Social Icons

.

Friday, May 27, 2011

நெய்ச்சோறு




நெய்ச்சோறு

சுவையான, எளிமையான முறையில் மசாலா மற்றும் சிறிய அளவு நெய் கொண்டு செய்யப்படும் இது, சைவக்குழம்பு, கோழி மற்றும் இரால் குழம்புடன் செவ்வனே சேரும்.







செய்பொருள்கள் :

1 கோப்பை - தரமான பச்சரிசி
3 கோப்பை - தண்ணீர்
1 வெங்காயம்  - மெலிதாக வெட்டப்பட்டு
2 பச்சை மிளகாய் - பாதியாக வெட்டப்பட்டு
2 கிரம்புகள்
சிறிது சோம்பு
1 பிரியாணி இலை
1 ஏலக்காய்
பட்டை  - 1 இஞ்ச் அளவு
1 தேக்கரண்டி      - நெய்
சுவைக்கேற்ப்ப     - உப்பு

செய்முறை :

1.  அரிசியை நன்றாக கழுவி, தண்ணீரில் 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

2.  ஒரு குக்கரில் நெய்யை சுட வைக்கவும்.

3.  அத்துடன், கிராம்பு, பட்டை, சோம்பு, பிரியாணி இலை மற்றும் ஏலக்காயை சேர்க்கவும்.

4.  சில நொடிகள் வறுத்துவிட்டு, வெங்கயமும் பச்சை மிளகாயும் சேர்க்கவும்.

5.  வெங்காயம் பொன் நிறமாக மாறும் வரை வறுக்கவும்.

6.  இப்போது , இள வெப்பத்தில் அடுப்பை வைத்து,அரிசியிலிருந்து நீரை வடித்துவிட்டு, நெய்யுடன் சேர்த்து வறுக்கவும். அரிசி நன்கு காய்ந்து, பளபளப்பாக மாறும் வரை வறுக்கவும்.

7.  3 கோப்பைகள் வெந்நீரை ஊற்றி, அது கொதிநிலையை அடைந்தவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து, மூடியால் மூடி விட்டு சமைக்கவும்.


8.  3 விசில்கள் வரவிட்டு, அடுப்பின் ஜ்வாலையை குறைத்து மீண்டும் 1 விசில் வரும்வரை () அதிகபட்சம் 5 நிமிடங்கள் சமைக்கவும்.

9.  15 நிமிடங்கள் ஆறவைத்துவிட்டு, சுவையான வெஞ்சனத்துடன் பரிமாறவும்.


விருப்பத்திற்கேற்ப அலங்கரிக்க :

நெய்யை சுடவைத்து, அதனுடன் முந்திரிபருப்பு மற்றும் திராட்சை கலந்து வறுத்து, பிறகு இறக்கி வைக்கவும்.

வெங்காயத்தை நன்கு எண்ணெயுடன் பொன் நிறமாக வறுத்துவிட்டு, இறக்கி வைத்துகொள்ளவும்.

நெய்ச்சோறு பரிமாறும் முன்பு, இவைகளை மேலோட்டமாக சேர்த்து விட்டு பரிமாறினால், மேலும் சுவை மிகுந்து அமையும்.


No comments:

Post a Comment

 

வாசித்தவர்கள்

இன்று ...

உங்கள் ஆதரவால் ...!

tamil blogs traffic ranking