Social Icons

.

Thursday, May 26, 2011

செல்லத் தோழியே....











செல்லத் தோழியே....
உன்னை எனக்கு மிகவும் பிடிக்கும்

உன் அறிவு பிடிக்கும்
உன் அன்பு பிடிக்கும்
உன் அழகு மிக பிடிக்கும் ...

உன் சினம் பிடிக்கும்
உன் குணம் பிடிக்கும்
உன் மனம் மிக பிடிக்கும் ...

உன் விளையாட்டு பிடிக்கும்
உன் பாராட்டு பிடிக்கும்
உன் பாட்டு மிக பிடிக்கும் ...

உன் திகைப்பு பிடிக்கும்
உன் சிறப்பு பிடிக்கும்
உன் சிரிப்பு மிக பிடிக்கும் ...

உன் சிந்தை பிடிக்கும்
உன் பேச்சு பிடிக்கும்
உன் தமிழ் மிக பிடிக்கும் ...

உன் வண்ணம் பிடிக்கும்
உன் செல்லம் பிடிக்கும்
உன் உள்ளம் மிக பிடிக்கும் ...

உன் உண்மை பிடிக்கும்
உன் மென்மை பிடிக்கும்
உன் பெண்மை மிக பிடிக்கும் ...

மொத்ததில் உன்னை எனக்கு மிகவும் பிடிக்கிறது ...
என் இதயம் உன் பெயரைச் சொல்லி சொல்லி துடிக்கிறது !!!






No comments:

Post a Comment

 

வாசித்தவர்கள்

187433

இன்று ...

உங்கள் ஆதரவால் ...!

tamil blogs traffic ranking