Social Icons

.

Saturday, May 28, 2011

கார சட்னி


கார சட்னி (தக்காளி வெங்காய சட்னி)

தக்காளி வெங்காய சட்னி () கார சட்னி பல வித மூலிகைகள் மற்றும் மசாலா பொருள்களை கொண்டு செய்யப்படுவதாகும். இங்கு விளக்கப்பட்டுள்ள செய்முறை எளிதான ஒன்றானாலும் இட்லி, தோசை, ஆப்பம், அடை மற்றும் பெசறட்டுக்கு அற்புதமான சுவை சேர்க்ககூடியதாகும்.




தேவையான பொருள்கள் :

நறுக்கிய தக்காளி - 3
நறுக்கிய பெரிய வெங்காயம்  - 1
காய்ந்த மிளகாய் - 4
உறித்த பூண்டு - 2 பகுதிகள்
புளி -நெல்லிக்காய் அளவு உருண்டை
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
உளுந்து - கால் தேக்கரண்டி
பெருங்காயம் - 1 சிட்டிகை
மஞ்சள் பொடி - 1 சிட்டிகை (இது சட்னிக்கு நல்ல நிறம் கொடுக்கும்)
உப்பு -சுவைகேற்ப்ப
கறிவேப்பிலை - 1 காம்பு
கொத்தமல்லி - கைப்பிடி அளவு


செய்முறை :

சட்னி செய்வதற்கு :

1)  வாணலியில் எண்ணெயை சுட வைத்து, அதில் கடுகு, உளுந்து மற்றும் கறிவேப்பிலையை சேர்க்கவும்.

2)  கடுகு வெடித்தவுடன் பூண்டும் வெங்காயமும் சேர்க்கவும்.

3)  வெங்காயம் பொன் நிறமாக மாறும் வரை வறுத்து விட்டு,அதனுடன் தக்காளியை சேர்க்கவும்.

4)  நன்கு வறுத்த பின் காய்ந்த மிளகாய்,மஞ்சள் பொடி,பெருங்காயம் மற்றும் உப்பை சேர்க்கவும்.

5)  சிறிது நேரத்திற்கு பிறகு, தக்காளி நன்றாக வெந்து, அதன் பச்சை வாசனை நீங்கி இருக்கும்.

6)  அடுப்பை அணைக்க இது தக்க தருணம். இப்போது அதில் புளியையும், கொத்தமல்லியையும் சேர்க்கலாம்.

7)  10 நிமிடங்கள் ஆற வையுங்கள்.

8)  இப்போது நன்றாக அதை விழுதாக்கி ஒரு குவளையில் இட்டு விடுங்கள்.

தாளித்தல் :

9)  ஒரு சட்டியில் எண்ணெயயை சுட வைத்து,அதனுடன் கடுகு மற்றும் உளுந்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

10)  கடுகு வெடித்தவுடன், அதனுடன் கறிவேப்பிலை கலந்து விடுங்கள்.

11)  பின்பு இதனுடன் சட்னியை நன்கு கலந்து பரிமாறுங்கள்


No comments:

Post a Comment

 

வாசித்தவர்கள்

இன்று ...

உங்கள் ஆதரவால் ...!

tamil blogs traffic ranking