Social Icons

.

Thursday, May 26, 2011

கொண்டை கடலை வறுவல்




கொண்டை கடலை வறுவல்

மிகவும் ருசியான சமையல்முறை மற்றும் விளக்கம் மூலமாக நீங்கள் இதை ஆரம்ப உணவாக அல்லது சாம்பார், ரஸம் மற்றும் தயிர் சாதமுடன் ருசிக்கலாம்.






தேவையான பொருள்கள் :

கொண்டை கடலை - அறை கிண்ணம்
சமையல் எண்ணை  - கால் கிண்ணம்
கடுகு - கால் தேக்கரண்டி
கிராம்பு - இரண்டு
பட்டை  - 1 இன்ச்
இஞ்சி - 1 இன்ச் துண்டு
பூண்டு - 4 பல்
கறிவேப்பிலை - 1 கொத்து
மஞ்சள் பொடி  - கால் தேக்கரண்டி
மிளகாய் பொடி - ஒரு தேக்கரண்டி
மல்லி பொடி - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

1) கொண்டை கடலையை இரவு முழுதும் ஊறவைத்து, காலையில் அதை உப்புடன் சேர்த்து கடலை வேகும் வரை கொதிக்க வைக்கவும். ஊட்டசத்து நிறைந்ததால் ஊறவைத்த நீரை வடிக்காமல் தனியாக ஒரு பாத்திரதில் வைத்திருப்பது நல்லது.

2) கிராம்பு , பட்டை , இஞ்சி , பூண்டு ஆகியவற்றை அறைத்து பசை ஆக்கி கொள்ளவும்.

3) வாணலியில் 3 தேக்கரண்டி எண்ணையை ஊற்றி ,அதில் கடுகை சேர்க்கவும்.

4) கடுகு வெடிக்கும் போது, அதில் கிராம்பு பசையை சேர்த்து வறுக்கவும்.

5) பிறகு அதில் கறிவேப்பிலையை சேர்த்து வறுத்து, வேகவைத்த கொண்டை கடலையை சேர்க்கவும்.

6) இவை நன்கு கலந்த பிறகு,மஞ்சள் பொடி ,மிளகாய் பொடி மற்றும் மல்லி பொடியை தூவி, சிறிய அளவு உப்பை சேர்க்கவும்.

7) கடலையை கொதிக்க வைத்த வடி நீரை அறை கிண்ணம் வாணலியில் ஊற்றி, மூடியால் மூடிவிட்டு அடுப்பை மெல்லிய சுடரில் வைத்து 5 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.

8) பிறகு,மூடியை திறந்து நீர் காயும் வரை சமைக்கவும், வறுவலாக ஆவதற்க்கு, சிறிது சிறிதாக எண்ணையை ஊற்றவும்.

9) கடலை பொன் நிறமாக மாறும் வறை வறுத்து, பிறகு சூடாக பறிமாறவும்.

துணை செய்தி :

இந்த செய்முறையில் வெள்ளை கடலை பொன் நிறமாக காணும்போது அருந்தும் ஆவலை மிகவும் தூண்டும். கறுப்பு கடலையோ, ருசியானதும் ஊட்டசத்து நிறைந்ததும் ஆகும். எனவே, இரண்டையும் சமைத்து பார்க்கும் படி நான் பரிந்துறைக்கிறேன்.


No comments:

Post a Comment

 

வாசித்தவர்கள்

இன்று ...

உங்கள் ஆதரவால் ...!

tamil blogs traffic ranking