Social Icons

.

Friday, July 22, 2011

திகைக்க வைக்கும் சூரியன் !!

கேள்வி : எந்த நட்சத்திரம் நமக்கு வெப்பம் அளிக்கிறது ?

சூரியன் எனப்படும் நட்சத்திரம் வெப்ப சக்தியின் வெளிபாட்டால் நமக்கு வெப்பம் அளிக்கிறது.

நம் ஒளி குடும்பத்தின் மையத்தில் உள்ள சூரியன் தான் இருப்பதிலேயே சக்தி வாய்ந்த நட்சத்திரம் ஆகும்.அது நமக்கு ஒளியும் வெப்பமும் அளிக்கிறது. இரவில் தோன்றும் மற்ற நட்சத்திரங்களை போல் சூரியனும் ஒரு நட்சத்திரம் ஆகும். மிகுந்த அனலும், ஒளியும் கலந்த வாயுவை தன்னுள் அடக்கி சூரியன் நமக்கு வெப்பமும் ஒளியும் வழங்கி பூமையை தகுந்த சூட்டுடன் வைத்திருக்க உதவுகிறது.



கேள்வி : சூரியன் எதனால் உருவாகி இருக்கிறது ??

ஹைட்ராஜன் மற்றும் ஹீலியம் என்ற இரு பொருள்கள் அடங்கியது தான் சூரியன்.

இவ்விரு வாயுக்களும் தொடர்ச்சியாக வெப்பத்தை வெளியேற்றுகின்றன. ஆக, அணைந்திடாத ஒரு வலிய வெடிகுண்டு போல் உள்ளது தான் சூரியன் அன்று உவமானமாக கூறலாம்.

மக்கள் சூரியனில் வாழ இயலாது, ஏன் நம் பூமியே சூரியனில் இயங்க முடியாது எனலாம். அதன் மிக தாழ்ந்த வெப்பமே 10000 டிகிரி ஆகும். இந்த வெப்ப அளவின் 1 கோடி மடங்கு சூரியனின் வெப்ப அளவாகும்.




கேள்வி : சூரியனின் ஏன் மஞ்சள் நிறமாக காட்சி அளிக்கிறது ?

எரிசக்தி மற்றும் சூட்டின் காரணமாக சூரியன் மஞ்சள் தோற்றத்தில் காட்சி அளிக்கிறது. நாம் காணும் கோணமும் இவ்வாறு ஒரு நிறத்தை காட்டுகிறது.

தன்னுள் அடக்கியிருக்கும் அதீத வெப்பத்தால் சூரியன் மிகுந்த சக்தியை வெளியேற்றுகிறது, ஆகையால் தான் அது இத்தனை ஒளிமயமாக காணப்படுகிறது. பல்வேறு நிறங்களில் தன் சக்தியை சூரியன் வெளிபடுத்தினாலும்அவற்றில் பெரும்பான்மைனவை நம் கண்களுக்கு மஞ்சள் நிறமாக தோன்றுகின்றன. அதே நேரத்தில் அதிகபட்ச வெப்பமாகவோ, குளிர்ச்சியாகவோ இருந்தால், சூரியன் மற்ற விண்மீன்களை போல நீலம் அல்லது சிகப்பு நிறத்தில் காணப்படுகிறது.

சூரியனின் மஞ்சள் நிறம் நாம் பூமியின் கோணத்திலிருந்து அதை பார்ப்பதனாலும் தோன்றுகிறது. நம் பூமியின் காற்று மண்டலம் ஒளியை ப்லவேறு திசைகளுக்கு சிதறச்செய்கிறது. இதனால் சூரியன் வெளியிடும் நிறங்களில் நீலம் சிதறிப்போய், நமக்கு மஞ்சள், சிகப்பு மற்றும் ஆரஞ்சு வண்ணத்தில் தெரிகிறது. காற்று மன்டலத்தின் சல்லடை இல்லாமல் பார்த்தால் சூரியன் நம் கண்ணுக்கு வெண்மையாக தெரியக்கூடும்.





கேள்வி : சூரிய ஒளி எதனால் ஏற்படுகிறது ?

பூமியின் மேலோட்டத்தில் காணப்படும் மேகங்கள் தூசிகளாலும், வாயுக்களாலும் நிறைந்து சுழல்கின்றன. அவை புவி ஈர்ப்பு விசையினால் பூமியின் பால் இழுக்கப்படுகின்றனஇந்த தூசி மற்றும் வாயுவின் அழுத்தத்தால்,வெப்பம் உருவாகி சிறிய துகள்கள் இணைந்து பெரிய துகள்களாக வடிவெடுக்கின்றன. இவ்வாறு நடப்பதால் நட்சத்திரத்தின் மையத்தில் சக்தி உருபெற்று, அந்த சக்தி ஒளியாக மாறுகின்றது. ஆக சூரியனும் ஒரு விண்மீன் தான், மற்ற விண்மீன்கள் சக்தியால் ஒளிபெறுவதைப்போல சூரியனும் ஒளி வீசுகிறது.

சூரியனின் வெப்பமும், ஒளியும் பூமியின் பல இயக்கங்களுக்கு அத்தியாவசியமான ஒன்றாகும். உதாரணத்திற்கு சூரிய ஒளி தாவரங்களுக்கு உணவாக உள்ளது, அவ்வாறு வளரும் தாவரங்கள் மனித இனத்திற்கு உணவளிக்கிறது. நாம் வாழ தகுதியான ஒரு இடமாக நம் பூமி இருப்பதும் கதிரவனின் வெப்பத்தினால் தான். சூரியன் இருப்பதால் தான் நாம் விழித்திருக்க பகலும், உறங்க இரவும் ஏற்படுகின்றது.




கேள்வி : சூரியனில் புள்ளிகள் எதனால் தோன்றுகிறது ?
சூரியனின் எல்லா பகுதிகளும் ஒரே வெப்பநிலையில் இல்லாமல், சில பகுதிகள் சற்று குளிர்ச்சியாக உள்ளதால் அப்பகுதிகள் இருளாக காட்சி அளிக்கின்றன. இதனால் சூரியனில் புள்ளிகள் போன்ற தோற்றம் உருவாகிறது. இதை நாம் "சூரிய புள்ளிகள்" என அழைக்கிறோம்.






கேள்வி : க்ரஹனம் என்றால் என்ன ? 

சில சமயம் நிலா,பூமி மற்றும் சூரியன் ஒரே நேர்கோட்டில் அமைகின்றனஅவ்வாறு அமையும் போது நிலவின் நிழல் பூமியில் படிகின்றதுஇந்த நிகழ்வை தான் நாம் "கிரஹணம்என்று அழைக்கிறோம்.





கேள்வி : சூரியனை சுற்றி பட்டை உள்ளதா ?

சூரியனை சுற்றி "ஏஸ்டெராய்ட்" என அழைக்கப்படும் பாறைகளின் கட்டிகள் உள்ளன.  இவற்றை "ஏஸ்டெராய்ட் பெல்ட்" என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள். இவைகள் சூரியனை சுற்றி செவ்வாய் மற்றும் வியாழன் கிரகத்தின் இடையில் சுழல்கின்றன. அளவில் மிக பெரிதான "ஏஸ்டெராய்ட்" உருண்டை வடிவமாக இருப்பினும் காண்பதற்கு அவை ஒரு பெரிய உருளைகிழஙுகு போல் உள்ளன. சில வகை "ஏஸ்டெராய்ட்"கள் மலைகளை காட்டிலும் பெரிதானவை ஆகும்.




கேள்வி : சூரியன் இரவில் உறங்குமா ?

நம் பூமி இடைவிடாமல் வட்ட வடிவில் சுழன்று கொண்டிருப்பதால் இரவில் நமக்கு சூரியன் தெரிவதில்லை.

சூரியனின் ஒளி படும் பகுதியில் நாம் இருக்கும் பட்சத்தில் , அதன் ஒளியால் நமக்கு பகல் ஏற்படுகிறது. அதே போல பூமியின் அந்த பகுதி சுழன்று மறுபக்கம் செல்கையில், சூரிய ஒளி படாமல் இருப்பதால் இரவு ஏற்பட்டு எங்கும் இருள் சூழ்கிறது.

நம் இரவு நேரத்தில் சூரியன் பூமியின் மறு பக்கத்தில் ஒளி வீசி கொண்டிருக்கிறான் என பொருள் கொள்ள வேண்டும்.
ஆக சூரியன் எப்போதும் உறங்குவதில்லை, மாறாக அது மறுபக்கத்தில் பகல் ஏற்படுத்துகிறது என்று பொருள்.





கேள்வி : சூரிய வெப்பம் எவ்வளவு ?

சூரியனின் மேல்தளம் தன்னருகில் வரும் உலோக விமானத்தையே உருக்கி விடும் அளவுக்கு வெப்பம் கொண்டது. கொதி நிலையை அடைந்த தண்ணீரை விட 15 மடங்கு வெப்பம் நிறைந்தது எனவும் கூறலாம்.
மேல்தளத்தின் வெப்பம் சுமார் 5500 டிகிரி "ஸெல்ஷியஸ்" அல்லது 9940 டிகிரி "ஃபாரன்ஹீட்" ஆகும். அதன் மைய்யப்பகுதி மேல்தளத்தை விட 2300 மடங்கு சூடானது.





கேள்வி : சூரிய மண்டலம் என்பது என்ன ?

சூரியனை வலம் வரும் கிரகங்கள், சிறிய கோள்கள், "ஏஸ்டெராய்ட்"கள், வால் நட்ச்த்திரங்கள் நிலவுகள் மற்றும் தூசி அல்லது வாயுக்கள் நிரம்பிய படலங்கள் யாவுமே சூரிய மண்டலத்தின் அங்கம் ஆகும்.

சூரியனே இந்த மண்டலத்தின் மைய பகுதியாகும். இம்மண்டலத்தின் முக்கிய அங்கம் சூரியன் தான். நாம் பூமியில் வாழ ஏதுவான அளவு வெப்பம் அளிப்பது சூரியன்.சுமார் 4 கோடி ஆண்டுகள் பழமையானது சூரிய மண்டலம் என அறியப்படுகிறது.

அளவில் சிறிதாக இருப்பதால் "ப்ளூட்டோ" ஒன்பது கிரகங்களின் வரிசையிலிருந்து நீக்கப்பட்டுவிட்டது. கோள்களுக்கு விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் வகுத்த புதிய இலக்கணமே இதற்கு காரணம். தற்போது கிரகங்கள் 8 ஆக மட்டுமே கருதப்படுகின்றன. அவை புதன்வெள்ளி, பூமி, செவ்வாய்வியாழன்சனியுரேனஸ் மற்றும் நெப்ட்யூன் ஆகும்.




கேள்வி : சூரியனை பாதுகாப்பாக காண்பது எவ்வாறு ?
சூரியனை எப்போதும் நேரில் காண்பதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு காண்கையில் பாதிப்புகள் ஏற்படலாம்.

சூரியனை சிறந்த வழிகளில் காண தொலைநோக்கி மூலம் வெள்ளை திரையிலோ, காகிதத்திலோ பிரதிபலிக்க செய்வதாகும். அவ்வாறு உபயோகபடுத்தும் தொலைநோக்கியையும் சூரியனை நோக்கி நேராக காண்பித்தல் கூடாது. ஏனென்றால் அதனால் உறுதியாக நம் கண்களில் பாதிப்பு ஏற்படும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.



2 comments:

  1. யாழினி நீங்கள் என்சைக்ளோபிடியா உருவாக்கும் அளவுக்கு கருத்துக்கள் சேகரித்து வைத்துள்ளிர்கள் போல; வாழ்த்துக்கள், தொடரட்டும்..,

    ReplyDelete
  2. கீப்ஸ்மைல், இது போன்ற தகவல்கள் எல்லாம் நாம் அறிந்த தகவல்கள் தான். ஆனால் மனதில் சரியாக நிறுத்திக்கொள்ளாதவை. மேலும் பல அரிய தகவல்கள் வரும். வாழ்த்துக்களுக்கு நன்றி.

    ReplyDelete

 

வாசித்தவர்கள்

இன்று ...

உங்கள் ஆதரவால் ...!

tamil blogs traffic ranking