. சுகாதாரமான வாழ்க்கைக்கு சுத்தமே ஆதாரம். சுத்தம் சோறு போடும் என்பது பழமொழி

    ReplyDelete
  2. நன்றி கீப்-ஸ்மைல் ! நீங்கள் கூறிய பழமொழியின் விரிவாக்கம் தான் இந்த கட்டுரை. ஆகையால், சுத்தம் என்பதை, எழுத்தில் கொள்ளாமல் எண்ணத்திலும் கொள்வோம். உங்கள் கருத்திற்கு நன்றி.

    ReplyDelete
  3. hahaha! excellent pic of the cockroach i liked it a lot i kw the saying"man handling things " but this is "insect handling things"............ then innovative pics of diff insects revolving around a man......... u r a "maintenance engineer"

    ReplyDelete

 

வாசித்தவர்கள்

இன்று ...

உங்கள் ஆதரவால் ...!

tamil blogs traffic ranking