Social Icons

.

Friday, May 27, 2011

முட்டை பிரியாணி



முட்டை பிரியாணி

ஞாயிற்றுகிழமைகளில் குடும்பத்துடன் உண்டு மகிழ முட்டை பிரியாணி ஒரு முழுமையான மற்றும் சுவையான உணவு எனலாம்.






செய்பொருள்கள்  :

2 கோப்பை தரமான பச்சரிசி
5 கோப்பை தண்ணீர்
6 முட்டைகள்
¼  கப் சமையல் எண்ணெய்
2 தேக்கரண்டி நெய்
6 தோல் உறித்த நறுக்கபட்ட பூண்டு வில்லைகள்.
2 பெரிய வெங்காயம்
2 தக்காளி
2 பாதியாக நறுக்கபட்ட பச்சை மிளகாய்
1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு பசை
1 கொத்து புதினா
1 பிரியாணி இலை
1 இஞ்ச் பட்டை
சிறிது சோம்பு
4 கிராம்பு
2 ஏலக்காய்
¼ தேக்கரண்டி மஞ்சள் பொடி
1 தேக்கரண்டி மிளகாய் பொடி
1 தேக்கரண்டி மல்லி பொடி
1 தேக்கரண்டி கரம் மசாலா
சுவைக்கேற்ப்ப உப்பு
1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
கை அளவு கொத்தமல்லி


செய்முறை :

1.  முட்டையை முதலில் வேகவைத்து, அதன் வெளி தோலை உறித்துவிட்டு, முட்டையின் வெள்ளை பகுதியில் நான்கு பக்கத்திலும் சிறிய துளை இட்டு கொள்ளவும்.

2.  அரிசியை நன்கு கழுவி, நீரில் 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.


3.  வெங்காயம் , தக்காளியை நறுக்கி கொள்ளவும்.

4.  ஒரு குக்கரில் நெய்யும், எண்ணெயையும் சுட வைக்கவும்.

5.  சூடான பிறகு, பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் சோம்பை வறுக்கவும்.

6.  இவைகள் வெடித்தபின் அதனுடன் பூண்டும் பச்சை மிளகாயும் சேர்த்து வறுக்கவும்.

7.  பின்பு அதில் இஞ்சி பூண்டு பசையுடன் வெங்காயத்தை சேர்க்கவும்.

8.  வெங்காயம் பொன் நிறமாக வறுபட்ட பிறகு, தக்காளி மற்றும் புதினா இலையை போடவும்.

9.  இப்போது மஞ்சள் பொடி,மிளகாய் பொடி, மல்லி பொடி மற்றும் கரம் மசாலா பொடியை சேர்க்கவும்.

10.  நன்கு வறுத்து விட்டு, முட்டையும், தேவையான அளவு உப்பையும் போடவும்.

11.  5 நிமிடங்களுக்கு வதக்கிவிட்டு அதனுடன் ஊற வைத்த அரிசியை சேர்க்கவும்.

12.  2 நிமிடங்கள் அரிசியை உதிர்காமல் வதக்கி விட்டு சிறிது தண்ணீர் கலக்கவும்.

13.  இதனுடன் நறுக்கிய கொத்தமல்லியும், எலுமிச்சை சாறையும் சேர்க்கவும்.

14.  தண்ணீர் கொதித்த உடன், சுவை மற்றும் காரம் சோதித்துகொள்ளுங்கள்.

15.  குக்கரை மூடிவிட்டு அரிசி முழுதும் வெந்து, தண்ணீர் முழுதும் காயும் வரை சமைக்கவும்.

16.  10 நிமிடங்கள் வைத்து இருந்து ,அதன் பின்பு சூடாக வெங்காயம், வெள்ளரி மற்றும் தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.


No comments:

Post a Comment

 

வாசித்தவர்கள்

இன்று ...

உங்கள் ஆதரவால் ...!

tamil blogs traffic ranking