Social Icons

.

Saturday, May 28, 2011

பெசறட்டு


பெசறட்டு

சுந்தர தெலுங்கு பேசும் ஆந்திரபிரதேசத்தின் உணவு அடையாளமாகிய பெசறட்டுதோசை வகைகளில் புதுமையான ஒன்றாகும்.பச்சை பயறு ( தெலுங்கில் பெசலூ ) என்கின்ற பருப்பால் பெசறட்டு மாவு செய்யப்படுகின்றது.

 கார சட்னி , புதினா சட்னி அல்லது இஞ்சி சட்னி (தெலுங்கில் அல்லம் சட்னி ) யுடன் பெசறட்டை அருந்தலாம்ஆந்திர மாநிலத்தில் உப்புமாவுடன் பரிமாறப்படும் இது ஒரு முழுமையான உணவாக உண்ணப்படுகின்றது.





செய்பொருள்கள் - () :

பாசி பருப்பு - ஒன்றறை கிண்ணம்.
பச்சரிசி - அரை கிண்ணம்.

செய்பொருள்கள் - () :

கிராம்பு - ஆறு
பட்டை - அரை இஞ்ச்
இஞ்சி - 1 இஞ்ச் அளவு
உறித்த பூண்டு  - 4 விண்டுகள்


செய்பொருள்கள் - () :

நறுக்கிய பெரிய வெங்காயம் - 1
நன்றாக நறுக்கிய பச்சை மிளகாய்  - 2
உதிர்த்த கறிவேப்பிலை   - 1 கொப்பு
கொத்தமல்லி - கை அளவு
எண்ணெயும் நெய்யும் கலந்து  - கால் கோப்பை
மஞ்சள் பொடி  - 1 சிட்டிகை
உப்பு   - சுவைக்கேற்ப்ப


செய்முறை :

1)  செய்பொருள்கள் () வில் கூறப்பட்டுள்ள பொருள்களை 2 மணி நேரம் ஊற வைத்து பின்பு நன்கு நீரை வடித்துவிடவும்.

2)  சிறிது நீர் மட்டுமே கொண்டு இவற்றை மணல் பதத்திற்க்கு மாவாக அரைத்து கொள்ளவும்.

3)  இப்போது செய்பொருள்கள் () வில் கொடுத்துள்ள பொருள்களை மிக்ஸியில் இட்டு அவற்றையும் கெட்டியான பசை ஆக்கி கொள்ளவும்.

4)  ஒரு பாத்திரத்தில் () வின் மாவையும் () வின் பசையும் கலந்து வைத்து கொள்ளவும்.

5)  அதனுடன் நறுக்கி வைத்த வெங்காயம், பச்சை மிளகாய்,கறிவேப்பிலை, கொத்தமல்லி, மஞ்சள் பொடி மற்றும் தேவையான அளவு உப்பும் சேர்த்துகொள்ளவும்.

6)  இவை எல்லாவற்றையும் நன்றாக கலக்கிவிட்டு, 30 நிமிடங்கள் வைத்திருக்கவும்.

7)  தோசைகல்லை அடுப்பில் வைத்து, சிறிது நெய் + எண்ணெய் ஊற்றி, அதை கல் முழுதும் பரப்பி விட்டு பின்பு, காகித துண்டால் துடைத்து எடுத்து விடவும்.

8)  ஒரு கரண்டி மாவை எடுத்து கல்லின் நடுவில் ஊற்றி வெளி வட்டமாக மெல்லிய  வட்ட்வடிவாமாக பரப்பி விடவும்.

9)  ஒரங்களில் எண்ணெயை ஊற்றி சிறிது நேரம் வேக வைக்கவும்.

10) கீழ் பகுதி நன்கு வெந்தவுடன், தோசையை திருப்பி இட்டு மேல் பகுதியை 3 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.

11)  கல்லிலிருந்து அகற்றி பரிமாறவும் () மாறுதலான சுவைக்காக சிறிது உப்புமவை தோசையின் நடுவில் வைத்து தோசையை மடித்துவிட்டு பரிமாறவும்


No comments:

Post a Comment

 

வாசித்தவர்கள்

இன்று ...

உங்கள் ஆதரவால் ...!

tamil blogs traffic ranking