Social Icons

.

Friday, May 27, 2011

கடலை கத்திரி குழம்பு


கடலை கத்திரி குழம்பு

நாக்கில் எச்சில் ஊறவைக்கவல்ல சுவை மிகுந்த கடலை கத்திரி குழம்பு, புளி சாறை சேர்த்து செய்யப்படுவதாகும். இந்த குழம்பு, காய்கறி, அப்பளமுடன் சைவ மதிய உணவில் அருமையான சுவை சேர்க்ககூடியது.


Channa Baingan.JPG



செய்பொருள்கள்  : 
குழம்பு செய்வதற்கு :

கொண்டை கடலை - 1 கோப்பை
கத்திரிக்காய்  - 1 கோப்பை ; 2 இஞ்ச் துண்டுகளாக நறுக்கபட்டது
சமையல் எண்ணெய்  - 3 தேக்கரண்டி
பெரிய வெங்காயம்  - அரை ; நறுக்கியது
கடுகு - கால் தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - கால் தேக்கரண்டி
கெட்டியான புளி பசை - கால் கோப்பை
மஞ்சள் பொடி - கால் தேக்கரண்டி
மிளகாய் பொடி - ஒன்றறை தேக்கரண்டி
மல்லி பொடி - 2 தேக்கரண்டி
உப்பு  - சுவைக்கேற்ப்ப
கறிவேப்பிலை - 1 கொப்பு
கொத்தமல்லிகை அளவு

தாளிப்பதற்கான பொருள்கள்  :

சமையல் எண்ணெய் - 3 தேக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - கால் தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
உறித்த சிறு வெங்காயம் - 6
கறிவேப்பிலை - 1 கொப்பு

அரைத்து பசை ஆக்குவதற்கான பொருள்கள்  :

துருவிய தேங்காய் - அரை கோப்பை
பெரிய வெங்காயம்  - அரை பகுதி ; சதுரமாக வெட்டப்பட்டது

சமையல் செய்முறை :

1)  கொண்டை கடலையை வெதுவெதுப்பான நீரில் ஒரு இரவு முழுதும் அல்லது குறைந்தபட்சம் 8 மணி நேரம் ஊற வைக்கவும்.

2)  மறு நாள் காலை அதில் சிறிது உப்பு இட்டு குக்கரில் வைத்து கடலை மென்மையாகும் வரை வேக வைக்கவும். வேக வைத்த வடி நீரை வீணாக்காமல் வைத்திருக்கவும். இந்த நீரை கடலை வடிநீர் என்று குறிப்பிடுவோம்.

3)  தாளிப்பது : ஒரு சிறிய வாணலியில் எண்ணெய் ஊற்றி மேற்கூறபட்டுள்ள  பொருள்களை அதே வரிசையில் வாணலியில் போட்டு , வெங்காயம் பொன் நிறமாக மாறி காற்றில் அதன் மணம் வந்த உடன் அடுப்பை அணைத்துவிட்டு சிறிது நேரம் ஆற விடவும்.

4)  இப்போது மிக்ஸியில் துருவிய தேங்காயை போட்டு பசை ஆக்கி கொள்ளுங்கள். அதனுடன் பெரிய வெங்காயம் சேர்த்து மீண்டும் ஒரு முறை மிக்ஸியில் அரைத்து கொள்ளுங்கள். இந்த கலவையில் தாளித்த பொருள்களை சேர்த்து இன்னொரு முறை மிக்ஸியில் லேசாக அரைத்து கொள்ளுங்கள் (அதிகமாக அரைத்து விடாதீர்கள், பிறகு, கலவை கசப்பாகிவிடக்கூடும்).

5)  குழம்பு செய்வதற்கு, ஒரு இலுப்பசட்டியில் எண்ணெய்யை சுட வைத்து, கடுகு மற்றும் உளுந்து சேர்த்து தாளித்து கொள்ளுங்கள்.

6)  கடுகு வெடித்தவுடன், அதனுடன் நறுக்கிய வெங்காயமும்,கறிவேப்பிலயும் சேர்த்துவிடவும்.

7)  வெங்காயம் பொன் நிறமாக வறுபட்ட பின், கத்திரிக்காயை சேர்த்துவிடுங்கள்.

8)  இவைகளை நன்கு வதக்கிய பின், மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, மல்லி பொடி மற்றும் உப்பை சேர்த்து விடுங்கள்.

9)  மீண்டும் நன்கு வதக்கி, ஒரு மூடிய பாத்திரத்தில், மெல்லிய ஜ்வாலயில்,5 நிமிடங்கள் சமையுங்கள்.

10) இப்போது ஏற்கெனவெ செய்து வைத்த பசையை சேர்த்து,அதனுடன் 1 கோப்பை "கடலை வடிநீரை" ஊற்றி மீண்டும் 5 நிமிடங்கள் சமைக்கவும்.

11) புளிப்பசையை இதனுடன் சேர்த்து , எண்ணெய் மேலே மிதக்கும் வரை சிறிது நேரம் சமைக்கவும்.

12) இப்போது கடலையை கலந்து , இன்னும் 3 நிமிடங்கள் சமைக்கவும்.

13) பின்பு, கொத்தமல்லியை மேலே தூவி அலங்கரித்து விட்டு , அழகாக பரிமாறுங்கள்.

No comments:

Post a Comment

 

வாசித்தவர்கள்

இன்று ...

உங்கள் ஆதரவால் ...!

tamil blogs traffic ranking