Social Icons

.

Saturday, May 28, 2011

புதினா சட்னி


புதினா சட்னி

புதினா சட்னி தென்னிந்திய சிற்றுண்டிகளாகிய இட்லி, தோசைஅடை, ஆப்பம், மற்றும் பெசறட்டுடன் மிகவும் பொருந்திபோகும் ஒரு துணை பதார்த்தமாகும். புற உணவுகளான "கபாப்" மற்றும் "சாண்ட்விச்" உடனும் இது செவ்வனே சேரும். இது ருசியானது மட்டுமில்லாமல்மிகவும் ஆரோக்கியமானதும் கூட. சத்து நிறைந்த் இந்த சட்னி பசி ஊக்கியாகவும் செயல்பட்டு , புதினா என்ற மூலிகை குடும்ப ஆரோகியதிற்க்கும் வழி வகுக்கிறது.






சட்னிக்கு தேவையான பொருள்கள் :

துருவிய தேங்காய் - அரை கோப்பை
புதினா இலைகள் - கால் கோப்பை
பொட்டுக்கடலை - 4 தேக்கரண்டி
பச்சை மிளகாய்  - 3
உறித்த பூண்டு - 1 பகுதி
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
கறிவேப்பிலை - 1 காம்பு
கொத்தமல்லி - கை அளவு
உப்பு - சுவைக்கேற்ப்ப 

தாளிக்க தேவையான பொருள்கள் :

எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
உளுந்து - கால் தேக்கரண்டி
பெருங்காயம் - 1 விள்ளல்
கறிவேப்பிலை - 1 காம்பு

செய்முறை :

1)  சட்னி செய்வதற்கு மேற்கூறிய சட்னிக்கு தேவையான பொருள்களை ஒன்று சேர்த்து மொறுமொறுப்பான விழுதாக்கி கொள்ளுங்கள்.

2)  விழுதை தனியாக ஒரு குவளையில் வைத்துகொள்ளுங்கள்.

3)  தாளிக்க, ஒரு சட்டியில் எண்ணெயயை சுட வைத்து,அதனுடன் கடுகு மற்றும் உளுந்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

4)  கடுகு வெடித்தவுடன், அதனுடன் பெருங்காயமும், கறிவேப்பிலையும் கலந்து விடுங்கள்.

5)  பின்பு இதனுடன் சட்னியை நன்கு கலந்து பரிமாறுங்கள்.


No comments:

Post a Comment

 

வாசித்தவர்கள்

இன்று ...

உங்கள் ஆதரவால் ...!

tamil blogs traffic ranking