Social Icons

.

Friday, May 27, 2011

பப்பாளி முகப்பூச்சுபப்பாளி முகப்பூச்சு

பப்பாளி ஒரு சத்து பழமாக கருதப்படுகிறது. இது உண்பதற்கு சுவையானது மட்டுமில்லாமல், மிகுந்த சத்தும், மருத்துவ குணமும் நிறைந்த பழம்.இதை பழமாகவோ, சாறாகவோ, அல்லது மில்க் ஷேக்காகவோ அருந்தலாம். இதில் இயற்க்கையான நார்சத்து, கேலோடீன், விடமின் -C மற்றும் கனிமச்சத்துக்கள் மிகுந்து காணப்படுகின்றது. பப்பாளியில் அர்ஜினைன், கார்பைன் போன்ற நொதிகளும் (என்சைம்ஸ்) அடங்கியுள்ளது. அர்ஜினைனில் ஆண்மை வளர்ச்சிக்கு உதவும் சத்துக்களும், கார்பைனில் இதய ஆரோக்கியத்திற்கான சத்துகளும் இருப்பதாக நிரூபிக்கபட்டுள்ளது.


papaya.jpgசரும மேன்மையில் பப்பாளியின் பங்கு :

பப்பாளியை பயன்படுத்தி முகப்பூச்சு ( ஃபேஸ் பேக் ) செய்யலாம். பல நிறுவனங்களின் சரும பாதுகாப்பு பொருள்களை பப்பாளியின் இயற்கை குணத்தை சேர்த்தே தான் தயாரிக்கிறார்கள். முகத்தை வெண்மையாக வைத்துகொள்ள உதவும் எல்லா க்ரீம் மற்றும் லோஷன்கள் பப்பாளியை மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்படுகின்றன. முகப்பூச்சாக பூசிகொள்ளும் போது முகத்தின் வியர்வை த்வாரங்கள் திறக்க வல்ல பப்பாளி, முகப்பரு நீங்க வெகுவாக பயன்படுத்த படுகின்றது.

"பப்பாய்ன்" என்கிற தாதுப்பொருள் பப்பாளியில் இருப்பதால், பல முண்ணணி நிறுவனங்கள் இதை தங்கள் தயாரிப்பில் சேர்த்து கொள்கின்றன. "பப்பாய்ன்"இல் சரும புத்துணர்ச்சி மற்றும் ஸெல் வளர்ச்சிக்கு உதவும் இயற்கை நொதிகள் (என்சைம்ஸ்) காணப்படுகின்றது. இது பழைய சரும மிச்சங்களை உதிர்த்து, புதிய சரும ஸெல்கள் உருவாக உதவுகிறது. இதன் மீளும் திறன் சருமத்தை மிருதுவாக்குகிறது. பப்பாளியால் முழுமையான பலனை பெற, சரும அழுக்குகளை நீக்க பப்பாளி சோப்பு மற்றும் சருமம் ஈரப்பதம் பெற பப்பாளி லோஷன்களையே பயன்படுத்தவும்.


papaya-juice.jpgபப்பாளியை உட்கொண்டால் சருமத்தில் வெண்மையும், முகத்தெளிவும் பெறலாம். சருமத்தை பாதுகாக்க மற்றும் அதன் ஈரப்பதம் பேண உதவும் விட்டமின் , , சி -ம், "ஆன்ட்டி-ஆக்ஸிடென்ட்"-ம் பப்பாளியில் மிகுந்து நிறைந்துள்ளது. இதன் சத்துக்கள் தோல் காயங்களுக்கும் உதவும் குணாதிசயம் பெற்றது.

தெற்கு அமெரிக்கா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில், பப்பாளியை பழமாக மட்டுமில்லாமல், காயாகவும் கூட்டு மற்றும் சூப்பில் கலந்து உண்ணும் வழக்கம் உள்ளது.இதன் இலைகளும் சில உணவு பொருள்களில் பயன்படுத்தபடுகின்றது. நன்கு பழுத்த பப்பாளியால் மில்க் ஷேக், பழசாறு செய்து அருந்தலாம். உணவிற்கு பின் பழமாக அப்படியேவும் உண்ணலாம்.

பப்பாளியில் உள்ள சரும பாதுகாப்புக்கு உதவும் இயற்கை நற்குணங்கள் அழகூட்டலுக்கு துணையாக இருப்பதால் இதை ஒரு வரபிரசாதமாக கருதலாம்.


facial.jpg


சரும வெண்மைக்கு உதவும் பப்பாளி

"பப்பைன்" என்கிற நொதிபொருள் (என்ஸைம்) இருப்பதால் பப்பாளி முக பளபளப்பு மற்றும் சரும வெண்மைக்கு மட்டும் உதவாமல், முகத்தில் காணப்படும் சுருக்கங்கள், மற்றும் முதுமைக்குறிகளையும் நீக்குகிறது. அழுகிய சரும மிச்சங்களை நீக்கி புதிய அணுக்கள் உருவாகவும் இது மிகவும் உதவுகிறது.

பப்பாளியின் மூலம் முகப்பூச்சு (ஃபேஸ்பேக்) நீங்களே எளிமையாக தயாரிக்கலாம்.எந்த வித உபரி சிறப்பு பொருள்களும் இல்லாமல் மிகவும் மலிவாக ஆனால் அதன் எல்லா பயன்களுடன் பெறும்வகையில் நீங்கள் இதை உருவாக்கலாம். நீங்களே தயாரிக்கும் பட்சத்தில் இதில் கலக்கப்படும் எல்லா உட்பொருட்களின் கட்டுப்பாடும் உங்கள் வசமே இருக்கும் என்பது இதன் சிறப்பு. பலவித ரசாயன பொருள்களின் சேர்க்கையும் இவ்விதம் தவிர்க்க்லாம்.

செய்முறை

1) நன்கு பழுத்த ஆனால் மிக மிருதுவாக இல்லாத, எவ்வித தழும்புகளும் இல்லாத பழமாக தேர்ந்தெடுங்கள். அதன் தோலை உறித்து, கொட்டைகளை நீக்கி, சிறிய கத்தியால் சில பகுதிகளாக வெட்டிகொள்ளுங்கள்.

2) துண்டுகளை மிக்ஸியில் போட்டு, கெட்டியான கூழாக அரைத்துக்கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதற்கு 30 நொடிகள் ஆகலாம்.

3)   உங்கள் முகத்தை நன்கு கழுவிக்கொண்டு , உலர வையுங்கள். உடலில் நீங்கள் பொலிவு பெற விரும்பும் மற்ற பாகங்களையும் இவ்வாறு கழுவி கொண்டு, பப்பாளி கூழை முகம் மற்றும் விரும்பும் பாகங்களில் பூசிக்கொள்ளுங்கள். கண்கள் அருகில் உள்ள பகுதிகளை தவிர்க்கவும். 15 நிமிடங்கள் இந்த பூச்சுடன் இருங்கள்.

4) இனி முகத்தை வெதுவெதுப்பான வெந்நீரால் கழுவி, ஒரு சுத்தமான துண்டால் மெதுவாக ஒற்றி எடுங்கள். பின்பு உங்கள் வழக்கமான "மாய்ஸ்ச்சர் க்ரீம்" பயன் படுத்துங்கள்.

5)  இந்த முறையை வாரத்திற்கு 3 நாட்கள் பின்பற்றி வாருங்கள். 3 வாரங்களுக்கு பிறகு நிச்சயமாக நேர்மறை பயன்களை காணலாம்.


Facial-Papaya-Peel.jpg


சரும வெண்மைக்கும்முதுமைக்குறிகள் நீங்கவும் உதவும் பப்பாளி முகப்பூச்சு தயாரிக்கும் முறை

இயற்க்கையாக பப்பாளியில் சரும பாதுகாப்புக்கு உதவும் பொருள்கள் உள்ளதால், எல்லா சரும பாதுகாப்பு தயாரிப்புகளும் இதை உட்பொருளாக கொண்டு தயாரிக்கப்படுகிறது. சோப்பு, லோஷன், க்ரீம், மற்றும் பல பொருள்களில் இதன் சேர்க்கையை காணலாம்.

அசல் பழகூழ் கொண்டு செய்யப்பட்டு, எந்த வித சருமத்திற்கும் பொருந்திபோகும் பப்பாளி முகப்பசை தயாரிக்கும் முறையை உங்களுடன் இப்போது பகிர்ந்துகொள்கிறேன். எந்த வித வயதுக்கும் பொருந்தும் இந்த பசை மந்தமான,சு ருக்கங்கள் மிகுந்த, மாநிற சருமதிற்கு மிகவும் பயனுள்ளதாக விளங்கும்.

சிறப்பு பலன்கள்

சரும வெண்மை :

"பப்பாய்ன்" என்ற நொதிபொருள் "என்ஸைம்" கொண்டதால், பப்பாளி சரும வெண்மைக்கு பயன்படுகிறது.

முதுமைகுறிகள் நீங்க :

விட்டமின் சி மற்றும் யுடன், பீட்டா-காரோட்டீன் போன்ற 3 தாதுபொருள்கள் நிறைந்த பப்பாளி சருமத்தின் முதிர்ச்சி அறிகுறிகளை நீக்கி சருமத்தின் இளமையை பேணுகிறது.

கூடுதல் தகவல் :

கனியாத பப்பாளியின் கூழை முகத்தில் பூசிக்கொண்டால் முகப்பரு நீங்கி, முகத்தில் தோன்றும் கோடுகள் மற்றும் சுருக்கங்கள் மறையும்.


செய்முறை :

1) பப்பாளியை நன்கு கழுவி விட்டு, அதன் தோலை உறித்து, கொட்டைகளை நீக்கி கொள்ளுங்கள்.

2) ஒரு குவளையில் பப்பாளியை வைத்து முட்கரண்டியால் மசித்து கொள்ளுங்கள். அந்த மசியலில் 1 தேக்கரண்டி சுத்தமான இயற்கை தேனை கலந்து கொள்ளுங்கள்.

3) இதை நன்கு கழுவிய முகத்தில் கண்களை தவிர்த்து பூசிக்கொண்டு 15 நிமிடங்கள் வைத்திருங்கள்.

4) 15 நிமிடங்களுக்கு பிறகு, ஒரு சுத்தமான ஈர துண்டால் மெதுவாக துடைத்து எடுத்து, பின்பு வெதுவெதுப்பான வெந்நீரால் கழுவி கொள்ளுங்கள்.முகம் உலர்ந்த பின் அருமையான முகபொலிவை கண்டு மகிழுங்கள்.


papaya-mask-for-winters-oily-skin.jpg


No comments:

Post a Comment

 

வாசித்தவர்கள்

இன்று ...

உங்கள் ஆதரவால் ...!

tamil blogs traffic ranking