Social Icons

.

Saturday, May 28, 2011

அடை



அடை

முழுக்க முழுக்க புரதசத்து நிறைந்த அடை பள்ளி உணவாக மற்றும் முழுமையான ஆரோக்கியம் நிறைந்த உணவுப்பொருளாக கருதப்படுகின்றது.

இதனுடன் அருமையான சேர்வையாக விளங்குவது வெண்ணை, வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை. மலபாரின் பிரபல உணவாக எண்ணப்படும் அவியல் அடைக்கு தோதான ஒன்றாகும். மற்றபடி, கார சட்னி, புதினா சட்னி யுடனும் அடையை சுவைக்கலாம்.





செய்பொருள்கள் - ()

கடலை பருப்பு  - 1 கோப்பை
துவரம் பருப்பு  - அரை கோப்பை
உளுத்தம் பருப்பு - கால் கோப்பை
பச்சரிசி - அரை கோப்பை
புழுங்கல் அரிசி - அரை கோப்பை

செய்பொருள்கள் - ()

இஞ்சி  - அரை துண்டு
காய்ந்த மிளகாய்  -  5 () 6
உப்பு - சுவைக்கேற்ப்ப

செய்பொருள்கள் - ()

துருவிய தேங்காய்  - அரை கோப்பை
நன்கு பொடியாக்கிய கொத்தமல்லி - கை அளவு
நன்கு மசித்த கறிவேப்பிலை  - 1 கொத்து
பெருங்காய பொடி - 1 சிட்டிகை
வறுப்பதற்கு சிறிது எண்ணெய்

செய்முறை :

அடைமாவு செய்ய :

1) செய்பொருள்கள் () வில் குறிப்பிடபட்டுள்ளபடி எல்லா தானியங்களையும் ஒரு கிண்ணத்தில் எடுத்து கொண்டு நன்கு கழுவி 3 () 4 மணி நேரம் ஊற வைக்கவும்.

2)  இவைகள் ஊறிய பின்பு செய்பொருள்கள் () வில் கூறப்பட்டுள்ள பொருள்களை மிக்சியில் இட்டு மணல் பதத்தில் அரைத்துக்கொள்ளவும். ஒரிரண்டு முறை அரைத்தல் போதுமானது.

3) ஊறிய தானியங்களிலிருந்து நீரை வடித்து விட்டு மிக்சியில் அரைத்த பொருள்களுடன் சேர்த்துவிடவும்.

4) சிறிது தண்ணீர் கலந்து மிக்சியில் மணல் பதத்திற்கு அரைத்து அடை மாவாக்கவும்.இந்த பதத்தில் மாவு இருக்கும்பட்சத்தில் அடை மிகவும் ருசிகரமாக அமையும். நன்கு அரைத்த மாவு தடியான தோசை உண்ணும் உணர்வு தந்தாலும் சிறார்களுக்கு பிடித்தமானதாகவும் இருக்கும்.

5) இப்போது மாவை ஒரு குவளையில் எடுத்துக்கொண்டு அதில் துருவிய தேங்காய்,பெருங்காயம், கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலையை சேர்க்கவும்.

6) அகப்பையால் மாவை நன்கு கிளறிவிட்டு 30 நிமிடங்களுக்கு புறம் வைக்கவும்.

அடை செய்யும் செய்முறை :

7)  தோசைகல்லை மிதமான சூட்டில் அடுப்பில் வைக்கவும்.

8)  சிறிய அளவு எண்ணையை கல்லில் ஊற்றி அதை கல் முழுவதும் பரவும்படி தேய்த்து விட்டு ஒரு காகித துண்டால் துடைத்து எடுக்கவும்.

9) கரண்டியில் மாவு எடுத்து கல்லின் நடுவில் ஊற்றி அதை கரண்டியால் வெளி வட்டமாக மெலிதாகவும் சீராகவும் பரப்பி விடவும்.

10) லேசாக அதன் மீது எண்ணையை தூவி விட்டு சில நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.

11) ஒரு பக்கம் வெந்த உடன் அடையை திருப்பி போட்டு அதை பொன் நிறமாக வேக வைத்து , எடுத்து சூடாக உடனே பரிமாறவும்.


No comments:

Post a Comment

 

வாசித்தவர்கள்

இன்று ...

உங்கள் ஆதரவால் ...!

tamil blogs traffic ranking