Social Icons

.
Showing posts with label சைவம் - துணைக்கறி. Show all posts
Showing posts with label சைவம் - துணைக்கறி. Show all posts

Friday, August 5, 2011

வள்ளிகிழங்கு பொரியல்



வள்ளிகிழங்கு பொரியல்
Sweet Potato Fry

ஒரு காரமான ஆனால் இனிப்பான, ருசியான துணைக்கறி சர்க்கரை வள்ளிகிழங்கு பொரியல் ஆகும். சூடான ரசம் சாதத்துடன் அருமையாக சுவைக்கும் இதை  கண்டிப்பாக செய்து பார்க்குமாறு பரிந்துரைக்கிறேன்.



தேவையான பொருள்கள் :

சர்க்கரை வள்ளி கிழங்கு – ¼ கிலோ
சமையல் எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
பெரிய வெங்காயம் – 1 ; சன்னமாக நறுக்கியது
பூண்டு - 6 பல்
காய்ந்த மிளகாய் - 4 ; பாதியாக நறுக்கப்பட்டது
கடுகு – ½ தேக்கரண்டி
சீரகம் – ½ தேக்கரண்டி
மஞ்சள் தூள் – ¼ தேக்கரண்டி
பெருங்காயம் – ½ தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
கொத்துமல்லி தழை - கை அளவு ; சன்னமாக அரிந்தது
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

1) வள்ளிக்கிழங்கை கழுவி சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி வைக்கவும்

2) ஒரு வாணலியில் எண்ணையை சூடாக்கி கடுகு சீரகம் தாளிக்கவும்

3) அவை வெடித்தவுடன், பூண்டு காய்ந்த மிளகாய் சேர்க்கவும்

4) பிறகு நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்த்து வதக்கவும்

5) வெங்காயம் பொன்னிறம் ஆகும்வரை 2-3   நிமிடங்கள் சமைக்கவும்

6) வள்ளிகிழங்கு துண்டுகளையும் மஞ்சள் தூளையும் சேர்த்து வதக்கவும்.

7) சிறிது நேரம் நன்றாக வதக்கி, மூடி போட்டு 3-4 நிமிடம் சமைக்கவும்

8) ½ கப் நீர் தெளித்து கிழங்கு வேகும் வரை சமைக்கவும்

9) மூடியை திறந்து, நீர் வற்றும் வரை சமைத்து, சிறு தீயில் 10 நிமிடம் பிரட்டி விடவும்

10)சிறிது பொன்னிறமாக வறுபட்டதும், மல்லி தழை தூவி பரிமாறவும் .


Wednesday, July 27, 2011

கத்திரி உருளை மசாலா


கத்திரி உருளை மசாலா
Potato Brinjal Curry

சில சமயம் விருந்தாளிகள் வந்துவிட்டால் செய்யக் கூடிய ஒரு துரிதமான உணவு கத்திரி உருளை மசாலாவாகும். இதில் அடிப்படை காய்கரிகளான கத்திரிக்காய், உருளைக்கிழங்கு மற்றும் முருங்கை உள்ளதால் எளிதில் செய்யக்கூடியதும், ருசியானதும் ஆகும். இதை சாதம் மற்றும் ரோட்டியுடன் ருசிக்கலாம்.



தேவையான பொருள்கள் :

உருளைக்கிழங்கு - 2
கத்திரிக்காய் - 4
முருங்கை - 1
பெரிய வெங்காயம் - 1 
தக்காளி - 1 ; சின்னது
இஞ்சி பூண்டு பசை - 1 தேக்கரண்டி
சமையல் எண்ணெய் - 4 தேக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி
உளுந்து - 1/4 தேக்கரண்டி
மஞ்சள் தூள - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள - 1 தேக்கரண்டி
மல்லி தூள - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு 
கறிவேப்பிலை - 2 கொத்து
கொத்தமல்லி - அலங்கரிக்க 

செய்முறை விளக்கம் :

1)  உருளை மற்றும் கத்திரியை ஒரு இஞ்ச அகலமான துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். முருங்கை இரண்டு இஞ்ச நீளமான துண்டுகளாக நறுக்கவும். 
2)  ஒரு பாத்திரத்தில் சமையல் எண்ணையை சூடாக்கி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்

3)  கடுகு வெடித்ததும் சன்னமாக நறுக்கிய வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு பசை சேர்க்கவும் 

4)  அவை பொன்னிறமானதும், நறுக்கிய கைகறி கலவையை சேர்த்து நன்கு கலக்கவும்

5)  பிறகு மஞ்சள் தூள, மல்லி தூள, மிளகாய் தூள சேர்க்கவும்

6)  தேவையான உப்பு சேர்த்து, ஒரு கப் நீர் சேர்த்து கலக்கி, மூடி போட்டு சிறு தீயில் பத்து நிமிடம் சமைக்கவும்

7)  பிறகு சன்னமாக நறுக்கிய தக்காளியை சேர்த்து நீர் வரரும் வரை திறந்த படி சமைக்கவும்

8)  கொத்தமல்லி தூவி பரிமாறவும்


Thursday, July 21, 2011

வெந்தய கீரை உருளை



வெந்தய கீரை உருளை

வெந்தய கீரை உருளை, புதிதாக பறிக்கப்பட்ட வெந்தய கீரை இலைகள் மற்றும் வேக வைத்த உருளை கிழங்கு கொண்டு தயார் செய்யப்படும் ஒரு ருசியான துணைக்கறி ஆகும்.

இந்த செய்முறையில் வெந்தய கீரைக்கு பதிலாக பசலை கீரை அல்லது சோயக் கீரை உபயோகிக்கலாம்.

அதே போல மாமிச பிரியர்கள், உருளைக்கு பதிலாக வேக வைத்த ஆட்டுக்கறி துண்டுகளை உபயோகிக்கலாம். மற்ற செய்முறை எல்லாம் ஒன்று தான்.




தேவையான பொருள்கள் :

கீரை - 2 கப்

உருளை கிழங்கு - 2

பெரிய வெங்காயம் - 1

இஞ்சி பூண்டு பசை - 1 மேஜைக்கரண்டி

கடுகு - 1/4 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

மல்லி தூள் - 1 தேக்கரண்டி

சமையல் எண்ணை - 4 மேஜைக்கரண்டி

எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழை - அலங்கரிக்க


செய்முறை :

1.  கீரை இலைகளை நன்கு கழுவி, வடிகட்டி, அவற்றை சன்னமாக நறுக்கி கொள்ளவும்.

2.  உருளைக் கிழங்கை வேக வைத்து, தோலுரித்து 1 அளவுள்ள சதுர பாகங்களாக வெட்டி கொள்ளவும்.

3.  பெரிய வெங்காயத்தை தோலுரித்து சன்னமாக நறுக்கி கொள்ளவும்.

4.  ஒரு வாணலியில் எண்ணை சேர்த்து கடுகை தாளிக்கவும்

5.  அவை வெடித்தவுடன், வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

6.  பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அவை பொன்னிறமானதும், சன்னமாக நறுக்கிய கீரை மற்றும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து கலக்கவும் .

7.  நன்கு கலந்து அரை கப் நீர் ஊற்றி, அடுப்பை சிறு தணலில் வைத்து 10 நிமிடம் சமைக்கவும்

8. அவை ஒரு தொக்கு பதத்திற்கு வந்தவுடன், உருளை சேர்த்து பாத்திரத்தை மூடி 3 நிமிடம் சமைக்கவும்.

9.  அடுப்பை அணைத்து, எலுமிச்சை சாறு கலந்து, கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும்

10. நன்கு கலந்து, 10 நிமிடம் பொறுத்து, மசாலா எல்லாம் உருளை கிழங்கில் இறங்கியவுடன், சாதம் புலாவ் மற்றும் ரொட்டியுடன்  பரிமாறவும். 


                      

பசலை கீரை





சோயக் கீரை



Thursday, July 14, 2011

மிளகு காளான்


மிளகு காளான்
Pepper Mushroom Fry




குடமிளகாய் மற்றும் காளான் கொண்டு செய்யப்படும் இந்த எளிய உணவு வகை ரொட்டி மற்றும் புலவுடன் சேர்ந்தால் நாவூறும் சுவை தரும்.

வேண்டிய பொருள்கள் :

நன்கு கழுவி, நறுக்கப்பட்ட காளான்கள் - 12 - 15
வெட்டப்பட்ட குடமிளகாய் - 2-3
நறுக்கிய பெரிய வெங்காயம் - 2
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
சமையல் எண்ணை - 1/4 கப்
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மல்லி தூள் - 1 தேக்கரண்டி
சன்னமாக பொடிக்கப்பட்ட மிளகு - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
உணவை அலங்கரிக்க சிறிது  கொத்தமல்லி

செய்முறை :

1) ஒரு நான்ஸ்டிக் வாணலியில் 2-3 தேக்கரண்டி எண்ணையை ஊற்றி, அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு, பொன் நிறமாகும் வரை வறுக்கவும்.

2) பின்பு அத்துடன் இஞ்சி பூண்டு விழுதை கலந்து நன்கு வதக்கவும்.

3) அதன் பச்சை வாடை நீங்கிய பின், காளான் மற்றும் குடமிளகாய் சேர்க்கவும்.

4) இந்த கலவை நன்கு வதங்கிய பின், உப்பு,மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் மல்லி தூளை சேர்க்கவும்.

5) பின்பு ,கை அளவு தண்ணீரை தெளித்து, பாத்திரத்தை மூடிவிட்டு 5 நிமிடங்கள் மெல்லிய தீயில் சமைக்கவும்.

6) இப்போது, மூடியை திறந்து, தண்ணீர் முழுவதும் வற்றும் வரை சமைக்கவும்.

7) இதனுடன், மிளகு தூளை சேர்த்து, சிறிது சிறிதாக மீதமுள்ள எண்ணையை ஊற்றி மெல்லிய தீயில் நன்கு வறுக்கவும்.

8) பொன் நிறமாக வறுபட்டவுடன், இதை கொத்தமல்லி தூவி அலங்கரிக்க பட்ட சாதத்துடன் சூடாக பரிமாறவும்.


Monday, May 30, 2011

அவியல்


அவியல்

அவியல் என்பது கேரள கரையோரம் பிறந்த ஆற்புதமான ஒரு துணைக்கறியாகும். எல்லா காய்கறிகளையும் மோரில் சமைக்கும் வித்தியாசமான இதன் செய்முறையால், அடையுடன் அருமையாக ருசிக்கிறது. மேலும் சாம்பார் சாதம், குழம்பு சாதத்துடனும் உண்ணலாம்.



தேவையான பொருள்கள் :

அனைத்து காய்கறிகளின் கலவை - 2 கப் ; 2 இன்ச் நீள விரல்களாக நறுக்கப்பட்டது.

( கேரட், உருளை, சக்கரை வள்ளிக்கிழங்கு, முருங்கை, பூசணி, புடலங்காய், முள்ளங்கி, வாழைக்காய், காராமணி காய், கொத்தவரங்காய், அவரைக்காய், கத்திரிக்காய், கருணைக் கிழங்கு ஆகிய காய்களை உபயோகிக்கலாம். விலக்க வேண்டியவைகள் வெண்டைக்காய், பாகற்காய் மற்றும் சேப்பங்கிழங்கு )

சின்ன வெங்காயம் - 4 ; உரித்தது
துருவிய தேங்காய் - 1/2 கப்
சீரகம் - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 4 
பச்சரிசி - 1 மேஜைக் கரண்டி ; 2-3 மணி நேரம் நீரில் ஊற வைத்தது
கெட்டி தயிர் - 1/2 கப் ; கடைந்தது
தேங்காய் எண்ணெய் - 3 மேஜைக் கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
உப்பு - தேவைக்கேற்ப

சமைக்கும் முறை :

1) ஒரு பாத்திரத்தில் நறுக்கிய கறிகாய்களை வைத்து 1/2 கப் நீர் ஊற்றி மூடிவைத்து வேகவிடவும்

2) காய்கள் 3/4 பதம் வெந்ததும் இறக்கி விடவும். மசியும் அளவுக்கு வேக வேண்டாம்.

3) ஒரு மிக்சியில் சீரகம், பச்சை மிளகாயை கொரகொரப்பாக அரைக்கவும்.

4) பிறகு, அதனுடன் துருவிய தேங்காய், ஊற வைத்த அரிசி சேர்த்து சிறிது நீர் ஊற்றி அரைக்கவும்.

5) விழுதான பின், சின்ன வெங்காயம் சேர்த்து லேசாக 1 முறை சுற்றி எடுக்கவும்

6) வேக வைத்த காய் கலவையுடன் இந்த விழுதையும், உப்பையும் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை 7 நிமிடங்கள் சமைக்கவும்.

7) பிறகு, தயிர் சேர்த்து நன்கு கலக்கவும்.

8) தாளிப்பதற்கு, ஒரு கரண்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, கறிவேப்பிலை சேர்க்கவும்

9) இதை அவியலுடன் சேர்த்து, நன்கு கலந்து விட்டு, 5 நிமிடம் சமைத்து பரிமாறவும்.


 

வாசித்தவர்கள்

இன்று ...

உங்கள் ஆதரவால் ...!

tamil blogs traffic ranking