Social Icons

.

Wednesday, November 7, 2012

சுமேரிய நாகரீகம்

 
கடந்த பதிவில் சிந்து சமவெளி நாகரீகம் பற்றி அறிந்துகொண்டோம். நம் இந்திய துணைக்கண்டத்தில் செழித்தோங்கிய இந்த நாகரீகத்தை போலவே உலகின் மற்ற பகுதிகளிலும் மக்கள் கூட்டம் பல பல்வேறு நாகரீகங்களை தோற்றுவித்துக்கொண்டிருந்தனர்.
 
வாழ்வு, கலை, பிழைப்பு ,வீழ்ச்சி என அந்த நாகரீகளும் மனிதர்களுக்கு பெரும் பாடமாக அமைந்தன. அவ்வாறு அமைந்த நாகரீகங்களில் மிக முக்கிய இடம் பெற்ற ஒரு நாகரீக வளர்ச்சியை பற்றித்தான் இப்போது நாம் அறிந்துகொள்ள முற்படுகிறோம்.
 
ஆம்....இம்முறை சுமேரிய நாகரீகத்தை பற்றி அறிந்து கொள்வோமா நன்பர்களே ..... 
 
சுமேரிய நாகரீகம் - ஒரு சிறு குறிப்பு
செம்புக்காலம் மற்றும் ஆரம்ப வெண்கல காலத்தில் தெற்கு மெசபடோமியா,  நவீன ஈராக்கில் ஒரு பண்டைய வரலாற்று பகுதியில் சுமேரியா இருந்தது. இது "நாகரீக அரசர்களின் நிலம்" அல்லது "சொந்த நிலம்" என்றும் அழைக்கப்பட்டது.  சுமேரியர்கள், இந்த நாகரீகம், வரலாற்றில் ஒருமித்த மூலமாகவும் முதல் மனித நாகரீகமாகவும் இருந்தது.
 
 
லகாஷ் நகரம் 
 
மூலம்
மத்திய கிழக்கில் தற்போதைய ஈராக் பகுதி அந்த காலத்தில் "செழுமையான பிறை" ( Fertile Crescent ) என அழைக்கப்பட்டது. அப்பகுதியில் வேட்டையாடி சேகரித்து வாழ்ந்த மக்கள், தோட்டங்களை வளர்க்க தொடங்கினர்.
கிமு 7000 ல் விவசாயம் தொடங்கியது, அதற்கு நிரந்தரமான வசிப்பு இன்றியமையாத தேவையாக இருந்ததது.
 
கிமு 4500 ல்"உபைடியன்" என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் பெயரிடப்பட்ட மக்கள், பாரசீக வளைகுடாவில் கலக்கும் டிக்ரிஸ் மற்றும் யுஃபரேடிஸ் நதிக்கரையோர நகரங்களில் வாழ்ந்தார்கள். அவர்கள் சதுப்பு நிலங்களை செதுக்கி விவசாயம் மேற்கொண்டார்கள். இவ்வாறு அமைக்கபட்ட பகுதி "மெஸோபடாமியா" (கிரேக்க மொழியில் இரு நதிகளுக்கு இடைபட்ட பகுதி) என்று அழைக்க பெற்றது.
 
 
 
கிமு 4000ல் காஸ்பியன் கடல் பகுதியை சுற்றி வாழ்ந்து வந்த சுமேரியர்கள் மெஸோபடாமியாவை வந்தடைந்தனர்.கிமு 3800 வாக்கில் சுமேரியர்கள் தெற்கு மெஸோபடாமியாவை உபைடியன்களை நீக்கிவிட்டு ஆக்கிரமித்து கொண்டார்கள்.
உபைடியர்களை விட சுமேரியர்களின் வாழ்க்கை முறை மேம்பட்டதாக இருந்ததாலும், அவர்கள் மக்கள் தொகை அதிகரித்து போனதாலும் ஒரு நாகரீகமாக தோற்றம் பெற்றன. நகரம் என்ற சொல்லிலிருந்து நாகரீகம் எனும் சொல் பிறந்தது
 
வளர்ச்சி
சுமேரில் முதலில் மேலோங்கிய நாகரீக சக்தியாக உபைடியன்கள் விளங்கினர். வாழும் சூழலை தங்கள் வசமாக்கி கொண்டது தான் அவர்களின் மிகப்பெரிய சாதனையாக விளங்கியது. யுஃபரேட் பகுதியில் உள்ள தாழ் நிலங்களை காயவைத்து, வாய்க்கால்கள் வெட்டி தங்கள் தேவைக்கேற்ப அவர்கள் அந்நிலத்தை உபயோகபடுத்தி கொண்டார்கள். நில வளங்களை நன்கு பயன்படுத்தி உலக வரலாற்றில் முதன்முறையாக அவர்கள் உழுது விவசாயம் செய்தார்கள்.
 
 
சக்கரம் கண்டுபிடிப்பு 
 
நிலவளம் நிறைந்திருந்தாலும் கணிம மற்றும் உலோக வளங்கள் அங்கு குறைவாகவே தான் காணப்பட்டன, ஆகையால் அவர்கள் உலோகங்களை இறக்குமதி செய்தார்கள். உலகின் மற்ற பகுதிகளிலிருந்து இவ்வாறு வர்த்தகம் செய்ய ஏதுவாக படகுகள் வடிவைமைதார்கள்.பண்டமாற்று முறையையும் முதன்முதலில் அமல்படுத்தினார்கள்.ஏர் கலப்பைகள் கண்டுபிடிப்பை தொடர்ந்து சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டது. அச்சக்கரங்களின் உதவியால் மாடுகள் மீது கலப்பையை பூட்டி நிலம் உழுதார்கள். குயவன் சக்கரமும் கண்டுபிடிக்கபட்டு பானைகள் செய்யப்பட்டன. சக்கரத்தின் உதவியால் 3000 அண்டுகள் முன்னரே அவர்களின் போக்குவரத்து இந்திய எல்லை வரையும் செவ்வனே நீண்டு சென்றது.
 
வாழ்க்கை முறை
சுமேரியர்களின் நகர மாநில அரசாங்கம் கடவுளின் ஆட்சியாக கொண்டு செயல்பட்டன என்று தான் சொல்லவேண்டும். ஒவ்வொரு சுமேரிய நகரத்திற்கும் தனிபட்ட கடவுள் மற்றும் தனிபட்ட ஆளுனர்களும் அமைத்துகொண்டார்கள். ஆயினும் சுமேரிய தலைநகரமான "உர்"-இன் அரசனுக்கு தான் எல்லோரும் பொதுவாக காணிக்கைகள் செலுத்தினர்.
சுமேரியாவில் குறைந்தபட்சம் 12 நகரங்கள் தழைத்தோங்கின. தனித்தனியான சுவர்கள் அமைத்த நகரங்களாக அவை அமைந்தன.அவற்றில் "உர்" "உருக்""கிஷ்" மற்றும் "லகாஷ்" முக்கிய நகரங்களாக விளங்கின. 24000 வரை மக்கள் தொகை கொண்ட "உர்" சுமேரியாவின் மிக பெரிய நகரமாக கருதப்பட்டது. அங்கு முக்கிய கடவுளாக வணங்கபட்டது "நன்னா" என்றழைக்கபட்ட சந்திரன்.  70 அடி உயரம் கொண்ட கோபுரம் நன்னா கோவிலில் காணப்பட்டது. அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைந்த ராஜ கோபுரங்கள் அகழ்வாராய்ச்சியின் சாட்சியாக விளங்குகின்றன.
 
 இனன்னா தேவதை 
மெஸோபொடாமையாவின் மற்றுமொரு பெரு நகரமாகிய உருக்கில் 6 மைல் நீள பெருஞ்சுவர் ஒவ்வொரு 35 அடிகளில் பாதுகாப்பு கோபுரங்களுடன் கட்டபட்டது. நகரத்தின் மையத்தில் அந்நகரத்தின் கடவுளின் கோவில் இருந்தது. நகரத்தை சுற்றி தானியங்களின் விளைநிலங்கள், ஈச்சம்பழ தோட்டங்கள் மற்றும் மேய்ச்சல் நிலங்கள் காணப்பட்டன.
 
 
ராஜகோபுரத்தின் மாதிரி வடிவம் 
 
பொதுமக்கள், நிலச்சுவான்கள் மற்றும் அடிமைகள் என பல்வேறு மக்கள் அங்கு வாழ்ந்து வந்தனர். 90 விழுகாடு மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டனர். கோவில்களிலும் நிலச்சுவான்கள் வீடுகளில் அடிமைகள் பணிக்கு அமர்த்தபட்டனர்.  நெல்லிடித்தல் மற்றும் நெய்தல் போன்ற பொது வேலைகள் அவர்களுக்கு தரபட்டன.
 
சிறப்பம்சங்கள்
1)            எரிடுஎன்று அழைக்கபட்ட சுமேரிய நகரம் உலகின் முதல் வளர்ந்த நகரமாக விளங்கியது.  அந்நகரத்தில் மூன்று விதமான வெவ்வேறு கலாச்சாரங்கள் இணைந்தன. மண் குடிசைகளில் வாழ்ந்த விவசாயிகள் , கொட்டகைகள் அமைத்து வாழ்ந்து வந்த நாடோடி மேய்ப்பர்கள் மற்றும் நதியோர நிலங்களில் நாணல் குடிசைகள் அமைத்து வாழ்ந்த சுமேரியர்களின் முன்னோர்களாக கருதபட்ட மீன்பிடிக்கும் மக்கள் என மூன்று வித மக்களின் கலாச்சாரமும்  எரிடு நகரத்தில் காணப்பட்டன.
 
 

2)               புகழ்பெற்ற தலைவனாக கருதபட்ட கில்கமேஷ் வாழ்ந்த நகரமாக உருக்கருதப்பட்டது. அத்தலைவனை பற்றி உலகின் மிக பழமையான புத்தகமான "கில்கமேஷின் காவியம்" எனப்படும் நூலில் எழுதப்பட்டுள்ளது.
 
 
 
3)              தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருத்துப்படி சுமேரியர்களின் எழுத்து வடிவம் தான் உலகின் முதல் எழுத்து வடிவமாகும். சித்திரங்கள் வடிவில் தோன்றி பின்பு எழுத்துக்கள் சுமேரியர்களால் கண்டுபிடிக்கபட்டு, தங்கள் வர்த்தக கணக்கிற்காக அவர்கள் பயன்படுத்திகொண்டார்கள். உலகம் அறிந்த முதல் இலக்கியம் அங்கு தான் தொடங்கியது. தன் கைவிரல்கள் பயன்படுத்தி பத்து பத்தாக கணக்கு வடிவம் மேற்கொண்டவர்கள் சுமேரியர்கள்.
 
 
 
 
4)             சூரிய வருடத்தை காலகட்டமாக எடுத்துக்கொண்டு சுமேரிய மதகுருக்கள் 12 சந்திர மாதங்களும் 3 வருடங்களுக்கு ஒரு முறை 1 லீப் வருடத்தையும் வகுத்து நாள்காட்டியை வடிவைமைத்தார்கள். இதனை அடிப்படையாக கொண்டுதான் தற்போது நாம் பின்பற்றும் வான் சாஸ்த்திரம், நிமிடங்கள், நொடிகள், மணி என்று கால அளவுகள் தோன்றின. சட்டமும் நீதிமுறைகளும் சுமேரியர்களால் தான் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் தான் பிற்காலத்தின் வந்த பாபிலோனிய சட்டங்கள் இயற்றபட்டன
 
 
செப்பேடில் வான் சாஸ்திரம் 
 
 
மன்னர் ஆட்சி
ஒரு காலகட்டத்தில், சுமேரிய நிலபகுதிகள் கடல்நீரின் ஆதிக்கத்தில் மூழ்க தொடங்கின.  உப்பு படிந்த நிலங்களில் சுமேரியாவின் முக்கிய தொழிலான விவசாயம் வெகுவாக பாதிக்கப்பட்டது. மக்களில் வாழ்க்கை தரம் மெதுவாக குறைய தொடங்கியது. இதனால் அவர்கள் பசி, உணவு தட்டுபாடு மற்றும் நோய்களால் பாதிக்கபட்டனர்.
 
பலவீனமான சுமேரியர்களை "சிமிடிக்" இன மக்கள் போர் மூலம் ஆக்கிரமித்து கொண்டனர்.  சிமிடிக் இன மன்னன் கிஷ் நகரத்தை ஆளதொடங்கினார். சிறந்த போர் தந்திரங்களை மேற்கொண்டு அவர் சுமேரியாவின் பெரும் பகுதியை தன்வசமாக்கினார். பின்பு சுமேரியவின் "நிப்புர்" நகர மன்னனை தோற்கடித்து நிப்புர் நகரத்தை ஆண்டார். அந்நகரத்தின் கடவுளாகிய "என்லில்" ஆசியினால் தான் தன் ஆட்சி அமைகிறது என்று அம்மன்னன் தீர்க்கமாக நம்பினார். பின்னாளில் அம்மன்னன் எல்லாம்வல்ல சார்கன் என அழைக்கபட்டார். மிக சிறந்த ஆட்சி புரிந்த சார்கன் மன்னரின் இறப்பிற்கு பின் அவர் சந்ததிகள் சுமேரியாவை ஆண்டுவந்தனர். 
 
 
மாமன்னன் சார்கோன்  
 
வீழ்ச்சி
சார்கன் மன்னரின் தலைமுறைகள் ஆட்சியின் முடிவில் சுமேரியாவை சுற்றியுள்ள மற்ற அரசாங்கங்கள் சுமேரியாவை தாக்கி சிதைக்க தொடங்கின.கிமு 1950 வரை சுமேரிய நாகரீக காலம் நிலைத்தது.
சுமேரிய நாகரீகத்தின் வீழ்ச்சிக்கு மிக முக்கிய காரணங்களாக கருதப்படுவபவை கீழே குறிப்பிடப்பட்டுள்ளவை ஆகும்
 
1.சுமேரிய ராணுவத்தை சரியாக பராமரிக்க ஒரு சிறந்த தலைமை இல்லாதது.
2.சுமேரியாவை சுற்றியிருந்த கடல்களில் உப்பு தன்மை கூடியது
3.சுமேரிய விவசாய மக்கள் தங்கள் விளைநிலங்களை தரிசாகும் அளவுக்கு கைவிட்டது.
ஆக சுமேரிய நாகரீகம் ஒரு முடிவுக்கு வந்ததில் பெரும் பங்கு புற காரணிகள் என்று தோன்றினாலும் அந்த அஸ்தமனத்தின் வேர்கள் சமுதாயத்தின் உள்ளிருந்த பலவீனங்கள் என்றும் சொல்லலாம் நண்பர்களே.
 
 

Tuesday, November 6, 2012

குறள் # 9

குறள் # 9
பிரிவு :அறத்துப்பால் / துறவறவியல்
அதிகாரம் : 296 / வாய்மை
 
பொய்யாமை யன்ன புகழில்லை; எய்யாமை
எல்லா அறமுந் தரும்.
தெளிவுரை
ஒருவனுக்கு பொய் இல்லாமல் வாழ்தலை விடப் புகழ் நிலை வேறொன்றும் இல்லை, அஃது அவன் அறியாமலேயே அவனுக்கு எல்லா அறமும் கொடுக்கும்.
 
ஆங்கிலத்தில்
 
There is no praise like the praise of never uttering a falsehood: without causing any suffering, it will lead to every virtue.
 
 
 
 
 
 

பேசுவது கிளியா ?


பேசுவது கிளியா ?

ஒருவர் தன் வீட்டில் வளர்க்க கிளி வாங்க விரும்பினார். தன் வெகு நாள் ஆசையை பூர்த்தி செய்ய கிளிகள் விற்கும் கடைக்கு சென்றார். பல்வேறு வடிவில், நிறங்களில் அங்கு கிளிகள் இருந்தன. அங்குள்ள விற்பனையாளனிடம் சென்று விசாரிக்க துவங்கினார்.

சில கிளிகளின் கழுத்தில் ஆயிரம், இரண்டாயிரம் என விலை தகடுகள் மாட்டி இருந்தன. அவர் பார்வையிட்டு கொண்டே போனார். அப்போது சில கிளிகள் கழுத்தில் நம்ப முடியாத விலைகள் காணப்பட்டன. ஆச்சரியத்துடன் அவர் விற்பனையாளனிடம் விசாரித்தார்.

"ஏன்ப்பா ! இந்த கிளி அப்படி என்ன செய்யும், இருபதாயிரம்னு விலை போட்டு இருக்கே ? " என கேட்டார்

அதற்கு அந்த விற்பனையாளன்

"சார், இந்த கிளிக்கு பகவத் கீதை மனப்பாடமா தெரியும் சார். அப்படியே ஒப்பிக்கும்." என கூறினான்.

"அப்படியா ? பரவா இல்லையே ! சரி அந்த கிளி கழுத்துல முப்பதாயிரம் விலை போட்டு இருக்கே, அது என்ன பண்ணும் ? " என விசாரித்தார்.

"சார், அது இன்னும் சூப்பர் கிளி சார். கீதை, குரான், பைபிள் எல்லாம் அர்த்ததோட சொல்லும் சார்"

"அஹா ! அதிசயமனான கிளிதான்ப்பா" என கூறி மேலும் பார்வையிடும் பொழுது ஒரு சிறிய நோஞ்சான் கிளி கழுத்தில் ஒரு லட்சம் என்ற விலையை கண்டார்.

"என்னப்பா, இந்த கிளி பாக்குறதுக்கே நல்லா இல்லயே, ரொம்ப சின்னதா, நோஞ்சானா வேற இருக்கு, இதுக்கு எதுக்குப்பா ஒரு லட்சம் ? இது அப்படி என்னப்பா ஸ்பெஷலா செய்யும் ? " என கேட்டார்.

அந்த விற்பனையாளன் " சார் ! எனக்கு தெரிஞ்சி இதுக்கு கீதை, குரான் எல்லாம் சொல்ல தெரியாது. சும்மா தான் இருக்கும். இறக்கை கூட உதிர்ந்து போச்சு. ஆனா , அந்த ரெண்டு கிளியும் இத தான் "எஜமான்" னு கூப்பிடும் சார் !, அதுக்காக தான் சார் இது விலை ஒரு லட்சம்" என போட்டானே ஒரு போடு. நம் ஆசாமி மயங்கியே விட்டார்.

நீதி : பதவிக்கும் , அறிவிற்க்கும் தொடர்பில்லை ! நம் நகைச்சுவை வித்தகர் சந்திரபாபு பாணியில் சொன்னால் "புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை, வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை"





 

வாசித்தவர்கள்

இன்று ...

உங்கள் ஆதரவால் ...!

tamil blogs traffic ranking