Social Icons

.

Saturday, May 28, 2011

ப்ரெட் உப்புமா



ப்ரெட் உப்புமா





செய்பொருள்கள் :

ப்ரெட் துண்டுகள் - 8 () 9
பெரிய வெங்காயம்  - 2
பச்சை மிளகாய்  - 2
இஞ்சி - 1 இன்ச் அளவு
சமையல் எண்ணெய்  - 4 தேக்கரண்டி
கடுகு  - கால் தேக்கரண்டி
மஞ்சள் பொடி - கால் தேக்கரன்டி
பெருங்காயம்  - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
உப்பு - சுவைக்கேற்ப்ப
கொத்தமல்லி - உணவு அலங்கரிப்புகாக


செய்முறை  :

1)  சுமாரான பதத்திற்கு சிறிய துண்டுகளாக ப்ரெட்டை உதிர்த்து கொள்ளவும்

2)  வெங்காயம்,பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியை பொடிசாக நறுக்கி கொள்ளவும்

3)  வாணலியில் எண்ணெய்யை சுட வைத்து ,சிறிது கடுகு போடவும்.

4)  கடுகு வெடித்த பின் அதில் கறிவேப்பிலையுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியை சேர்க்கவும்.

5)  இந்த கலவை பொன் நிறமாக மாறிய பின்பு அதோடு மஞ்சள் பொடி மற்றும் பெருங்காயம் சேர்க்கவும்.

6)  1 நிமிடத்திற்கு வறுத்தப்பின் தேவைக்கேற்ப்ப உப்பை சேர்க்கவும்.

7)  மீண்டும் 1 நிமிடத்திற்கு வறுத்துவிட்டு ,பிறகு ப்ரெட் துண்டுகளை சேர்க்கவும்.

8)  2 நிமிடங்களுக்கு நன்கு கலக்கி சிறிது நீர் தெளித்து ஒரு மூடியால் மூடி வைக்கவும்.

9)  மெல்லிய ஜ்வாலையில் 2 நிமிடங்களுக்கு பாத்திரத்தை மூடிவைத்து சுட வைக்கவும்

10)  நன்கு கலக்கிய பின் மேலோட்டமாக கொத்தமல்லியை தூவி விடவும். தேவை என்றால் துருவிய தேங்காயை சேர்த்து தூவவும்.

11)  5 நிமிடங்களுக்கு மூடியபடி வைத்து விட்டு பின்பு சூடாக பரிமாறவும்.


No comments:

Post a Comment

 

வாசித்தவர்கள்

இன்று ...

உங்கள் ஆதரவால் ...!

tamil blogs traffic ranking